கருப்பு நிறத்தில் காரை வாங்குவதால் இவ்வளவு நன்மை இருக்கா!! அதேநேரம் இத்தனை பிரச்சனைகளும் உள்ளனவா?

நம்மில் பெரும்பாலானோர் கருப்பு நிறத்தில் புதிய வாகனங்களை வாங்கவே விரும்புகின்றனர். குறிப்பாக லக்சரி கார்களை கருப்பு நிறத்தில் வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகம். இங்கு, இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவிலும் இதே கதை தான்.

கருப்பு நிறத்தில் காரை வாங்குவதால் இவ்வளவு நன்மை இருக்கா!! அதேநேரம் இத்தனை பிரச்சனைகளும் உள்ளனவா?

இதனாலேயே பெரும்பான்மையான சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது கார்களுக்கு கருப்பு நிறத்தேர்வை கட்டாயமாக வழங்குகின்றன. கருப்பு நிறம் காரின் தோற்றத்திற்கு அவ்வளவாக செட் ஆகாவிடினும் க்ரே, அடர் நீலம் போன்ற கருப்பிற்கு ஓரளவிற்கு இணையான அடர் நிறங்களை தேர்வுகளாக வழங்க முயற்சிக்கின்றன.

கருப்பு நிறத்தில் காரை வாங்குவதால் இவ்வளவு நன்மை இருக்கா!! அதேநேரம் இத்தனை பிரச்சனைகளும் உள்ளனவா?

எந்தவொரு காரும் கருப்பு நிறத்தில் கூடுதல் பளபளப்பானதாக, கூடுதல் காஸ்ட்லீயானதாக காட்சியளிக்கும். இதுவே பலத்தரப்பட்ட வாடிக்கையாளர்களை கவர்ந்திழுப்பதற்கு காரணமாகும். கருப்பு நிறம் வெப்பத்தை மற்ற நிறங்களை காட்டிலும் அதிகம் ஈர்க்கும் என்பதெல்லாம் உண்மைதான். இருப்பினும் கருப்பு நிற பெயிண்ட்டால் சில நன்மைகளும் உள்ளன. அவை என்னென்ன என்பதை பற்றி தான் இந்த செய்தியில் விரிவாக பார்க்கவுள்ளோம்.

கருப்பு நிறத்தில் காரை வாங்குவதால் இவ்வளவு நன்மை இருக்கா!! அதேநேரம் இத்தனை பிரச்சனைகளும் உள்ளனவா?

அனைவரையும் கவரும் பண்பு

இதனை பற்றி இப்போதுதான் கூறினோம். மற்ற நிறங்களை காட்டிலும் கூடுதல் பளபளப்பையும், கூடுதல் ப்ரீமியம் தரத்திலான தோற்றத்தையும் வழங்குவதால், சாலையில் செல்வோரின் கவனம் கருப்பு நிற கார்களின் மீது தானாகவே திரும்புகின்றன.

கருப்பு நிறத்தில் காரை வாங்குவதால் இவ்வளவு நன்மை இருக்கா!! அதேநேரம் இத்தனை பிரச்சனைகளும் உள்ளனவா?

அதுமட்டுமில்லாமல் கருப்பு நிற பெயிண்ட் காரின் ஸ்டைலில் இருக்கும் குறைப்பாடுகளை மறைக்கக்கூடியதாக விளங்குகிறது. இதனாலேயே ஒரு சில கார்கள் (குறிப்பாக லக்சரி கார்கள்) மற்ற நிறங்களில் ஒரு மாதிரியாகவும், கருப்பு நிறத்தில் வேறு விதமாகவும் காட்சியளிக்கின்றன.

கருப்பு நிறத்தில் காரை வாங்குவதால் இவ்வளவு நன்மை இருக்கா!! அதேநேரம் இத்தனை பிரச்சனைகளும் உள்ளனவா?

ஸ்பெஷல் எடிசன்களின் சொத்து

மற்ற நிறங்களில் இருந்து, கருப்பு நிறத்தேர்விற்கான தேவை எப்போதும் அதிகமாகவே இருப்பதால், கார் தயாரிப்பு நிறுவனங்களும் கருப்பு நிறத்தை தனித்துவமான நிறங்களாகவே தங்களது வணிகத்திற்கு பார்க்கின்றன.

கருப்பு நிறத்தில் காரை வாங்குவதால் இவ்வளவு நன்மை இருக்கா!! அதேநேரம் இத்தனை பிரச்சனைகளும் உள்ளனவா?

இதன் விளைவாகவே விற்பனையில் இருக்கும் மாடல்களில் கொண்டுவரப்படும் பெரும்பான்மையான ஸ்பெஷல் எடிசன்கள் கருப்பு நிறத்தில் வழங்கப்படுகின்றன. நம் இந்திய சந்தையில் கூட பல முன்னணி நிறுவனங்களின் கார்களுக்கு டார்க், நைட் என்கிற பெயர்களில் கருப்பு நிறத்திலான ஸ்பெஷல் எடிசன்கள் உள்ளன.

கருப்பு நிறத்தில் காரை வாங்குவதால் இவ்வளவு நன்மை இருக்கா!! அதேநேரம் இத்தனை பிரச்சனைகளும் உள்ளனவா?

இந்திய சந்தையில் சமீபத்தில் Tata Motors அதன் பிரபலமான மாடல்களான Altroz, Harrier, Nexon & Nexon EV உள்ளிட்டவற்றின் டார்க் எடிசன்களை அறிமுகப்படுத்தியது. இவற்றை பற்றி ஏற்கனவே நமது செய்திதளத்தில் விரிவாக பதிவிட்டுள்ளோம். அவற்றை அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

கருப்பு நிறத்தில் காரை வாங்குவதால் இவ்வளவு நன்மை இருக்கா!! அதேநேரம் இத்தனை பிரச்சனைகளும் உள்ளனவா?

மறுவிற்பனையின்போது நன்மை

காரை கருப்பு நிறத்தில் வாங்குவதினால் கிடைக்கும் மற்றொரு நன்மை என்னவென்றால், காரை வேறொருவருக்கு மறுவிற்பனை செய்யும்போது வாகனத்தின் மதிப்பை வெகுவாக கூட்டும். இதனால் காரில் இழந்த தொகைகளை ஓரளவிற்கு மீட்டுவிடலாம்.

கருப்பு நிறத்தில் காரை வாங்குவதால் இவ்வளவு நன்மை இருக்கா!! அதேநேரம் இத்தனை பிரச்சனைகளும் உள்ளனவா?

செகண்ட் ஹேண்டில் காரை வாங்க நினைப்பவர்களுக்கும், கண்ணை கவரக்கூடிய கருப்பு நிறத்திலான பயன்படுத்தப்பட்ட கார் எளிதில் பிடித்துபோய் விடுகிறது. சமீபத்தில் வாங்கிய கார் என்றால், காரை பரிசோதிக்கும் முன்னரே வாங்குவதில் fix-ஆகி விடுவர்.

கருப்பு நிறத்தில் காரை வாங்குவதால் இவ்வளவு நன்மை இருக்கா!! அதேநேரம் இத்தனை பிரச்சனைகளும் உள்ளனவா?

பிரச்சனைகள்

மேற்கூறப்பட்டவாறு மறு விற்பனையின்போது காரின் மதிப்பு அதிகமாக இருக்க வேண்டுமென்றால், கருப்பு நிற காரை அடிக்கடி பராமரித்து கொண்டே இருக்க வேண்டும். கிட்டத்தட்ட முன்பு விற்பனையில் இருந்த 2-ஸ்ட்ரோக் மோட்டார்சைக்கிள்களை போன்று.

கருப்பு நிறத்தில் காரை வாங்குவதால் இவ்வளவு நன்மை இருக்கா!! அதேநேரம் இத்தனை பிரச்சனைகளும் உள்ளனவா?

ஏனெனில் மற்ற நிறங்களை காட்டிலும் கருப்பு நிறத்தில் கார் கூடுதல் அழகாக தெரிவதை போல், மற்ற நிறங்களிலான பெயிண்ட்கள் உடன் ஒப்பிடும்போது கருப்பு நிற பெயிண்ட், எதிர்பாராத விதமாக காரின் மீது விழும் சிறு கீறல்களை கூட பெரியதாக காட்டக்கூடியது. அதேபோன்று, வெள்ளை நிறத்தை போல் கருப்பு நிற பெயிண்ட்டும் தூசி மற்றும் அழுக்கை வெளிச்சம்போட்டு காட்டக்கூடியது. இதனால் கருப்பு நிற காரை அடிக்கடி கழுவும் சூழல் உருவாகும்.

கருப்பு நிறத்தில் காரை வாங்குவதால் இவ்வளவு நன்மை இருக்கா!! அதேநேரம் இத்தனை பிரச்சனைகளும் உள்ளனவா?

மேலும் ஏற்கனவே கூறியதுபோல், கருப்பு நிறம் சூரியனின் வெப்பத்தை அதிகமாக உறிஞ்சக்கூடியது. இதனால் காரில் சில பழுதுகள் (குறிப்பாக என்ஜினில்) ஏற்பட வாய்ப்புண்டு. எனவே கருப்பு நிறத்தில் காரை வாங்க விரும்புகிறீர்கள் என்றால், எந்த பிராண்டில், எந்த மாடலில், எத்தகைய உடலமைப்பில் காரை வாங்குகிறீர்கள் என்பது முக்கியமானது.

Most Read Articles
English summary
The Black Beauty Why Your Next Car Should Be Black!
Story first published: Sunday, August 29, 2021, 16:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X