Just In
- 3 hrs ago
மஹிந்திரா தாரை டெலிவிரி எடுத்த இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!! ஆனந்த் மஹிந்திராவின் அன்பளிப்பு!
- 4 hrs ago
இது புதுமுக ரோல்ஸ் ராய்ஸ் கார் அல்ல! சீனர்கள் காப்பியடித்து உருவாக்கிய சொகுசு கார்... இந்த காருல இவ்ளே வசதிகளா
- 5 hrs ago
ஆரம்பமே அதிரடி... 1 லட்சம் சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்க ஓலா திட்டம்... கலக்கத்தில் போட்டியாளர்கள்!
- 5 hrs ago
சரவெடி வெடித்த டிஏஓ... ஒரே நேரத்தில் 3 மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்! வியந்து நிற்கும் இந்திய மின்வாகன சந்தை!
Don't Miss!
- News
ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க.. புதிய வழிகளை யோசியுங்கள்.. பதுக்கினால் கடும் நடவடிக்கை.. மோடி பேச்சு
- Finance
இந்தியாவிற்கு உதவிய பைசர் நிறுவனப் பங்குகள் 5% சரிவு.. என்ன நடக்கிறது..?!
- Sports
அதிரடி சிக்ஸ் அடுத்த பந்தில் அவுட்.. கேப்டனுக்கு எதிராக தமிழக வீரர் செய்த செயல்..போட்டியின் ட்விஸ்ட்
- Movies
என் பிறந்த நாள் மறக்க முடியாததாக மாறியது… ரத்னகுமாரின் மலரும் நினைவுகள்!
- Lifestyle
மீண்டும் உருமாறிய கொரோனா... உச்சக்கட்ட ஆபத்தில் இந்தியா... உயிரைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்யணும்?
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஏமாந்துட்டாரோ! ரூ.43 லட்சம் விலையுள்ள காரை ரூ.7.8 கோடிக்கு வாங்கிய தொழிலதிபர்... ஏன் தெரிஞ்சா மிரண்டுருவீங்க!!
ரூ. 43 லட்சம் மதிப்புள்ள காரை தொழிலதிபர் ஒருவர் ரூ. 7.8 கோடிக்கு வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் சுவாரஷ்ய தகவலை இப்பதிவில் காணலாம்.

ஃபோர்டு நிறுவனத்தின் புகழ்வாய்ந்த கார் மாடல்களில் ப்ரோன்கோ மாடலும் ஒன்று. இந்த காரையே செல்வந்தர் ஒருவர் இந்திய மதிப்பில் ரூ. 7.8 கோடி தொகை கொடுத்து ஏலத்தில் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது முதல் தயாரிப்பு யூனிட் ஆகும். அதாவது, ப்ரோன்கோ உற்பத்தியில் ஃபோர்டு களமிறங்கிய பின்னர் தயாரிக்கப்பட்ட முதல் யூனிட் வாகனம். எனவேதான் இதனை இந்தளவு உயர்ந்த தொகையைக் கொடுத்து தொழிலதிபர் வாங்கியிருக்கின்றார். ஆகையால், அவர் ஏமாறவில்லை என்பது தெளிவாக தெரிகின்றது.

ஃபோர்டு ப்ரோன்கோ காரின் முதல் லாட் கடந்த ஆண்டு ஜூலை மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதனை நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்திய சில மணி நேரங்களிலேயே அனைத்து யூனிட்டுகளும் விற்று தீர்ந்தன. முதல் லாட்டில் சுமார் 3,500 யூனிட் ப்ரோன்கா கார் மாடல்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.

இதனையடுத்து, இரண்டாவது லாட்டு ப்ரோன்கோ கார்களும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே விஐஎன்001 என்ற சேஸிஸ் எண் கொண்ட ப்ரோன்கோ காரை ஃபோர்டு அரிசோனாவில் ஏலத்திற்கு விட்டது. இதனை சுமார் 1,075,000 அமெரிக்க டாலர்களுக்கு அரிசோனாவைச் சேர்ந்தவர் ஏலத்திற்கு எடுத்திருக்கின்றார்.

ஆகையால், மிக அதிக விலையில் விற்பனைக்கு வாங்கப்பட்ட கார் என்ற பெருமையை ஃபோர்டு ப்ரோன்கோ பெற்றிருக்கின்றது. இந்த காரின் இரு கதவுகள் கொண்ட வேரியண்ட் 59,305 (ரூ. 43,66,805) அமெரிக்க டாலர்களுக்கும், நான்கு கதவுகள் கொண்ட வேரியண்ட் 63,500 (ரூ. 46,75,695) அமெரிக்க டாலர்களுக்கும் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த விலையில் விற்கக் கூடிய ஃபோர்டு ப்ரோன்கோ காரையே பல கோடிகள் செலவிட்டு அரிசோனாவைச் சேர்ந்த தொழிலதிபர் பயன்பாட்டிற்கு வாங்கியிருக்கின்றார். இது தனித்துவமான தயாரிப்பு என்கிற காரணத்தினால் இத்தகைய அதிகபட்ச தொகையை அவர் செலவு செய்திருக்கின்றார்.

அரிசோனாவில் அரங்கேறிய இந்நிகழ்வு ஒட்டுமொத்த வாகன உலகையே அதிர செய்திருக்கின்றது. ஃபோர்டு ப்ரோன்கோ கார் 2.3 லிட்டர் ஈகோபோஸ்ட் 4 சிலிண்டர் மற்றும் 2.7 லிட்டர் ஈகோபோஸ்ட் 6 சிலிண்டர் வி6 எஞ்ஜினில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இதில் முதல் எஞ்ஜின் 270 குதிரை திறன்கள் மற்றும் 420 என்எம் டார்க்கையும், மற்றுமொரு எஞ்ஜின் 310 குதிரைதிறன்கள் மற்றும் 542 என்எம் டார்க்கையும் வெளியேற்றக் கூடியது. தற்போது ஈட்டப்பட்டிருக்கும் பெருந்தொகையை ஃபோர்டு நிறுவனம் நற்காரியங்களுக்காக பயன்படுத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி காடுகளின் பராமரிப்பு மற்றும் அவுட்வார்ட் பவுண்ட் ஆகியவற்றிற்கு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த தகவல் ஃபோர்டு நிறுவனத்தைச் சார்ந்த முக்கிய அதிகாரி ஒருவர் கூறியிருக்கின்றார்.