நாளுக்கு நாள் ஆர்வத்தை அதிகரிக்கும் 2021 ஃபோர்ஸ் குர்கா!! எப்போதுதாங்க விற்பனைக்கு வரவுள்ளது?

2021 ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி வாகனம் தொடர்பான புதிய தொலைக்காட்சி கமர்ஷியல் (டிவிசி) வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தயாரிப்பு நிறுவனம் கூறவந்துள்ள விஷயத்தை பற்றி இனி இந்த செய்தியிவில் விரிவாக பார்ப்போம்.

நாளுக்கு நாள் ஆர்வத்தை அதிகரிக்கும் 2021 ஃபோர்ஸ் குர்கா!! எப்போதுதாங்க விற்பனைக்கு வரவுள்ளது?

இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் மலிவான 4x4 எஸ்யூவி வாகனங்கள் என்று பார்த்தால் முதலாவதாக மஹிந்திரா தார் தான் நமது நினைவிற்கு வரும். ஏனெனில் இத்தகைய எஸ்யூவி பிரிவில் வேறெந்த மாடலும் தற்போதைக்கு விற்பனையில் இல்லை. ஆனால் இந்த நிலை நீண்ட நாட்களுக்கு இருக்க போவதில்லை.

நாளுக்கு நாள் ஆர்வத்தை அதிகரிக்கும் 2021 ஃபோர்ஸ் குர்கா!! எப்போதுதாங்க விற்பனைக்கு வரவுள்ளது?

ஏனென்றால், மஹாராஷ்டிராவை சேர்ந்த ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் அதன் 2021 குர்கா பிஎஸ்6 வாகனத்தை விற்பனைக்கு கொண்டுவர அனைத்து விதங்களிலும் தயாராகி வருகிறது. மஹிந்திரா தாரை போல் 4x4 ட்ரைவ் அமைப்பை கொண்ட எஸ்யூவி வாகனமான இதனை வருகிற செப்டம்பர் 27ஆம் தேதியில் இருந்து விற்பனைக்கு கொண்டுவர தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

நாளுக்கு நாள் ஆர்வத்தை அதிகரிக்கும் 2021 ஃபோர்ஸ் குர்கா!! எப்போதுதாங்க விற்பனைக்கு வரவுள்ளது?

புதிய தலைமுறை குர்கா வாகனத்தின் படங்கள் இணையத்தில் வைரலாகிவரும் தற்போதைய சூழலில் தான், இந்த பிஎஸ்6 ஆஃப்-ரோடு வாகனம் தொடர்பான டிவிசி வீடியோவினை ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஃபோர்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யுடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவில் 2021 குர்காவின் வெளிப்பக்க மற்றும் உட்பக்க அம்சங்கள் ஹைலைட்டாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

மற்றப்படி இந்த வாகனம் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ள தேதி எதுவும் இந்த வீடியோவில் குறிப்பிடப்படவில்லை. தோற்றத்தை பொறுத்தவரையில் தனது அடையாளமான பெட்டகம் வடிவத்தை ஃபோர்ஸ் குர்கா, புதிய தலைமுறைக்காக விட்டுவிட கொடுக்கவில்லை. ஆனால் இந்த பெட்டக வடிவத்தை கொண்டுவருவதற்காக புதிய வெளிப்பக்க கூடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

நாளுக்கு நாள் ஆர்வத்தை அதிகரிக்கும் 2021 ஃபோர்ஸ் குர்கா!! எப்போதுதாங்க விற்பனைக்கு வரவுள்ளது?

அதேபோல் தற்போதைய மாடர்ன் கார்களுக்கு இணையான பல காஸ்மெட்டிக் மாற்றங்கள் வாகனத்தின் வெளிப்பக்கத்தை சுற்றிலும் கொண்டுவரப்பட்டுள்ளன. முன்பக்க க்ரில்லின் டிசைன் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் வழங்கப்படும் 'Force' லோகோவிற்கு பதிலாக 'Gurkha' லோகோ பயன்படுத்தப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் ஆர்வத்தை அதிகரிக்கும் 2021 ஃபோர்ஸ் குர்கா!! எப்போதுதாங்க விற்பனைக்கு வரவுள்ளது?

எல்இடி தரத்திற்கு மேம்படுத்தப்பட்டுள்ள ஹெட்லேம்ப்கள் இம்முறை சுற்றிலும் வட்ட வடிவில் இரட்டை-செயல்பாட்டு எல்இடி டிஆர்எல்களை பெற்றுள்ளன. அதேபோல் புதிய குர்காவின் முன்பக்க பம்பரின் வடிவமும் திருத்தப்பட்டுள்ளது. அப்படியே வாகனத்தின் பக்கவாட்டிற்கு வந்தால், முந்தைய தலைமுறை குர்காவில் இருந்து ஸ்னோர்கில் அப்படியே தொடரப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் ஆர்வத்தை அதிகரிக்கும் 2021 ஃபோர்ஸ் குர்கா!! எப்போதுதாங்க விற்பனைக்கு வரவுள்ளது?

பின்பக்க பயணிகளுக்கான ஜன்னல் கண்ணாடி ஆனது முன்பை காட்டிலும் சற்று பெரியதாக்கப்பட்டுள்ளது. இந்த டிவிசி வீடியோவில் வாகனத்தின் மேற்கூரையில் பொருட்களை கட்டி வைப்பதற்கான கம்பிகள் பார்க்க முடிகிறது. ஆனால் இது புதிய குர்காவில் ஸ்டாண்டர்ட் அம்சமாக வழங்கப்படுமா அல்லது கூடுதல் ஆக்ஸஸரீயாக வழங்கப்படுமா என்பது தெரியவில்லை.

நாளுக்கு நாள் ஆர்வத்தை அதிகரிக்கும் 2021 ஃபோர்ஸ் குர்கா!! எப்போதுதாங்க விற்பனைக்கு வரவுள்ளது?

அனைத்து-சக்கர-ட்ரைவ் அமைப்பு கொண்ட கார் என்பதை வெளிக்காட்டும் விதமாக '4X4' முத்திரை பின்பக்க ஃபெண்டர், பின்பக்க கதவு மற்றும் ரீடிசைனிலான டெயில்லேம்ப்களில் வழங்கப்பட்டுள்ளது. வெளிப்பக்கத்திற்கு ஏற்ப 2021 குர்காவின் உட்பக்க கேபினும் கருப்பு நிறத்தில், பிளாஸ்டிக் பாகங்களால் மேம்படுத்தப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் ஆர்வத்தை அதிகரிக்கும் 2021 ஃபோர்ஸ் குர்கா!! எப்போதுதாங்க விற்பனைக்கு வரவுள்ளது?

முந்தைய தலைமுறை குர்காவில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படவில்லை, ஆனால் 2021 குர்காவில் புதியதாக கொடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய அம்சங்களுடன், எதிர்பார்க்கப்படும் பயண அனுபவத்தை கொண்டதாக புதிய குர்கா கொண்டுவரப்படுவதாக இந்த டிவிசி வீடியோவில் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாளுக்கு நாள் ஆர்வத்தை அதிகரிக்கும் 2021 ஃபோர்ஸ் குர்கா!! எப்போதுதாங்க விற்பனைக்கு வரவுள்ளது?

உட்புறத்தில், மஹிந்திரா தாரை போல் ஃபோர்ஸ் குர்காவின் இரண்டாவது இருக்கை வரிசையும் திருத்தப்பட்டுள்ளது. ஆனால் தாரை காட்டிலும் 2021 ஃபோர்ஸ் குர்காவின் உட்புற கேபினிலும், பின்பக்கத்தில் பொருட்களை வைக்கும் பகுதியிலும் நன்கு விசாலமான இட வசதி வழக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஃபோர்ஸ் ஆஃப்-ரோடு வாகனத்தின் 2வது இருக்கை வரிசையில் கேப்டன் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.

நாளுக்கு நாள் ஆர்வத்தை அதிகரிக்கும் 2021 ஃபோர்ஸ் குர்கா!! எப்போதுதாங்க விற்பனைக்கு வரவுள்ளது?

குர்காவில் எப்போதுமே ஆஃப்-ரோடு திறன்களை நன்கு அதிகமாகவே ஃபோர்ஸ் நிறுவனம் வழங்குகிறது. இது இதன் 2021 வெர்சனிலும் மாற்றம் இல்லாமல் தொடர்கிறது. 4-சக்கர-ட்ரைவ் சிஸ்டத்தினால், அதிகப்பட்சமாக 700மிமீ ஆழம் கொண்ட நீர்நிலையில் இயங்கும் திறனையும், 35-கோண பரப்பில் ஏறும் திறனையும் பெற்றுள்ள 2021 ஃபோர்ஸ் குர்காவில் 2.6 லிட்டர், டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின், 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்பட உள்ளது.

Most Read Articles

English summary
Force Gurkha 2021: New TVC shows the SUV inside out [Video].
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X