நம் இந்தியர்களை கவர்வதில் கோட்டைவிட்டு, தோல்வியுற்ற எம்பிவி கார்கள்!! டாடா தயாரிப்பு கூட உள்ளதா!

எம்பிவி கார்கள் பொதுவாகவே அதிக பயணிகளை ஒர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு ஏற்ற கார்களாக விளங்குகின்றன. அதிலும் குறிப்பாக அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா போன்ற நாட்டிற்கு இத்தகைய வாகனங்கள் மிகவும் ஏற்றவைகளாக உள்ளன. இருப்பினும் இந்திய சந்தையில் பல எம்பிவி கார்கள் வாடிக்கையாளர்களை கவர்வதில் கோட்டைவிட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை பற்றி தான் இனி இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

நம் இந்தியர்களை கவர்வதில் கோட்டைவிட்டு, தோல்வியுற்ற எம்பிவி கார்கள்!! டாடா தயாரிப்பு கூட உள்ளதா!

ரெனால்ட் லாட்ஜ்

போட்டி எம்பிவி மாடல்களை சமாளிக்க முடியாமல் தான் இந்த ரெனால்ட் எம்பிவி கார் தோற்றுப்போனதே தவிர்த்து, ரெனால்ட் லாட்ஜ் மிக சிறந்த எம்பிவி கார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தியர்கள் எப்போதும் மறுவிற்பனையின் போது நல்ல மதிப்பை வழங்கக்கூடிய கார்களை தான் தேர்வு செய்வர்.

நம் இந்தியர்களை கவர்வதில் கோட்டைவிட்டு, தோல்வியுற்ற எம்பிவி கார்கள்!! டாடா தயாரிப்பு கூட உள்ளதா!

குறைந்த பராமரிப்பு செலவை கொண்டிருப்பது மட்டுமின்றி, உதிரி பாகங்கள் தாங்கள் வாங்கும் காருக்கு எந்த அளவிற்கு கிடைக்கும் என்பதையும் உறுதிப்படுத்தி கொள்வர். இந்த விஷயத்தில் தான் ரெனால்ட் லாட்ஜ் தோற்றுவிட்டது. ஏனெனில் ரெனால்ட் நிறுவனத்தின் சேவை மையங்கள் பெரும்பான்மையான கிராமப்புற பகுதிகளில் இல்லை.

நம் இந்தியர்களை கவர்வதில் கோட்டைவிட்டு, தோல்வியுற்ற எம்பிவி கார்கள்!! டாடா தயாரிப்பு கூட உள்ளதா!

தோல்விக்கான காரணம்: ரெனால்ட் லாட்ஜின் தோற்றம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதத்தில் இல்லை என்பதை சொல்லியே ஆக வேண்டும். அதேநேரம் உலகளாவிய மோதல் சோதனையில் ஐந்திற்கு பூஜ்ஜிய நட்சத்திரங்களை பெற்றதும் லாட்ஜி எம்பிவி காரின் விற்பனையை பெரியதாக பாதித்துவிட்டது.

நம் இந்தியர்களை கவர்வதில் கோட்டைவிட்டு, தோல்வியுற்ற எம்பிவி கார்கள்!! டாடா தயாரிப்பு கூட உள்ளதா!

டாடா ஆரியா

அறிமுகமான சமயத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சந்தையில் விற்பனை செய்த விலையுயர்ந்த காராக ஆரியா விளங்கியது. உட்புற கேபினில் வழங்கப்பட்ட அம்சங்களிலும், பாதுகாப்பு தொழிற்நுட்பங்களிலும் சிறந்ததாக விளங்கிய டாடா ஆரியா, தோற்றத்திலும் விலையிலும் கோட்டைவிட்டது.

நம் இந்தியர்களை கவர்வதில் கோட்டைவிட்டு, தோல்வியுற்ற எம்பிவி கார்கள்!! டாடா தயாரிப்பு கூட உள்ளதா!

அதுமட்டுமில்லாமல், இந்த எம்பிவி கார் அறிமுகமான சமயத்தில் இந்திய வாடிக்கையாளர்கள் ரூ.16 லட்சம் கொடுத்து டாடா காரை வாங்க தயாராக இல்லை. தோற்றமும் டாடா இண்டிகோ மான்ஸாவின் பெரிய உருவ வெர்சன் போல் இருந்ததால் வாடிக்கையாளர்கள் கண்டு கொள்ளவில்லை.

நம் இந்தியர்களை கவர்வதில் கோட்டைவிட்டு, தோல்வியுற்ற எம்பிவி கார்கள்!! டாடா தயாரிப்பு கூட உள்ளதா!

தோல்விக்கான காரணம்: தோற்றம் இந்திய வாடிக்கையாளர்கள் விரும்பக்கூடியதாக இல்லை. மற்றொரு காரணம் விலை. ரூ.16 லட்சத்திற்கு ஏற்ற வாகனமாக டாடா ஆரியாவை வாடிக்கையாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றுதான் சொல்லியாக வேண்டும்.

நம் இந்தியர்களை கவர்வதில் கோட்டைவிட்டு, தோல்வியுற்ற எம்பிவி கார்கள்!! டாடா தயாரிப்பு கூட உள்ளதா!

நிஸான் எவாலியா

எம்பிவி மட்டுமல்ல, ஜப்பானிய நிஸான் நிறுவனம் இந்திய சந்தையில் தனக்கான ஒரு இடத்தை பிடிக்க தற்போது வரையிலும் அனைத்து பிரிவுகளிலும் போராடி வருகிறது. ஆனால் உண்மையில் நிஸான் எவாலியா தரமான எம்பிவி காராகும். டொயோட்டா இன்னோவா, மாருதி சுஸுகி எர்டிகா போன்ற முன்னணி நிறுவனங்களின் எம்பிவி கார்களினாலேயே இது தோல்வியுற்றது.

நம் இந்தியர்களை கவர்வதில் கோட்டைவிட்டு, தோல்வியுற்ற எம்பிவி கார்கள்!! டாடா தயாரிப்பு கூட உள்ளதா!

விற்பனை நிறுத்தி கொள்வதற்கு முன்பாக இந்த நிஸான் எம்பிவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8.50 லட்சத்தில் இருந்து ரூ.12.22 லட்சம் வரையில் இருந்தது. ஆனால் இந்த விலைகள் இந்த காரில் வழங்கப்பட்ட வசதிகளுக்கும், ஆற்றல்மிக்க இதன் 1.5 லிட்டர் டீசல் என்ஜினிற்கும் தாராளமாக ஏற்ற விலையாகும். அதிலும் இதன் டாப்-வேரியண்ட்களில் மேற்கூரையில் ஏசி வழங்கப்பட்டது.

நம் இந்தியர்களை கவர்வதில் கோட்டைவிட்டு, தோல்வியுற்ற எம்பிவி கார்கள்!! டாடா தயாரிப்பு கூட உள்ளதா!

தோல்விக்கான காரணம்: முக்கியமாக எவாலியாவின் தோற்றம் வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறவில்லை. மறுப்பக்கம், மறுவிற்பனையின் போது மதிப்பு இதன் போட்டி மாடல்களுடன் ஒப்பிடுகையில் குறைவாக இருந்தது. அதேநேரம், ஒரே ஒரு என்ஜின் & மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வுடன் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது சில வாடிக்கையாளர்களை முற்றிலுமாக ஈர்க்கவில்லை.

நம் இந்தியர்களை கவர்வதில் கோட்டைவிட்டு, தோல்வியுற்ற எம்பிவி கார்கள்!! டாடா தயாரிப்பு கூட உள்ளதா!

செவ்ரோலெட் என்ஜாய்

நிஸானை போன்று இந்திய சந்தையில் ஆழமாக கால் பதிக்க முடியாமல் தத்தளித்த மற்றொரு நிறுவனம் செவ்ரோலெட் ஆகும். என்ன, நிஸான் இன்னமும் கார்களை நம் நாட்டு சந்தையில் விற்பனை செய்து வருகிறது. செவ்ரோலெட் நிறுவனம் தாக்கு பிடிக்காமல் ஓட்டம் கண்டது.

நம் இந்தியர்களை கவர்வதில் கோட்டைவிட்டு, தோல்வியுற்ற எம்பிவி கார்கள்!! டாடா தயாரிப்பு கூட உள்ளதா!

அதிக பயணிகள் நன்கு தாராளமாக அமர்ந்து செல்லும் வகையில் 7-இருக்கைகள் மற்றும் ஃபியாட்டின் 1.3 லிட்டர் டீசல் & 1.4 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் கொண்டுவரப்பட்டாலும், பாதுகாப்பு விஷயத்தில் என்ஜாய் மிக பெரிய சறுக்கலை கண்டது. ஏனெனில் உலகளாவிய மோதல் சோதனை அமைப்பு இந்த செவ்ரோலெட் எம்பிவி காருக்கு பூஜ்ஜிய நட்சத்திரங்களை வழங்கி இருந்தது.

நம் இந்தியர்களை கவர்வதில் கோட்டைவிட்டு, தோல்வியுற்ற எம்பிவி கார்கள்!! டாடா தயாரிப்பு கூட உள்ளதா!

தோல்விக்கான காரணம்: பயணிகள் பாதுகாப்பில் 0 நட்சத்திரம் இந்த செவ்ரோலெட் கார் இந்திய சந்தையில் தோல்வியுற்றதற்கு முக்கிய காரணம். அதற்கு அடுத்தது, அதிக பராமரிப்பு செலவு, குறைந்த க்ரவுண்ட் க்ளியரென்ஸ் மற்றும் பயன்படுத்த முடியாத அளவிற்கான மூன்றாம் இருக்கை வரிசை செவ்ரோலெட் என்ஜாய் நம் மக்களை கவராததற்கு காரணங்களாக உள்ளன.

Most Read Articles
மேலும்... #எம்பிவி #mpv
English summary
MPVs That Terribly Failed In The Indian Market.
Story first published: Sunday, September 19, 2021, 2:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X