அறிமுகமானது தானியங்கி பெட்ரோல் எஞ்ஜின் ஃபோர்டு ஃபிகோ! விலையை கேட்டு பிரம்மிச்சு போய்ராதீங்க!

ஃபோர்டு ஃபிகோ காரில் பெட்ரோல் தானியங்கி எஞ்ஜின் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்த காரின் விலை ம மற்றும் சிறப்பு வசதிகள் பற்றிய முக்கிய விபரங்களைக் கீழே காணலாம்.

அறிமுகமானது தானியங்கி பெட்ரோல் எஞ்ஜின் ஃபோர்டு ஃபிகோ! விலையை கேட்டு பிரம்மிச்சு போய்ராதீங்க!

ஃபிகோ கார் பிரியர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை ஃபோர்டு நிறுவனம் இன்று நிறைவேற்றியிருக்கின்றது. நிறுவனம் ஃபிகோ கார் மாடலில் புதிதாக இரு தானியங்கி கியர்பாக்ஸ் கொண்ட வேரியண்டுகளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

அறிமுகமானது தானியங்கி பெட்ரோல் எஞ்ஜின் ஃபோர்டு ஃபிகோ! விலையை கேட்டு பிரம்மிச்சு போய்ராதீங்க!

புதிய தானியங்கி வேரியண்டுகள் டைட்டானியம் (Titanium) மற்றும் டைட்டானியம் ப்ளஸ் (Titanium+) ஆகி பெயர்களில் விற்பனைக்குக் கிடைக்கும். ஃபிகோ மாடலில் கூடுதல் தேர்வை வழங்கி வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில் புதிய தானியங்கி வேரியண்டுகள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன.

அறிமுகமானது தானியங்கி பெட்ரோல் எஞ்ஜின் ஃபோர்டு ஃபிகோ! விலையை கேட்டு பிரம்மிச்சு போய்ராதீங்க!

இதில், டைட்டானியம் தேர்விற்கு ரூ. 7.75 லட்சம் என்ற விலையும், டைட்டானியம் ப்ளஸ் தேர்விற்கு ரூ. 8.20 என்ற விலையையும் ஃபோர்டு நிர்ணயித்துள்ளது. விலைக்கேற்ற ஓர் சிறப்பு வாய்ந்த காராக இது இருக்கும் என ஃபோர்டு நிறுவனம் கூறியுள்ளது. இதற்கு ஏற்ப சில சிறப்பு வசதிகளை தானியங்கி கியர்பாக்ஸ் வசதிக் கொண்ட ஃபிகோவில் நிறுவனம் வழங்கியிருக்கின்றது.

அறிமுகமானது தானியங்கி பெட்ரோல் எஞ்ஜின் ஃபோர்டு ஃபிகோ! விலையை கேட்டு பிரம்மிச்சு போய்ராதீங்க!

ஸ்போர்ட்ஸ் மோட் மற்றும் இன்னும் சில ஷிஃப்ட் அம்சங்கள் இவற்றுடன் சிறந்த செயல்திறன் மற்றும் சிறந்த ரிஃபைன்மென்ட் வசதிகளுடன் ஃபோர்டு ஃபிகோ வந்திருக்கின்றது. இத்தகைய சிறப்பு வசதிகளுடனேயே ஃபோர்டு ஃபிகோ தானியங்கி கார்கள் விற்பனைக்கு வந்திருக்கின்றன.

அறிமுகமானது தானியங்கி பெட்ரோல் எஞ்ஜின் ஃபோர்டு ஃபிகோ! விலையை கேட்டு பிரம்மிச்சு போய்ராதீங்க!

இதற்கு ரூ. 11 ஆயிரம் என்ற முன்தொகையில் புக்கிங் பணிகள் நாடு முழுவதும் தொடங்கியிருக்கின்றது. மிக விரைவில் டெலிவரி பணிகளும் தொடங்கப்பட இருக்கின்றன. ரூபி சிவப்பு, மூன்டஸ்ட் சில்வர், ஸ்மோக் க்ரே, வெள்ளை தங்கம் மற்றும் டைமண்ட் வெள்ளை ஆகிய நிறங்களில் ஃபோர்டு ஃபிகோ தானியங்கி விற்பனைக்குக் கிடைக்கும்.

அறிமுகமானது தானியங்கி பெட்ரோல் எஞ்ஜின் ஃபோர்டு ஃபிகோ! விலையை கேட்டு பிரம்மிச்சு போய்ராதீங்க!

1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜினிலேயே தானியங்கி வசதியை ஃபோர்டு அறிமுகம் செய்துள்ளது. 6 ஸ்பீடு, ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்டர் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 96 பிஎஸ் மற்றும் 119 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

அறிமுகமானது தானியங்கி பெட்ரோல் எஞ்ஜின் ஃபோர்டு ஃபிகோ! விலையை கேட்டு பிரம்மிச்சு போய்ராதீங்க!

டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள்:

மேனுவல் வசதியுடன் விற்பனைக்குக் கிடைக்கும் ஃபிகோ ஸ்டைலிலேயே தானியங்கி வசதிக் கொண்ட ஃபிகோவும் காட்சியளிக்கின்றது. வலை வடிவிலான க்ரில், ஹாலோஜன் முகப்பு மின்விளக்கு ஆகியவற்றுடன் அது காட்சியளிக்கின்றது. இக்காரில் 15 இன்சிலான அலாய் வீல்கள் இடம் பெற்றிருக்கின்றன.

அறிமுகமானது தானியங்கி பெட்ரோல் எஞ்ஜின் ஃபோர்டு ஃபிகோ! விலையை கேட்டு பிரம்மிச்சு போய்ராதீங்க!

தொடர்ந்து, மரக்கரி கருப்பு நிறத்திலான உட்பகுதி, ஃபோர்டின் இணைப்பு வசதி, 7 இன்ச் அளவு கொண்ட தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், நடுத்தர-டிஜிட்டல் திறன் கொண்ட இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், க்ளைமேட் கன்ட்ரோல், பல்வேறு கன்ட்ரோல்கள் அடங்கிய ஸ்டியரிங் வீல், ஏர் பேக்குகள், டிராக்சன் கன்ட்ரோல் சிஸ்டம் மற்றும் ஏபிஎஸ் உள்ளிட்ட அம்சங்கள் தானியங்கி கியர்பாக்ஸ் ஃபிகோவில் இடம்பெற்றிருக்கின்றன.

அறிமுகமானது தானியங்கி பெட்ரோல் எஞ்ஜின் ஃபோர்டு ஃபிகோ! விலையை கேட்டு பிரம்மிச்சு போய்ராதீங்க!

வாரண்டி:

ஃபோர்டு நிறுவனம் ஃபிகோ தானியங்கிக்கு 3 ஆண்டுகள் அல்லது 1 லட்சம் கிமீ என்ற வழக்கமான வாரண்டியை வழங்குகின்றது. தொடர்ந்து,10 ஆயிரம் கிமீ இடைவெளியில் சர்வீஸை வழங்க இருப்பதாக ஃபோர்டு அறிவித்துள்ளது. இத்துடன் இன்னும் சில வாரண்டி சலுகைகையையும் வழங்கப்பட இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

Most Read Articles

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford Launched 2021 Figo Petrol Automatic In India At Rs 7.75 Lakh. Read In Tamil.
Story first published: Thursday, July 22, 2021, 17:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X