காம்பஸ் அடிப்படையிலான 7 இருக்கை காரின் பெயர் தகவல் வெளியாகியது... அட இதுதான் இந்த காரோட பெயரா?...

7 இருக்கைகள், பிரமாண்ட உருவம் என பல்வேறு சொகுசு வசதிகளுடன் டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு போட்டியளிக்கும் வகையில் விரைவில் அறிமுகமாக உள்ள புதுமுக காருக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

காம்பஸ் அடிப்படையிலான 7 இருக்கை காரின் பெயர் தகவல் வெளியாகியது... அட இதுதான் இந்த காரோட பெயரா?...

ஃபியட் க்ரிஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் (Fiat Chrysler Automobiles) நிறுவனத்தின் மற்றுமொரு அங்கமாக ஜீப் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனம் அதன் தயாரிப்புகளின் விலையைக் குறைத்து, இந்தியாவில் விற்பனையை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக குறிப்பிட்ட சில கார்களின் உற்பத்தி மற்றும் கட்டமைப்புகளை உள்ளூரிலேயே தொடங்கியிருக்கின்றது.

காம்பஸ் அடிப்படையிலான 7 இருக்கை காரின் பெயர் தகவல் வெளியாகியது... அட இதுதான் இந்த காரோட பெயரா?...

குறிப்பாக, கார் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் பெரும்பாலான பாகங்களை உள் நாட்டில் இருந்தே கொள்முதல் செய்ய தொடங்கியிருக்கின்றது. இதன் விளைவாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்த ரேங்லர் எஸ்யூவி கார் ரூ.10 வரை விலை குறைந்து கடந்த வாரம் விற்பனைக்கு அறிமுகமானது.

காம்பஸ் அடிப்படையிலான 7 இருக்கை காரின் பெயர் தகவல் வெளியாகியது... அட இதுதான் இந்த காரோட பெயரா?...

இதனைத் தொடர்ந்து, இன்னும் சில குறிப்பிட்ட மாடல் கார்களை இந்தியாவிலேயே வைத்து தயாரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதில் ஒன்று புதுமுக சப்காம்பேக்ட் கார். இக்காரை மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா, கியா சொனெட், டாடா நெக்ஸான் மற்றும் ஹூண்டாய் வென்யூ ஆகிய மாடல்களுக்கு போட்டியாக களமிறங்க இருக்கின்றது.

காம்பஸ் அடிப்படையிலான 7 இருக்கை காரின் பெயர் தகவல் வெளியாகியது... அட இதுதான் இந்த காரோட பெயரா?...

இந்த நிலையில் விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் காம்பஸ் மாடலிலான 7 இருக்கைகள் கொண்ட காருக்கான பெயரை வர்த்தக பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜீப் நிறுவனத்தின் மிகவும் புகழ்வாய்ந்த கார் மாடல்களில் காம்பஸ் எஸ்யூவி காரும் ஒன்று.

காம்பஸ் அடிப்படையிலான 7 இருக்கை காரின் பெயர் தகவல் வெளியாகியது... அட இதுதான் இந்த காரோட பெயரா?...

இந்த காரையே வாடிக்கையாளர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பைத் தொடர்ந்து 7 இருக்கைகள் கொண்ட வாகனமாக களமிறக்க அது முடிவு செய்துள்ளது. ஆனால், இந்த காருக்கு காம்பஸ் எனும் பெயரைப் பயன்படுத்தப் போவதில்லை என ஏற்கனவே நிறுவனம் திட்டவட்டமாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில், புதிய 7 இருக்கைக் கொண்ட காருக்கு பேட்ரியோட் எனும் பெயரை நிறுவனம் வர்த்தக பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கும் புகைப்படத்தை நீங்கள் கீழே காணலாம்.

காம்பஸ் அடிப்படையிலான 7 இருக்கை காரின் பெயர் தகவல் வெளியாகியது... அட இதுதான் இந்த காரோட பெயரா?...

முன்னதாக இக்கார் எச்6 எனும் குறிப்பெயரிலேயே அழைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையிலேயே இதன் பெயரை வெளியிட்டு, அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது ஜீப். பேட்ரியோட் எனும் பெயரில் ஏற்கனவே ஓர் எஸ்யூவி ரக ஜீப் விற்பனைச் செய்து வந்திருக்கின்றது. இக்காரை பிரத்யேகமாக இத்தாலி நாட்டில் மட்டுமே நிறுவனம் விற்பனையில் ஈடுபடுத்தியிருக்கின்றது.

காம்பஸ் அடிப்படையிலான 7 இருக்கை காரின் பெயர் தகவல் வெளியாகியது... அட இதுதான் இந்த காரோட பெயரா?...

2007 தொடங்கி 2017 வரையில் அக்கார் விற்பனையில் இருந்திருக்கின்றது. ஆனால், குறிப்பிட்ட சில காரணங்களுக்காக இதன் உற்பத்தி முடக்கப்பட்டது. இந்த நிலையிலேயே மறு ஜென்மம் பெற்று இக்கார் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்ககின்றது.

காம்பஸ் அடிப்படையிலான 7 இருக்கை காரின் பெயர் தகவல் வெளியாகியது... அட இதுதான் இந்த காரோட பெயரா?...

இந்த காரில் 7 இருக்கைகள் இடம் பெற்றிருந்தாலும் சொகுசு மற்றும் அதிக இட வசதிக்கு சற்றும் குறைச்சல் இருக்காது என ஜீப் கூறியிருக்கின்றது. இதனை இந்தாண்டின் இறுதிக்குள்ளாகவே விற்பனைக்கு அறிமுகம் செய்துவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் நிறுவனம் அவ்வப்போது இந்திய சாலையில் வைத்து இக்காரை பல பரீட்சையில் ஈடுபடுத்தி வருகின்றது.

காம்பஸ் அடிப்படையிலான 7 இருக்கை காரின் பெயர் தகவல் வெளியாகியது... அட இதுதான் இந்த காரோட பெயரா?...

சுமார் 30 லட்சம் ரூபாய் தொடங்கி 35 லட்ச ரூபாய் வரையிலான விலையில் இக்கார் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த காரை எம்ஜி குளோஸ்டர், டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு என்டீயோவர் போன்ற பிரீமியம் எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக ஜீப் இந்தியாவில் களமிறக்க இருக்கின்றது.

காம்பஸ் அடிப்படையிலான 7 இருக்கை காரின் பெயர் தகவல் வெளியாகியது... அட இதுதான் இந்த காரோட பெயரா?...

காம்பஸ் எஸ்யூவி காரில் இடம்பெற்றிருப்பதைப் போலவே 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்ஜினே இக்காரில் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 200 பிஎஸ் திறனை வெளியேற்றக்கூடியதாகும். இதில், 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் அனைத்து வீல் இயங்கும் திறன்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இதுபோன்ற எக்கசக்க அம்சங்களை இக்கார் பெற இருக்கின்ற காரணத்தினால் இதனை இந்திய சொகுசு கார் பிரியர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Most Read Articles

மேலும்... #ஜீப் #jeep
English summary
FCA Jeep Trademarked Patriot Name For Compass Based 7 Seater SUV?.. Here Is Full Details. Read In Tamil.
Story first published: Monday, March 22, 2021, 18:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X