மீண்டும் ஆட்டோமேட்டிக் தேர்வில் கொண்டுவரப்படும் ஃபோர்டு ஃபிகோ!! அறிமுகம் எப்போது?

ஃபோர்டு நிறுவனம் ஃபிகோ பெட்ரோல் ஆட்டோமேட்டிக் காரை பிஎஸ்6 வாகனமாக இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வரும் மாதங்களில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த ஃபோர்டு காரை பற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மீண்டும் ஆட்டோமேட்டிக் தேர்வில் கொண்டுவரப்படும் ஃபோர்டு ஃபிகோ!! அறிமுகம் எப்போது?

அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டின் ஃபிகோ ஹேட்ச்பேக் காரின் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் ஏற்கனவே பிஎஸ்4 வெர்சனில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் ஆட்டோமேட்டிக் தேர்வில் கொண்டுவரப்படும் ஃபோர்டு ஃபிகோ!! அறிமுகம் எப்போது?

ஆனால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வந்த புதிய மாசு உமிழ்வு விதியினால் இந்த ஆட்டோமேட்டிக் ஹேட்ச்பேக் காரின் விற்பனையை நிறுத்த வேண்டிய சூழலுக்கு ஃபோர்டு தள்ளப்பட்டது.

மீண்டும் ஆட்டோமேட்டிக் தேர்வில் கொண்டுவரப்படும் ஃபோர்டு ஃபிகோ!! அறிமுகம் எப்போது?

தற்போது மீண்டும் நம் நாட்டில் விற்பனைக்கு வரவுள்ளதாக கூறப்படும் ஃபிகோ பெட்ரோல் ஆட்டோமேட்டிக் காரில் வழக்கமான அதே ட்ராகன் சீரிஸ் 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் தான் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமானதாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் ஆட்டோமேட்டிக் தேர்வில் கொண்டுவரப்படும் ஃபோர்டு ஃபிகோ!! அறிமுகம் எப்போது?

அதேபோல் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டின் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் டிரான்ஸ்மிஷன் தான் இந்த என்ஜின் உடன் இணைக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இதனால் என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றல் அளவுகளில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இருக்காது.

மீண்டும் ஆட்டோமேட்டிக் தேர்வில் கொண்டுவரப்படும் ஃபோர்டு ஃபிகோ!! அறிமுகம் எப்போது?

கிட்டத்தட்ட ஃபிகோவின் மேனுவல்-பெட்ரோல் வேரியண்ட்டில் கிடைக்கும் இயக்க ஆற்றல் தான் இந்த பிஎஸ்6 ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டிலும் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஃபோர்டு ஃபிகோவின் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 95 பிஎச்பி மற்றும் 119 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

மீண்டும் ஆட்டோமேட்டிக் தேர்வில் கொண்டுவரப்படும் ஃபோர்டு ஃபிகோ!! அறிமுகம் எப்போது?

தற்சமயம் இந்த பெட்ரோல் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே வழங்கப்படுகிறது. பெட்ரோல் என்ஜின் தேர்வு மட்டுமின்றி ஃபிகோவில் 1.5 லிட்டர் டர்போ-டீசல் என்ஜின் தேர்வும் கொடுக்கப்படுகிறது.

மீண்டும் ஆட்டோமேட்டிக் தேர்வில் கொண்டுவரப்படும் ஃபோர்டு ஃபிகோ!! அறிமுகம் எப்போது?

அதிகப்பட்சமாக 100 பிஎச்பி மற்றும் 215 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. மற்றப்படி இந்த டீசல் என்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்பட வாய்ப்பில்லை.

மீண்டும் ஆட்டோமேட்டிக் தேர்வில் கொண்டுவரப்படும் ஃபோர்டு ஃபிகோ!! அறிமுகம் எப்போது?

அதேபோல் புதிய ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வை தவிர்த்து வேறெந்த இயந்திர பாகங்கள் அல்லது காஸ்மெட்டிக் மாற்றங்கள் ஃபோர்டு ஃபிகோவில் கொண்டுவரப்படாது. புதிய ஆட்டோமேட்டிக் வேரியண்ட் ஃபிகோவின் மத்திய மற்றும் டாப் வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்படும்.

மீண்டும் ஆட்டோமேட்டிக் தேர்வில் கொண்டுவரப்படும் ஃபோர்டு ஃபிகோ!! அறிமுகம் எப்போது?

இந்தியாவில் ஃபோர்டு ஃபிகோ கார் அம்பியண்டே, டைட்டானியம், டைட்டானியம் ப்லூ என்ற மூன்று விதமான ட்ரிம் நிலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் விலை குறைவான அம்பியண்டே ட்ரிம்-ஐ தவிர்த்து மற்ற இரண்டிலும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்படலாம்.

மீண்டும் ஆட்டோமேட்டிக் தேர்வில் கொண்டுவரப்படும் ஃபோர்டு ஃபிகோ!! அறிமுகம் எப்போது?

ஃபிகோ பெட்ரோல்- ஆட்டோமேட்டிக் காரின் விலை ரூ.7.2 லட்சத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. கியர்பாக்ஸை தவிர்த்து ஆட்டோமேட்டிக் ஃபிகோ காரில் வழங்கப்படும் வசதிகளில், தற்போதைய மேனுவல் வேரியண்ட்களில் இருந்து எந்த மாற்றமும் இருக்காது.

Most Read Articles

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford Figo Petrol Automatic BS6 Launch Soon: Expected Price & Other Details In Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X