இந்த 5 விஷயங்களுக்காக 2021 ஹோண்டா அமேஸை தாராளமாக வாங்கலாம்!! புதிய மாற்றங்கள் என்னென்ன?

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டு பரபரப்பான விற்பனையில் 2021 ஹோண்டா அமேஸ் உள்ளது. மிகவும் எளிமையாகவும் இல்லாமல், அதேநேரம் மிகவும் மாடர்ன்-ஆகவும் இல்லாமல், இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையிலான டிசைனில் இந்த காம்பெக்ட் செடான் மாடல் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

இந்த 5 விஷயங்களுக்காக 2021 ஹோண்டா அமேஸை தாராளமாக வாங்கலாம்!! புதிய மாற்றங்கள் என்னென்ன?

அதேபோல் சில கூடுதலான தொழிற்நுட்ப வசதிகளையும் 2021 ஹோண்டா அமேஸ் பெற்று வந்துள்ளது. மற்றப்படி என்ஜின் & டிரான்ஸ்மிஷன் தேர்வுகளில் எந்த மாற்றமும் இல்லை என்றாலும், நாம் இந்த செய்தியில் பார்க்கவுள்ள ஐந்து விஷயங்களுக்காக புதிய அமேஸ் காரை வாங்கலாம்.

இந்த 5 விஷயங்களுக்காக 2021 ஹோண்டா அமேஸை தாராளமாக வாங்கலாம்!! புதிய மாற்றங்கள் என்னென்ன?

புத்துணர்ச்சியான முன்பக்கம்

ஃபேஸ்லிஃப்ட் அப்டேட் என்றாலே காரின் முன்பக்கம் தான் முக்கியமாக திருத்தியமைக்கப்படுவது வழக்கம். அதேபோன்று தான் 2021 அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் முன்பக்கமும் வாடிக்கையாளர்களை கவரும் நோக்கில் சில திருத்தங்களை பெற்றுள்ளது.

இந்த 5 விஷயங்களுக்காக 2021 ஹோண்டா அமேஸை தாராளமாக வாங்கலாம்!! புதிய மாற்றங்கள் என்னென்ன?

அதற்காக முற்றிலும் மாற்றப்பட்ட முன்பக்கத்தை எதிர்பார்க்க வேண்டாம். முந்தைய வெர்சனின் சாயல் சற்று இருக்க தான் செய்கிறது. புதிய அமேஸின் முன்பக்கத்தை சற்று உற்று பார்த்தாலே, க்ரில் பகுதியில் புதியதாக வழங்கப்பட்டுள்ள பல-லேயர் க்ரோம் டிசைன் போன்ற புதிய அப்கிரேட்கள் நம் கண்களுக்கு தெரிக்கின்றன.

இந்த 5 விஷயங்களுக்காக 2021 ஹோண்டா அமேஸை தாராளமாக வாங்கலாம்!! புதிய மாற்றங்கள் என்னென்ன?

கண்ணை கவரும் பெயிண்ட் தேர்வுகள்

ஹோண்டா நிறுவனம் புதிய அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் காரை விண்கல்லின் உலோக சாம்பல் நிறத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது. அதேநேரம் வழக்கமான நிறத்தேர்வுகளிலும் புதிய அமேஸ் காம்பெக்ட் செடான் கார் விற்பனைக்கு கிடைக்கும். இந்த காருக்கு முந்தைய வெர்சனில் இருந்து தொடரப்பட்டுள்ள நிறத்தேர்வுகளாக, ரேடியண்ட் சிவப்பு, பிளாட்டினம் வெள்ளை, கோல்டன் பழுப்பு மற்றும் லுனார் சில்வர் உள்ளிட்டவை உள்ளன.

இந்த 5 விஷயங்களுக்காக 2021 ஹோண்டா அமேஸை தாராளமாக வாங்கலாம்!! புதிய மாற்றங்கள் என்னென்ன?

புதிய விளக்குகள்

அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் வெளிப்பக்கத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மற்றொரு முக்கியமான அப்கிரேட், காரை சுற்றிலும் வழங்கப்பட்டுள்ள புதிய எல்இடி விளக்குகளாகும். இதன்படி, முன்பக்கத்தில் எல்இடி ஹெட்லைட்கள், எல்இடி டிஆர்எல்கள் உடன் வழங்கப்பட்டுள்ளன.

இந்த 5 விஷயங்களுக்காக 2021 ஹோண்டா அமேஸை தாராளமாக வாங்கலாம்!! புதிய மாற்றங்கள் என்னென்ன?

இவற்றுடன் காரின் முன்பக்கத்தில் பம்பரில் வழங்கப்படும் மூடுபனி விளக்குகள் கூட புதிய எல்இடி யூனிட்களாக கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் பின்பக்கத்திலும் C-வடிவிலான டெயில்லைட் அமைப்பில் எல்இடி உள்ளீடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் காரை பின்பக்கத்தில் இருந்து பார்த்தாலும், நமக்கு புதுமையான தோற்றம் கிடைக்கிறது.

இந்த 5 விஷயங்களுக்காக 2021 ஹோண்டா அமேஸை தாராளமாக வாங்கலாம்!! புதிய மாற்றங்கள் என்னென்ன?

அலாய் சக்கரங்கள்

புதிய ஹோண்டா அமேஸ் காரில் 15 இன்ச்சில் புதிய அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை இரட்டை-நிறத்தில் வழங்கப்படுவது தான் கூடுதல் சிறப்பு. காரின் பக்கவாட்டு பகுதியை மற்ற மாடர்ன் செடான் கார்களுக்கு இணையாக காட்டும் நோக்கில் அலாய் சக்கரங்கள் இத்தைய டிசைனில் வழங்கப்பட்டுள்ளன.

இந்த 5 விஷயங்களுக்காக 2021 ஹோண்டா அமேஸை தாராளமாக வாங்கலாம்!! புதிய மாற்றங்கள் என்னென்ன?

புதிய உட்புற கேபின் உள்ளமைவு

2021 அமேஸின் உட்பகுதி அட்டகாசமான துணியால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டாப் விஎக்ஸ் வேரியண்ட்டில் கிட்டத்தட்ட சொகுசு கார்களில் உள்ளதை போன்று கேபின் இளம் பழுப்பு நிற துணியால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த 5 விஷயங்களுக்காக 2021 ஹோண்டா அமேஸை தாராளமாக வாங்கலாம்!! புதிய மாற்றங்கள் என்னென்ன?

அதேநேரம் புதிய அமேஸின் டாப் வேரியண்ட்டின் டேஸ்போர்டில் புதிய க்ரோம் & சில்வர் நிற ஹைலைட்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை நிச்சயம் காருக்கு உள்ளே நுழையும் பயணிகளை முதலாவதாக வசீகரித்துவிடும்.

இந்த 5 விஷயங்களுக்காக 2021 ஹோண்டா அமேஸை தாராளமாக வாங்கலாம்!! புதிய மாற்றங்கள் என்னென்ன?

ஏற்கனவே கூறியதுபோல், ஹோண்டா அமேஸின் என்ஜின் தேர்வுகளில் எந்த மாற்றமும் இல்லை. இந்த ஹோண்டா காம்பெக்ட் செடான் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ-டீசல் என்ற இரு விதமான என்ஜின்கள் தேர்வுகளாக வழங்கப்படுகின்றன.

இந்த 5 விஷயங்களுக்காக 2021 ஹோண்டா அமேஸை தாராளமாக வாங்கலாம்!! புதிய மாற்றங்கள் என்னென்ன?

இதில் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 88 பிஎச்பி மற்றும் 110 என்எம் டார்க் திறனையும், டர்போ-டீசல் என்ஜின் 98 பிஎச்பி மற்றும் 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன. ஹோண்டா அமேஸிற்கு போட்டியாக உள்ள கார்களில் ஃபோர்டு அஸ்பியரில் மட்டுமே பெட்ரோல் & டீசல் என்ஜின் தேர்வு வழங்கப்படுகிறது.

இந்த 5 விஷயங்களுக்காக 2021 ஹோண்டா அமேஸை தாராளமாக வாங்கலாம்!! புதிய மாற்றங்கள் என்னென்ன?

மாருதி டிசைர், டாடா டிகோர் என்ற மற்ற இரு காம்பெக்ட் செடான் மாடல்கள், கடந்த ஆண்டு ஏப்ரலில் இருந்து அமலுக்கு வந்த புதிய மாசு உமிழ்வு விதியினால் தற்போதைக்கு பெட்ரோல் என்ஜின் தேர்வில் மட்டுமே கிடைக்கின்றன. அதேபோல் ஹோண்ட அமேஸ் மாடல் மேனுவல் தேர்விலும் கிடைக்கிறது, ஆட்டோமேட்டிக் தேர்விலும் கிடைக்கிறது.

Most Read Articles

English summary
Five most prominent changes on 2021 Honda Amaze compact sedan.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X