மாஸ்... வெறும் 20 நிமிடங்களில் அனைத்து MG Astor கார்களும் விற்று தீர்ந்தது... சூப்பரான விலைதான் இதுக்கு காரணம்

புக்கிங் தொடங்கிய வெறும் 20 நிமிடங்களில் எம்ஜி அஸ்டர் காரின் முதல் பேட்ஜ் விற்று தீர்ந்தது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாஸ்... வெறும் 20 நிமிடங்களில் அனைத்து MG Astor கார்களும் விற்று தீர்ந்தது... சூப்பரான விலைதான் இதுக்கு காரணம்

இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் எம்ஜி அஸ்டர் (MG Astor) கார் வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரக கார் ஆகும். ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக எம்ஜி அஸ்டர் களமிறக்கப்பட்டுள்ளது.

மாஸ்... வெறும் 20 நிமிடங்களில் அனைத்து MG Astor கார்களும் விற்று தீர்ந்தது... சூப்பரான விலைதான் இதுக்கு காரணம்

இந்த சூழலில் எம்ஜி அஸ்டர் காருக்கான முன்பதிவுகளை ஏற்கும் பணி இன்று (அக்டோபர் 21) காலை 11 மணிக்கு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. ஆனால் முன்பதிவு தொடங்கப்பட்ட வெறும் 20 நிமிடங்களிலேயே எம்ஜி அஸ்டர் காரின் முதல் பேட்ஜ் விற்று தீர்ந்து விட்டது. எம்ஜி அஸ்டர் காரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகள் வரும் நவம்பர் 1ம் தேதி தொடங்கப்படவுள்ளது.

மாஸ்... வெறும் 20 நிமிடங்களில் அனைத்து MG Astor கார்களும் விற்று தீர்ந்தது... சூப்பரான விலைதான் இதுக்கு காரணம்

நடப்பாண்டு இறுதிக்குள், அதாவது நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 5 ஆயிரம் அஸ்டர் கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்வதற்கு எம்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த 5 ஆயிரம் கார்கள்தான் இன்று காலை முன்பதிவு தொடங்கப்பட்ட வெறும் 20 நிமிடங்களில் விற்று தீர்ந்து விட்டன. இது எம்ஜி அஸ்டர் காருக்கு இந்தியாவில் கிடைத்துள்ள பெரும் வரவேற்பிற்கான ஒரு உதாரணம் ஆகும்.

மாஸ்... வெறும் 20 நிமிடங்களில் அனைத்து MG Astor கார்களும் விற்று தீர்ந்தது... சூப்பரான விலைதான் இதுக்கு காரணம்

இதுகுறித்து எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ராஜீவ் சாபா கூறுகையில், ''வாடிக்கையாளர்களிடம் இருந்து கிடைத்துள்ள வரவேற்பு எங்களை மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் உலகளாவிய ஆட்டோமொபைல் துறை தற்போது செமி கண்டக்டர் சிப் (Semiconductor Chip) பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறது.

மாஸ்... வெறும் 20 நிமிடங்களில் அனைத்து MG Astor கார்களும் விற்று தீர்ந்தது... சூப்பரான விலைதான் இதுக்கு காரணம்

எனவே நடப்பாண்டில் எங்களால் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் கார்களை டெலிவரி செய்ய முடியும். எனினும் அடுத்த காலண்டர் ஆண்டின் (2022) முதல் காலாண்டில் சப்ளை சீராகும் என எதிர்பார்க்கிறோம்'' என்றார். ராஜீவ் சாபா தெரிவித்துள்ளதை போல் தற்போது கிட்டத்தட்ட உலகின் அனைத்து முன்னணி கார் நிறுவனங்களும் செமி கண்டக்டர் சிப் பற்றாக்குறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மாஸ்... வெறும் 20 நிமிடங்களில் அனைத்து MG Astor கார்களும் விற்று தீர்ந்தது... சூப்பரான விலைதான் இதுக்கு காரணம்

இதன் காரணமாக கார் உற்பத்தி குறைந்துள்ளது. எனவே வாடிக்கையாளர்களுக்கு அதிக அளவில் கார்களை டெலிவரி செய்ய முடியாத சூழல் நிலவி வருகிறது. எனினும் அடுத்த காலாண்டர் ஆண்டின் முதல் காலாண்டில், அதாவது 2022ம் ஆண்டின் ஜனவரி-மார்ச் கால கட்டத்தில் செமி கண்டக்டர் சிப் பற்றாக்குறை ஓரளவிற்கு குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ்... வெறும் 20 நிமிடங்களில் அனைத்து MG Astor கார்களும் விற்று தீர்ந்தது... சூப்பரான விலைதான் இதுக்கு காரணம்

அப்போது எம்ஜி நிறுவனமும் அதிக கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. எம்ஜி அஸ்டர் காரின் ஆரம்ப விலை 9.78 லட்ச ரூபாய் மட்டுமே. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 16.78 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

மாஸ்... வெறும் 20 நிமிடங்களில் அனைத்து MG Astor கார்களும் விற்று தீர்ந்தது... சூப்பரான விலைதான் இதுக்கு காரணம்

இது பார்ப்பதற்கு சற்று அதிக விலையாக தோன்றலாம். ஆனால் அஸ்டர் காருக்கு எம்ஜி நிறுவனம் மிக சவாலான விலையை நிர்ணயம் செய்துள்ளதாகவே ஆட்டோமொபைல் துறை வல்லுனர்கள் கருதுகின்றனர். ஏனெனில் அந்த அளவிற்கு கவர்ச்சிகரமான டிசைன், சக்தி வாய்ந்த இன்ஜின் தேர்வுகள் உடன் எம்ஜி அஸ்டர் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மாஸ்... வெறும் 20 நிமிடங்களில் அனைத்து MG Astor கார்களும் விற்று தீர்ந்தது... சூப்பரான விலைதான் இதுக்கு காரணம்

குறிப்பாக இந்தியாவிலேயே தலைசிறந்த தொழில்நுட்ப அம்சங்கள் பலவற்றையும் எம்ஜி அஸ்டர் கார் பெற்றுள்ளது. எனவே இது கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகதான் எம்ஜி அஸ்டர் காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட வரவேற்பு கிடைத்துள்ளது.

மாஸ்... வெறும் 20 நிமிடங்களில் அனைத்து MG Astor கார்களும் விற்று தீர்ந்தது... சூப்பரான விலைதான் இதுக்கு காரணம்

இந்திய சந்தையில் தற்போது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி மற்றும் மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக வாடிக்கையாளர்கள் வழங்கி வரும் அமோக ஆதரவு காரணமாக மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் தொடர்ச்சியாக பல்வேறு புதிய தயாரிப்புகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

மாஸ்... வெறும் 20 நிமிடங்களில் அனைத்து MG Astor கார்களும் விற்று தீர்ந்தது... சூப்பரான விலைதான் இதுக்கு காரணம்

ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஆகிய கார்கள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டவைதான். இந்த வரிசையில் சமீபத்தில் எம்ஜி அஸ்டர் காரும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த செக்மெண்ட்டில் தற்போதைய நிலையில் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் ஆகிய கார்கள்தான் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

மாஸ்... வெறும் 20 நிமிடங்களில் அனைத்து MG Astor கார்களும் விற்று தீர்ந்தது... சூப்பரான விலைதான் இதுக்கு காரணம்

அந்த ஆதிக்கத்திற்கு எம்ஜி அஸ்டர் கார் முட்டுக்கட்டை போடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்பதிவு எண்ணிக்கைகளும் அதனை நமக்கு தெளிவாக காட்டுகின்றன. அஸ்டர் தவிர, ஹெக்டர், ஹெக்டர் ப்ளஸ், இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் க்ளோஸ்ட்டர் உள்ளிட்ட கார்களையும் எம்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது.

Most Read Articles
English summary
First batch of mg astor suv sold out within 20 minutes
Story first published: Thursday, October 21, 2021, 14:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X