புதிய Gurkha வாகனத்தை அறிமுகம் செய்ய தயாராகும் Force!! புதிய டீசர் படம் வெளியீடு!

Force Motors புதிய Gurkha வாகனத்தின் அறிமுகத்தை உறுதிப்படுத்தும் வகையில் டீசர் படம் ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதனை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய Gurkha வாகனத்தை அறிமுகம் செய்ய தயாராகும் Force!! புதிய டீசர் படம் வெளியீடு!

மஹாராஷ்டிராவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் Force Motors நிறுவனம் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியதில் இருந்து புதிய தலைமுறை Gurkha-வின் தயாரிப்பு பணிகளில் கிட்டத்தட்ட 1 வருடத்திற்கும் மேலாக ஈடுப்பட்டு வருகிறது.

புதிய Gurkha வாகனத்தை அறிமுகம் செய்ய தயாராகும் Force!! புதிய டீசர் படம் வெளியீடு!

ஏனெனில் கொரோனா வைரஸ் இந்தியாவில் நுழைவதற்கு முன்பு இருந்தே Force Gurkha வாகனங்கள் தகுந்த சோதனை கருவிகளுடன் பொது சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருவதை பார்த்து வருகிறோம். இதனால் Mahindra Thar-க்கு போட்டியாக கடந்த ஆண்டு இறுதியிலோ அல்லது இந்த ஆண்டு துவக்கத்திலோ இந்த வாகனம் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்த்தோம்.

புதிய Gurkha வாகனத்தை அறிமுகம் செய்ய தயாராகும் Force!! புதிய டீசர் படம் வெளியீடு!

ஆனால் அறிமுகம் செய்யப்பட்ட பாடில்லை. தொடர்ந்து தள்ளிப்போடப்பட்டு வருகிறது. எப்படி இருந்தாலும், நடப்பு 2021ஆம் ஆண்டிற்குள் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டுவரும் நிலையில், புதிய தலைமுறை Force Gurkha வாகனம் தொடர்பான டீசர் படம் ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

புதிய Gurkha வாகனத்தை அறிமுகம் செய்ய தயாராகும் Force!! புதிய டீசர் படம் வெளியீடு!

தயாரிப்பு நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள இந்த டீசர் படத்திலும், வாகனத்தின் முன்பக்கம் இருளில் இருப்பது போன்று காட்டப்பட்டு, ‘மிக விரைவில்' என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர்த்து, புதிய Gurkha வாகனத்தின் அதிகாரப்பூர்வ அறிமுக தேதி எதுவும் வெளியிடப்படவில்லை.

புதிய Gurkha வாகனத்தை அறிமுகம் செய்ய தயாராகும் Force!! புதிய டீசர் படம் வெளியீடு!

அப்டேட் செய்யப்பட்ட Ladder frame கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுவரும் 2021 Force Gurkha தற்போதைய பாதுகாப்பு சோதனைகள் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பு வழிமுறைகளுக்கு இணக்கமானதாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த Force வாகனம் எல்லா விதங்களிலும் இரண்டாம் தலைமுறை Mahindra Thar-க்கு சரியான போட்டியாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய Gurkha வாகனத்தை அறிமுகம் செய்ய தயாராகும் Force!! புதிய டீசர் படம் வெளியீடு!

மேலும் Suzuki நிறுவனமும் ஜப்பானில் விற்பனையில் சக்கை போடு போட்டுவரும் Jimny 5-கதவு எஸ்யூவி வாகனத்தை இந்திய சந்தைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இதனால் எதிர்காலத்தில் புதிய தலைமுறை Force Gurkha வாகனத்திற்கு விற்பனையில் போட்டி கடுமையாக இருக்கும் என்பது உறுதி.

புதிய Gurkha வாகனத்தை அறிமுகம் செய்ய தயாராகும் Force!! புதிய டீசர் படம் வெளியீடு!

புதிய Gurkha மாடல் 3-கதவு மற்றும் 5-கதவு தேர்வுகளில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அப்டேட்கள் வெளிப்புறம் மற்றும் உட்புறம் என பக்கங்களிலும் வழங்கப்பட வாய்ப்புள்ளது. இந்த வகையில் இந்த எஸ்யூவி வாகனத்தின் முன்பக்கத்தில் எல்இடி DRL-களுடன் புதிய டிசைனில் ஹெட்லேம்ப்கள் பொருத்தப்பட உள்ளன.

புதிய Gurkha வாகனத்தை அறிமுகம் செய்ய தயாராகும் Force!! புதிய டீசர் படம் வெளியீடு!

தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசர் படத்தில் ஹெட்லைட் அணைந்தப்படி உள்ளதால், ஹெட்லைட்களின் வடிவம் எவ்வாறு இருக்கும் என்பதை நம்மால் யூகிக்க முடியவில்லை. புதிய டிசைனிலான ஹெட்லேம்ப்களுடன், ரீடிசைனில் முன் பம்பர், புதிய க்ரில் உள்ளிட்டவற்றை முன்பக்கத்திலும், பின்பக்கத்தில் புதிய டிசைனில் டெயில்லேம்ப்களையும் எதிர்பார்க்கிறோம்.

புதிய Gurkha வாகனத்தை அறிமுகம் செய்ய தயாராகும் Force!! புதிய டீசர் படம் வெளியீடு!

சக்கரங்களின் டிசைனும் பழையது ஆகிவிட்டதால், அதனையும் Force Motors மாற்றலாம். மற்றப்படி வாகனத்தின் பெட்டகம் போன்றதான வடிவத்திலும், மேற்கூரையை தாங்கும் நீண்ட பில்லர்களிலும் கை வைத்திருக்க மாட்டார்கள். அதேபோல் சக்கரங்களுக்கு மேலே சக்கர வளைவுகளும் வழக்கம்போல் தொடரப்படும்.

புதிய Gurkha வாகனத்தை அறிமுகம் செய்ய தயாராகும் Force!! புதிய டீசர் படம் வெளியீடு!

பின்பக்க கதவு ஆனது உதிரி சக்கரத்துடன், நிமிர்ந்த வடிவில் வழங்கப்பட உள்ளது. சந்தையில் அதிகரித்துவரும் போட்டியினை சமாளிக்க, 2-சக்கர-ட்ரைவ் மற்றும் 4-சக்கர-ட்ரைவ் தேர்வுகளில் புதிய Gurkha-வை Force நிறுவனம் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய Gurkha வாகனத்தை அறிமுகம் செய்ய தயாராகும் Force!! புதிய டீசர் படம் வெளியீடு!

சஸ்பென்ஷனுக்கு வாகனத்தின் முன்பக்கத்தில் சுதந்திரமாக செயல்படக்கூடிய double-wishbone-னும், பின்பக்கத்தில் five-link rigid axle அமைப்பும் வழங்கப்பட உள்ளன. உட்புறத்தில் கேபின் இரு விதமான நிறங்களில் வழங்கப்பட, டேஸ்போர்டின் தோற்றம் மாற்றப்பட உள்ளது. தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் விலையை கருத்தில் கொண்டு டாப் வேரியண்ட்டில் மட்டுமே வழங்கப்படும் என தெரிகிறது.

புதிய Gurkha வாகனத்தை அறிமுகம் செய்ய தயாராகும் Force!! புதிய டீசர் படம் வெளியீடு!

பயணிகளின் பாதுகாப்பிற்கு 2021 Force Gurkha-வில் இரட்டை முன்பக்க காற்றுப்பைகள், ஏபிஎஸ், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், பவர் ஜன்னல் கண்ணாடிகள் உள்ளிட்டவை வழங்கப்படலாம். இயக்க ஆற்றலை வழங்குவதற்கு மெர்சிடிஸ் நிறுவனத்தால் தருவிக்கப்பட்ட 2.6 லிட்டர் டீசல் என்ஜின், 5-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்பட உள்ளது.

Most Read Articles

English summary
Force Confirms Launching New Gurkha Soon In India; Teased.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X