அளவில் சிறியதா இருந்தாலும், நச்சுனு இருக்கு!! அபார்த் ஃபியாட் 695 எஸ்ஸஸ்ஸி ஸ்பெஷல் எடிசன் கார் வெளியீடு!

பழமையான ஃபியட் க்ரூப்பின் ரேசிங் கார் பிரிவான அபார்த், 695 எஸ்ஸஸ்ஸி என்ற பெயரில் புதிய ஸ்பெஷல் எடிசன் ஹேட்ச்பேக் காரை வெளியிட்டுள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.

அளவில் சிறியதா இருந்தாலும், நச்சுனு இருக்கு!! அபார்த் ஃபியாட் 695 எஸ்ஸஸ்ஸி ஸ்பெஷல் எடிசன் கார் வெளியீடு!

ஃபியாட் 500 வரிசையில் அதிவேகமான வேரியண்ட்டாக கொண்டுவரப்பட்டுள்ள இந்த ஸ்பெஷல் எடிசன், 1964ல் இதே பெயரில் தயாரிக்கப்பட்ட மாடலினால் கவரப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளதாக பொறியியலாளர்களும், வடிவமைப்பாளர்களும் தெரிவித்துள்ளனர்.

அளவில் சிறியதா இருந்தாலும், நச்சுனு இருக்கு!! அபார்த் ஃபியாட் 695 எஸ்ஸஸ்ஸி ஸ்பெஷல் எடிசன் கார் வெளியீடு!

அபார்த் 695 எஸ்ஸஸ்ஸி ஸ்பெஷல் எடிசன் கார்கள் வெறும் 1390 யூனிட்கள் மட்டுமே தயாரிக்கப்பட உள்ளன. இதில் 695 யூனிட்கள் ஸ்கார்பியன் கருப்பு நிறத்திலும், மீதி 695 யூனிட்கள் காம்போவோலோ க்ரே நிறத்திலும் வடிவமைக்கப்பட உள்ளன.

அளவில் சிறியதா இருந்தாலும், நச்சுனு இருக்கு!! அபார்த் ஃபியாட் 695 எஸ்ஸஸ்ஸி ஸ்பெஷல் எடிசன் கார் வெளியீடு!

கார் சேமிப்பாளர்களின் எடிசன் என அபார்த் பிராண்டால் அழைக்கப்படுகின்ற 695 எஸ்ஸஸ்ஸி கார், 1964ல் தயாரிக்கப்பட்ட மாடலை ஞாபகப்படுத்தும் விதமாக முன் & பின்பக்க ஸ்பாய்லர், கண்ணாடி மூடிகள் மற்றும் பக்கவாட்டு டிகால்களில் வெள்ளை நிறத்தை கொண்டுள்ளது.

அளவில் சிறியதா இருந்தாலும், நச்சுனு இருக்கு!! அபார்த் ஃபியாட் 695 எஸ்ஸஸ்ஸி ஸ்பெஷல் எடிசன் கார் வெளியீடு!

மேலும் இதன் 17 இன்ச் அலாய் சக்கரங்களிலும் வெள்ளை நிறத்தை பார்க்க முடிகிறது. ஆனால் சக்கரத்தின் மையத்தில் சிவப்பு நிறம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றாற்போல் சக்கரத்தில் ப்ரெம்போ ப்ரேக் காலிபர்கள் சிவப்பு நிறத்தில் பொருத்தப்பட்டுள்ளன.

அளவில் சிறியதா இருந்தாலும், நச்சுனு இருக்கு!! அபார்த் ஃபியாட் 695 எஸ்ஸஸ்ஸி ஸ்பெஷல் எடிசன் கார் வெளியீடு!

சக்கரங்களை ஈரப்படுத்த கோனி எஃப்.எஸ்.டி ஷாக் அப்சார்பர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பின்பக்கத்தில் ஸ்பாய்லர், 60 கோணம் வரையில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடியதாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் காற்று இயக்கவியல் பண்பு காரின் பின்பக்கத்தில் மேம்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அளவில் சிறியதா இருந்தாலும், நச்சுனு இருக்கு!! அபார்த் ஃபியாட் 695 எஸ்ஸஸ்ஸி ஸ்பெஷல் எடிசன் கார் வெளியீடு!

அதுமட்டுமின்றி அலுமினியத்திலான பொனெட், இந்த ஸ்பெஷல் எடிசன் காரில் பயன்படுத்தப்பட்டுள்ளதால் எடை கணிசமாக குறைந்துள்ளது. அதேநேரம் இரட்டை டைட்டானியம் அக்ராபோவிக் எக்ஸாஸ்ட் குழாய் பொருத்தப்பட்டுள்ளதினால், அபார்த் 595 காம்பெடிஷன் காரை காட்டிலும் இந்த ஸ்பெஷல் எடிசனின் எடை 10கிலோ வரையில் குறைந்துள்ளது.

அளவில் சிறியதா இருந்தாலும், நச்சுனு இருக்கு!! அபார்த் ஃபியாட் 695 எஸ்ஸஸ்ஸி ஸ்பெஷல் எடிசன் கார் வெளியீடு!

சிவப்பு நிற சீட் பெல்ட்கள், அல்காண்ட்ரா மற்றும் கார்பன் ஃபைபர் உள்ளீடுகள் & ஸ்பெஷல் எடிசன் முத்திரை உடன் 695 எஸ்ஸஸ்ஸி காரின் கேபின் வெளிபுறத்திற்கு ஏற்ற நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 1.4 லிட்டர், 4-சிலிண்டர், T-ஜெட் என்ஜினை இந்த லிமிடெட் எடிசன் காரில் அபார்த் நிறுவனம் பொருத்தியுள்ளது.

அளவில் சிறியதா இருந்தாலும், நச்சுனு இருக்கு!! அபார்த் ஃபியாட் 695 எஸ்ஸஸ்ஸி ஸ்பெஷல் எடிசன் கார் வெளியீடு!

அதிகப்பட்சமாக 178 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் மேனுவல் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 6.7 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய அபார்த் 695 எஸ்ஸஸ்ஸி காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 225கிமீ ஆகும்.

Most Read Articles

மேலும்... #ஃபியட் #fiat
English summary
Limited Edition Fiat Abarth 695 Esseesse Unveiled.
Story first published: Wednesday, July 7, 2021, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X