இந்திய சந்தையை விட்டு வெளியேறுகிறதா Ford?.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது!

இந்திய சந்தையைவிட்டு பிரபல கார் உற்பத்தி நிறுவனமான Ford (ஃபோர்டு) வெளியேற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் கார் உற்பத்தியாளரின் திடீர் முடிவுகுறித்த முழுமையான விபரத்தை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்திய சந்தையை விட்டு வெளியேறுகிறதா ஃபோர்டு... அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது!

ஃபோர்டு நிறுவனத்திற்கு கடந்த காலத்தில் கிடைத்ததைப் போல் தற்போது விற்பனை பெரியளவில் கிடைக்கவில்லை. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் கடும் விற்பனை சரிவில் சிக்கி ஃபோர்டு தவித்து வருகின்றது. புதுமுகங்கள் மற்றும் அதிக போட்டி போன்ற பல்வேறு காரணங்களால் நிறுவனம் தற்போது இந்தியாவையை விட்டே முழுமையாக வெளியேறும் நிலை உருவாகியுள்ளது.

இந்திய சந்தையை விட்டு வெளியேறுகிறதா ஃபோர்டு... அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது!

தற்போது ஃபோர்டு வெளியிட்டிருக்கும் அறிவிப்பின்படி, நிறுவனம் ஃபிகோ, ஃப்ரீஸ்டைல் மற்றும் அஸ்பையர் உள்ளிட்ட மாடல்களின் உற்பத்தியைக் குறைக்க இருப்பது தெரிய வந்திருக்கின்றது. பத்து சதவீதம் அளவில் உற்பத்தி பணிகள் குறைக்கப்பட இருக்கின்றது. நிறுவனத்தின் உற்பத்தி ஆலை குஜராத் மாநிலத்தில் அமைந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்திய சந்தையை விட்டு வெளியேறுகிறதா ஃபோர்டு... அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது!

இதைத்தொடர்ந்து தமிழகத்தின் தலைநகர் சென்னையிலும் ஓர் கார் உற்பத்தி ஆலையை நிறுவனம் செயல்படுத்தி வருகின்றது. இதனை 2022ம் ஆண்டு வரை இயக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நிலுவையில் இருக்கும் ஆர்டர்களுக்கான வாகனங்களை உற்பத்தி செய்ய சென்னை ஆலையை ஃபோர்டு பயன்படுத்த இருக்கின்றது.

இந்திய சந்தையை விட்டு வெளியேறுகிறதா ஃபோர்டு... அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது!

அதேவேலையில், சர்வீஸ் மற்றும் சிகேடி வாயிலாக விற்பனைச் செய்யப்பட்டு வரும் என்டீயோவர், மஸ்டாங்க் உள்ளிட்ட வாகனங்களை விற்பனைக்கு வழங்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. நிறுவனத்திற்கு இதுவரை 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரையில் இழப்பு ஏற்பட்டிருக்கின்றது. இத்துடன் விற்பனையும் பல மடங்கு தொடர்ச்சியாக சரிவைச் சந்தித்த வண்ணம் இருக்கின்றது.

இந்திய சந்தையை விட்டு வெளியேறுகிறதா ஃபோர்டு... அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது!

அதிகம் விற்பனையாகும் காராக இருக்கும் ஃபோர்டு ஈகோஸ்போர்ட் மாடல் காரின் விற்பனைக் கூட தொடர்ச்சியாக சரிவை நோக்கி பயணித்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலைியல், கடந்த வருடம் மஹிந்திரா நிறுவனத்துடன் ஆன கூட்டணியும் முடிவுக்கு வந்தது. இதுபோன்ற தொடர் வீழ்ச்சியின் காரணமாக இந்தியாவை விட்டு வெளியேறும் திட்டத்தில் ஃபோர்டு களமிறங்கியிருக்கின்றது.

இந்திய சந்தையை விட்டு வெளியேறுகிறதா ஃபோர்டு... அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது!

இந்நிறுவனத்திடம் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்குவதற்கு எந்தவொரு புதிய தயாரிப்பும் இல்லை என கூறப்படுகின்றது. அதேவேலையில் தற்போது விற்பனையில் இருக்கும் ஈகோஸ்போர்ட் காரை புதுப்பிக்கப்பட்ட மாடலாகக் களமிறக்க நினைத்தாலும் அது நிறுவனத்தை தூக்கி நிறுத்தும் அளவிற்கு விற்பனை வளர்ச்சியைப் பெறவில்லை. அதேவேலையில் இத்திட்டத்தை நிறுவனம் கையில் வைத்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.

இந்திய சந்தையை விட்டு வெளியேறுகிறதா ஃபோர்டு... அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது!

எனவே, பழைய செக்மெண்ட் வாகனங்களாக ஃபோர்டு நிறுவனத்தின் ஃபிகோ மற்றும் அஸ்பையர் உள்ளிட்ட வாகனங்கள் காட்சியளிக்கின்றன. இதன் விளைவாக இந்தியர்கள் மத்தியில் இக்கார்களுக்கான மவுசு குறைய தொடங்கியிருக்கின்றது. இருப்பினும், ஃபோர்டு நிறுவனம் இந்திய சந்தையை விட்டு வெளியேற மனம் இல்லாமல் பிற முன்னணி நிறுவனங்களுடன் கூட்டணிக்கு பேச்சு வார்த்தை நடத்தியது.

இந்திய சந்தையை விட்டு வெளியேறுகிறதா ஃபோர்டு... அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது!

அந்தவகையில் ஓலா, ஸ்கோடா ஆட்டோ, எம்ஜி மற்றும் டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுடன் அது பேச்சு வார்த்தை நடத்தியது. ஆனால், அனைவரும் பேச்சுவார்த்தையில் (கூட்டணியில்) உடன்பாடு இல்லை என விலகிக்கொண்டனர். விற்பனை பல மடங்கு குறைந்திருப்பதனால் உற்பத்தி ஆலைகள் 80 ஆயிரம் யூனிட் என்ற திறனில் செயல்பட்டு வருகின்றது.

இந்திய சந்தையை விட்டு வெளியேறுகிறதா ஃபோர்டு... அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது!

இந்த ஆலை ஒட்டுமொத்தமாக 4 லட்சம் யூனிட்டுகள் வரை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. தற்போது தயாரிக்கப்படும் 80 ஆயிரம் யூனிட்டுகளில் பெரும்பாலானவை ஏற்றுமதிக்கானவை ஆகும். ஃபோர்டு நிறுவனம் மிக சமீபத்தில் ஃபிகோ ஏடி வெர்ஷனை இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்கியது.

இந்திய சந்தையை விட்டு வெளியேறுகிறதா ஃபோர்டு... அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது!

விரைவில் புதுப்பிக்கப்பட்ட ஈகோஸ்போர்ட் காரையும் விற்பனைக்குக் கொண்டுவர இருப்பதாக அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தது. இத்துடன், பை-டர்போ வெர்ஷன் என்டீயோவரும் இந்திய சாலையில் வைத்து பல பரீட்சையில் ஈடுபடுத்தி வந்தது. ஆகையால், மிக விரைவில் இக்கார்கள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்திய சந்தையை விட்டு வெளியேறுகிறதா ஃபோர்டு... அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது!

தற்போது ஃபோர்டு எடுத்திருக்கும் முடிவினால் புதுப்பிக்கப்பட்ட ஈகோஸ்போர்ட் மற்றும் பை-டர்போ வெர்ஷன் என்டீயோவர் விற்பனைக்கு வருவது கேள்விக் குறியாக மாறியுள்ளது. அதேவேலையில் இவற்றின் அறிமுகம் அல்லது வெளியேற்றம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை ஃபோர்டு மிக விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்திய சந்தையை விட்டு வெளியேறுகிறதா ஃபோர்டு... அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது!

ஃபோர்டு ஈகோஸ்போர்ட் அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட காராக இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இதன் புதுப்பிக்கப்பட்ட மாடல் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. இந்த எதிர்பார்ப்பிற்கு தற்போது முற்று புள்ளி வைக்கப்பட்டிருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford india to shut down both vehicle manufacturing factories
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X