Just In
- 1 hr ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 2 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 3 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 4 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கம்பீரமாக இந்திய மண்ணை வந்தடைந்தது ஜாகுவாரின் முதல் எலக்ட்ரிக் கார்!! முன்பதிவுகள் ஏற்று கொள்ளப்படுகின்றன
ஜாகுவாரின் ஐ-பேஸ் எலக்ட்ரிக் கார் முழுவதும் தயாரிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் வெளியாகியுள்ள படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சந்தை ஆரம்ப கட்ட நிலையில்தான் உள்ளது. இருப்பினும் லக்சரி கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது புதிய எலக்ட்ரிக் மாடல்களை நம் நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றன.

இந்த வகையில் முன்னணி லக்சரி கார் பிராண்டான ஜாகுவார் லேண்ட் ரோவர், மேற்கிந்திய நாடுகளில் விற்பனையில் ஜொலித்துவரும் தனது செயல்திறன்மிக்க ஐ-பேஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் மூலம் தனக்கான இடத்தை பிடிக்க ஆயத்தமாகி வருகிறது.

ஐ-பேஸ் இந்தியாவில் இந்த 2021ஆம் ஆண்டில் அறிமுகமாகும் என்று கடந்த ஆண்டே ஜாகுவார் நிறுவனம் உறுதிப்படுத்தி இருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் முதல் மாதிரி மும்பை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

ஐ-பேஸ், ஜாகுவார் லேண்ட் ரோவரின் இந்திய விற்பனை பயணத்தில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடிக்கும் எனவும், எலக்ட்ரிக் வாகன எதிர்காலத்தை நோக்கி வேகமாக முன்னோக்கி செல்வதாகவும் ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரோகித் சுரி கூறியுள்ளார்.

அட்டகாசமான சிவப்பு நிறத்தில் இந்தியா வந்தடைந்திருக்கும் ஜாகுவார் ஐ-பேஸ் எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகள் 2020 நவம்பர் மாதத்திலேயே நம் நாட்டில் துவங்கப்பட்டுவிட்டன. அவ்வாறு முன்பதிவு செய்தவர்களில் ஒருவருக்கு டெலிவிரி செய்யப்படவே இந்த எலக்ட்ரிக் கார் தற்போது இந்தியா வந்திருக்கும்.

மேலும் இறக்குமதியாகி இருப்பது ஐ-பேஸின் விலைமிக்க வேரியண்ட்டாகும். ஐ-பேஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி காரில் 90kWh லித்தியம்-இரும்பு பேட்டரி பொருத்தப்படுகிறது. இதன் மூலமாக காரை அதிகப்பட்சமாக 294 கிலோவாட்ஸ் மற்றும் 696 என்எம் டார்க் திறனில் இயக்க முடியும்.

0-வில் இருந்து 100kmph வேகத்தை 4.8 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த எலக்ட்ரிக் காரின் முன்பக்கத்தில் க்ரில் ஆனது புதிய அட்லஸ் க்ரே நிறத்தால் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சக்கரங்கள் புதியதாகவும், ஹெட்லைட் உள்ளிட்ட விளக்குகள் நன்கு பிரகாசமாக எரியக்கூடிய விதத்திலும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த அம்சங்களை அனைத்து வேரியண்ட்களிலும் பெற்றுள்ள ஐ-பேஸின் உட்புறத்தில் பிஎம்2.5 என்ற அதிநவீன காற்று சுத்திகரிப்பான் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்நுட்பம் பயணத்தை துவங்குவதற்கு முன்பே கேபினில் அடைந்திருக்கும் காற்றை சுத்திகரித்துவிடும் என்பது கூடுதல் சிறப்பு.

எஸ், எஸ்இ மற்றும் எச்எஸ்இ என்ற மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகின்ற ஜாகுவார் ஐ-பேஸ், உலகளவில் 2019ஆம் ஆண்டின் சிறந்த கார், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கார், பசுமை கார் உள்பட கிட்டத்தட்ட 80 விருதுகளை வென்றுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.