Just In
- 2 hrs ago
மஹிந்திரா தாரை டெலிவிரி எடுத்த இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!! ஆனந்த் மஹிந்திராவின் அன்பளிப்பு!
- 3 hrs ago
இது புதுமுக ரோல்ஸ் ராய்ஸ் கார் அல்ல! சீனர்கள் காப்பியடித்து உருவாக்கிய சொகுசு கார்... இந்த காருல இவ்ளே வசதிகளா
- 4 hrs ago
ஆரம்பமே அதிரடி... 1 லட்சம் சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்க ஓலா திட்டம்... கலக்கத்தில் போட்டியாளர்கள்!
- 4 hrs ago
சரவெடி வெடித்த டிஏஓ... ஒரே நேரத்தில் 3 மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்! வியந்து நிற்கும் இந்திய மின்வாகன சந்தை!
Don't Miss!
- News
'கவலைப்படதீங்க.. கொரோனாவை கட்டுப்படுத்த எல்லா உதவிகளையும் நாங்க செய்கிறோம்'..சீனா அசத்தல் அறிவிப்பு
- Sports
அப்படியே நான் ஷாக்காயிட்டேன்... சாரி கேட்ட விராட் கோலி... என்ன இப்படி பண்ணிட்டாரு கிங் கோலி?
- Finance
ஓலாவின் பிரம்மாண்ட E-scooter திட்டம்.. 1 லட்சம் சார்ஜிங் பாயிண்ட்டுகள்.. ஜூலையில் அறிமுகம்..!
- Movies
என் பிறந்த நாள் மறக்க முடியாததாக மாறியது… ரத்னகுமாரின் மலரும் நினைவுகள்!
- Lifestyle
மீண்டும் உருமாறிய கொரோனா... உச்சக்கட்ட ஆபத்தில் இந்தியா... உயிரைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்யணும்?
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சில மணிநேரங்களில் பழசான புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கார்!! காரணத்தை யூகிக்கவே முடியாது...
பிரத்யேகமான பெயிண்ட்டில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கார் ஒன்று கஸ்டமைஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த கஸ்டமைஸ்ட் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய வ்ராப்-ஐ ஏற்கும் கார்கள் சில மணிநேரங்களிலேயே புதிய தோற்றத்தை பெற்று விடுகின்றன. இத்தகைய வ்ராப்களை சிங்கிள் நிறத்தில் அல்லது மேட் ஃபினிஷில் சில வாடிக்கையாளர்கள் தங்களது கார்களில் கொண்டுவருகின்றனர்.

சிலரோ அனைவரையும் கவரும் விதத்தில் மிகவும் பிரத்யேகமான பெயிண்ட் வ்ராப்பின் பக்கம் செல்கின்றனர். இந்த வகையில் ஜூராசிக் பார்க்கின் தீம்-ஐ பெற்ற ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரை பற்றி தான் இந்த செய்தியில் பார்ப்போம்.
Image Courtesy: arwrap786
தெலுங்கானா, ஹைதராபாத்தை சேர்ந்த ஏஆர் வ்ராப்ஸ் என்ற நிறுவனத்தின் மூலமாக இந்த வ்ராப் வேலைப்பாடுகள் நடைபெற்றுள்ளன. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரின் எந்த வேரியண்ட் இது என்பதை சரியாக அறிய முடியவில்லை.

ஏனெனில் அனைத்து க்ரோம் பாகங்களும் கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த பெயிண்ட் வ்ராப்-ஐ பற்றி நான் கூற வேண்டும் என்றில்லை, ஏனெனில் பார்க்கும் அனைவராலுமே இது எந்த மாதிரியான வ்ராப் என்பதை அறிய முடியும்.

ஹாலிவுட் படமான ஜூராசிக் பார்க்கில் டைனாசரிடம் சிக்கிய கார் இறுதியில் அடையும் நிலையிலும், நீண்ட வருடங்களாக ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட காருக்கு ஏற்படும் நிலையிலும் இந்த வ்ராப் காட்சி தருகிறது.

காரின் அடிப்படை நிறம் நீலம் என்பது போலவும், அதற்கு மேல் துருப்பிடித்தாற் போலவும் இந்த வ்ராப் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜூராசிக் பார்க் தீம் என்பதால், டைனாசரின் நக கீறல்கள் காரை சுற்றிலும் ஆங்காங்கே தென்படுகின்றன.

ஜூராசிக் பார்க் லோகோக்கள் காரின் இரு பக்கங்களிலும் வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய வ்ராப் வேலைப்பாடுகளுக்கு அதிகளவில் கற்பனை திறன் தேவை. இல்லையென்றால், இவ்வளவு நேர்த்தியாக அச்சு அசல் பழையதான கார் போன்றதான தோற்றத்தை கொண்டு வர முடியாது.

இப்படிப்பட்ட வ்ராப்கள் இந்தியாவில் வழங்கப்படுவது இதுவே முதல்முறை என்று நினைக்கிறேன். ஆனால் வெளிநாடுகளில், விபத்தில் சிக்கிய கார்களை போன்றதான வ்ராப்கள் கார்களில் அவ்வப்போது வழங்கப்படும் ஒன்றாகும்.

கார்களை மாடிஃபை செய்வதில் அரசாங்கம் கடுமையான விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது. இருப்பினும் காரின் பெயிண்ட்டை மாற்றுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. இதனால் தான் சமீப காலமாக புதிய வ்ராப்-ஐ பெற்ற கார்களை அதிகளவில் பார்த்து வருகிறோம்.

ஆனால் காரின் உண்மையான நிறத்தின் மீது தான் புதிய வ்ராப் ஒட்டப்பட்டதாக இருக்க வேண்டும். இந்தியாவில் வ்ராப்கள் ரூ.30,000-ல் இருந்து அதன் தரத்தை பொறுத்து லட்சங்கள் வரையில் விற்பனைக்கு கிடைக்கின்றன.