முதல் முறையாக முக திரையை கிழித்தது ஜீப் நிறுவனத்தின் புதிய கார்... செம்ம ஸ்டைலா இருக்கு...

ஜீப் நிறுவனத்தின் புதுமுக தயாரிப்பு முதல் முறையாக தனது முகத் திரையைக் கிழித்து காட்சியளித்திருக்கின்றது. இக்கார் பற்றிய சிறப்பு தகவலைக் கீழே காணலாம்.

முதல் முறையாக முக திரையை கிழித்தது ஜீப் நிறுவனத்தின் புதிய கார்... செம்ம ஸ்டைலா இருக்கு...

ஃபியட் க்ரிஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் ஓர் அங்கமாக செயல்பட்டு வரும் ஜீப் நிறுவனம் அதன் கிராண்ட் செரோக்கீ மாடலில் எல் எனும் புதிய மாடலை அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த காரை இந்நிறுவனம் வெளியீடு செய்வது இதுவே முதல் முறையாகும். இக்காரை கிராண்ட் வேகோனீர் எனும் கான்செப்ட் மாடலைத் தழுவியே நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது.

முதல் முறையாக முக திரையை கிழித்தது ஜீப் நிறுவனத்தின் புதிய கார்... செம்ம ஸ்டைலா இருக்கு...

ஆகையால், வெளி மற்றும் உட்பக்க வோகோனீர் கான்செப்டை ஒத்ததாகக் காட்சியளிக்கின்றது. ஜீப் ஹெரிடேஜ்-இனை சிறப்பிக்கும் விதமாக இக்காரை தற்போது அறிமுகம் செய்திருப்பதாக ஜீப் நிறுவனத்தின் தலைவர் கிறிஸ்டியன் மியூனியர் கூறியிருக்கின்றார்.

முதல் முறையாக முக திரையை கிழித்தது ஜீப் நிறுவனத்தின் புதிய கார்... செம்ம ஸ்டைலா இருக்கு...

1992ம் ஆண்டுகளில் விற்பனைக்கு வந்த கார்களின் தோற்றத்தையும் ஜீப் கொடுத்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. இரு பாக்ஸ் வடிவில் காணப்படும் தோற்றமே இதற்கு முக்கிய சான்று. இதைத்தொடர்ந்தே கிராண்ட் வோகனீர் மாடலின் டிசைன் தாத்பரியங்களுக்கும் இக்காருக்கு பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆகையால், கவர்ச்சிக்கு சற்றும் குறைவின்றி இக்கார் காட்சியளிக்கின்றது.

முதல் முறையாக முக திரையை கிழித்தது ஜீப் நிறுவனத்தின் புதிய கார்... செம்ம ஸ்டைலா இருக்கு...

எல்இடி மின் விளக்குகளே இக்காரின் கவர்ச்சியான தோற்றத்திற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. இதுமட்டுமின்றி, கவர்ச்சியான தோற்றத்தை ஹைலைட் செய்து காட்டும் வகையில் இக்காரின் பம்பர் இருக்கின்றது. இதுவரை எந்தவொரு காரும் பெற்றிராத ஸ்டைலில் அது காட்சியளிக்கின்றது. குறிப்பாக, பம்பரின் முனைப் பகுதியில் இடம்பெற்றிருக்கும் ஏர் இன்டேக்கர்கள் வெற லெவல் லுக்கை காருக்கு வழங்குகின்றது.

முதல் முறையாக முக திரையை கிழித்தது ஜீப் நிறுவனத்தின் புதிய கார்... செம்ம ஸ்டைலா இருக்கு...

இதேபோன்று, காரின் பின் பகுதி மற்றும் பக்கவாட்டு பகுதிகளும் மிகவும் அட்டகசமான கண்கவர் தோற்றத்தைக் கொண்டிருக்கின்றன. இக்கார் உருவ அமைப்பில் மட்டுமின்றி தொழில்நுட்ப வசதியிலும் மிகவும் கவர்ச்சியானதாக காட்சியளிக்கின்றது. தொடுதிரை, பல்வேறு கன்ட்ரோல் பொத்தான்களைக் கொண்ட ஸ்டியரிங் வீல், யு கன்னெக்ட் 5 என பல்வேறு சிறப்பு வசதிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

முதல் முறையாக முக திரையை கிழித்தது ஜீப் நிறுவனத்தின் புதிய கார்... செம்ம ஸ்டைலா இருக்கு...

இதில், 10.1 இன்சிலும், 10.2 இன்சிலும் திரைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதில் இன்ஃபோடெயின்மென்ட் பயன்பாட்டிற்காகவும், மற்றொன்று காவ்ஜ் க்ளஸ்டர் பயன்பாட்டிற்காகவும் வழங்கப்பட்டிருக்கின்றன. இரண்டும் பன்முக தகவல்களைக் வழங்கக்கூடியவையாக இருக்கின்றன.

முதல் முறையாக முக திரையை கிழித்தது ஜீப் நிறுவனத்தின் புதிய கார்... செம்ம ஸ்டைலா இருக்கு...

இதேபோன்று எஞ்ஜின் தேர்விலும் பிரம்மிப்பை ஏற்படுத்தக் கூடிய காராகவே இது வரவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிராண்ட் செரோக்கீ எல் 3.6 லிட்டர் பெட்ரோல் வி6 மற்றும் 5.7 லிட்டர் ஹெமி வி8 ஆகிய இரு விதமான எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்கு வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

More from DriveSpark

Article Published On: Saturday, January 9, 2021, 18:33 [IST]
English summary
FCA Revealed 2021 Jeep Grand Cherokee L In US. Read In Tamil.
மேலும்... #ஜீப் #jeep
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+