ஃபிகோ, ஆஸ்பயர், ஃப்ரீஸ்டைல் கார்களின் வேரியண்ட்டுகளை அதிரடியாக குறைத்த ஃபோர்டு!

ஃபிகோ உள்ளிட்ட மூன்று கார்களில் வேரியண்ட்டுகளின் எண்ணிக்கையை அதிரடியாக குறைத்துள்ளது ஃபோர்டு கார் நிறுவனம். இனி பிரபலமான மூன்று ஃபோர்டு கார்களில் வழங்கப்பட உள்ள வேரியண்ட்டுகள், விலை விபரங்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

ஃபிகோ, ஆஸ்பயர், ஃப்ரீஸ்டைல் கார்களின் வேரியண்ட்டுகளை அதிரடியாக குறைத்த ஃபோர்டு!

வசதிகள் மற்றும் பட்ஜெட் அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு அதிக தேர்வுகளை வழங்கும் விதத்தில் கார்களில் வேரியண்ட்டுகள் கொடுக்கப்படுகின்றன. எனினும், சில கார் மாடல்களில் குறிப்பிட்ட வேரியண்ட்டுகளுக்கு வாடிக்கையாளர்கள் முக்கியத்துவம் கொடுக்கப்பதில்லை. இதனை வைத்து, வாடிக்கையாளர்களுக்கும், விற்பனை நடைமுறைகளுக்கும் ஏற்றவாறு ஃபோர்டு கார் நிறுவனம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

ஃபிகோ, ஆஸ்பயர், ஃப்ரீஸ்டைல் கார்களின் வேரியண்ட்டுகளை அதிரடியாக குறைத்த ஃபோர்டு!

இதன்படி, தனது ஃபிகோ, ஆஸ்பயர் மற்றும் ஃப்ரீஸ்டைல் கார்களில் வழங்கப்பட்டு வந்த சில பெட்ரோல், டீசல் வேரியண்ட்டுகளை ஃபோர்டு நிறுவனம் நீக்கி உள்ளது.

ஃபிகோ, ஆஸ்பயர், ஃப்ரீஸ்டைல் கார்களின் வேரியண்ட்டுகளை அதிரடியாக குறைத்த ஃபோர்டு!

கடந்த மாதம் ஃபிகோ, ஆஸ்பயர் மற்றும் ஃப்ரீஸ்டைல் வேரியண்ட்டுகளில் மாற்றம் செய்யப்பட்டதாக ஃபோர்டு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கார் அண்ட் பைக் தளத்திடம் தெரிவித்துள்ளார்.

ஃபிகோ, ஆஸ்பயர், ஃப்ரீஸ்டைல் கார்களின் வேரியண்ட்டுகளை அதிரடியாக குறைத்த ஃபோர்டு!

வாடிக்கையாளர்களுக்கு சரியான விலையில் அதிக மதிப்பை வழங்கும் விதத்தில் வேரியண்ட்டுகளில் சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறி இருக்கிறார்.

ஃபிகோ, ஆஸ்பயர், ஃப்ரீஸ்டைல் கார்களின் வேரியண்ட்டுகளை அதிரடியாக குறைத்த ஃபோர்டு!

இனி ஃபோர்டு ஃபிகோ காரின் பெட்ரோல் மாடலானது இப்போது ஆம்பியன்ட், டைட்டானியம், டைட்டானியம் புளூ ஆகிய வேரியண்ட்டுகளிலும், டீசல் மாடல் டைட்டானியம், டைட்டானியம் புளூ ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் மட்டுமே கிடைக்கும்.

ஃபிகோ, ஆஸ்பயர், ஃப்ரீஸ்டைல் கார்களின் வேரியண்ட்டுகளை அதிரடியாக குறைத்த ஃபோர்டு!

பெட்ரோல் வேரியண்ட்டுகள் ரூ.5.64 லட்சம் முதல் ரூ.7.09 லட்சம் வரையிலான விலையிலும், டீசல் வேரியண்ட்டுகள் ரூ.7.74 லட்சம் முதல் ரூ.8.19 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.

ஃபிகோ, ஆஸ்பயர், ஃப்ரீஸ்டைல் கார்களின் வேரியண்ட்டுகளை அதிரடியாக குறைத்த ஃபோர்டு!

ஃபோர்டு ஆஸ்பயர் பெட்ரோல் மற்றம் டீசல் மாடல்களில் டைட்டானியம் மற்றும் டைட்டானியம் ப்ளஸ் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகள் மட்டுமே இருக்கின்றன. பெட்ரோல் வேரியண்ட்டுகள் ரூ.7.24 லட்சம் முதல் ரூ.7.59 லட்சம் வரையிலான விலையிலும், டீசல் வேரியண்ட்டுகள் ரூ.8.34 லட்சம் முதல் ரூ.8.69 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கும்.

ஃபிகோ, ஆஸ்பயர், ஃப்ரீஸ்டைல் கார்களின் வேரியண்ட்டுகளை அதிரடியாக குறைத்த ஃபோர்டு!

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரின் பெட்ரோல், டீசல் மாடல்கள் டைட்டானியம், டைட்டானியம் ப்ளஸ் மற்றும் ஃப்ளேர் ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் மட்டுமே கிடைக்கும். பெட்ரோல் வேரியண்ட்டுகளுக்கு ரூ.7.09 லட்சம் முதல் ரூ.7.74 லட்சம் வரையிலான விலையிலும், டீசல் வேரியண்ட்டுகள் ரூ.8.19 லட்சம் முதல் ரூ.8.84 லட்சம் வரையிலான விலையிலும் கிடைக்கும்.

ஃபிகோ, ஆஸ்பயர், ஃப்ரீஸ்டைல் கார்களின் வேரியண்ட்டுகளை அதிரடியாக குறைத்த ஃபோர்டு!

ஃபோர்டு ஃபிகோ, ஆஸ்பயர் மற்றும் ஃப்ரீஸ்டைல் கார்களில் ஒரே பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகள்தான் பயன்படுத்தப்படுகின்றன. இந்த காரில் உள்ள 3 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 95 பிஎச்பி பவரையும், 119 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் மாடலில் உள்ள 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 99 பிஎச்பி பவரையும், 215 என்எம் டார்க் திறனையும் வழங்கும். அனைத்து கார்களின் பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகள் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது.

Most Read Articles

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford has revised the variants of Figo, Aspire and Freestyle car models in India.
Story first published: Tuesday, February 9, 2021, 15:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X