வாடிக்கையாளர்களுக்கு பரிசாக ‘சரக்கு’!! ஃபோர்டின் வித்தியாசமான அறிவிப்பு - இந்தியாவில் இல்லைங்க!

ஃபோர்டு, அமெரிக்காவின் மிக பழமையான கார் தயாரிப்பு நிறுவனம். நம் நாட்டை காட்டிலும் அமெரிக்காவில் ஏகப்பட்ட ஃபோர்டு வாடிக்கையாளர்கள் 1950களின் முன்பு இருந்தே அதிகளவில் உள்ளனர்.

வாடிக்கையாளர்களுக்கு பரிசாக ‘சரக்கு’!! ஃபோர்டின் வித்தியாசமான அறிவிப்பு - இந்தியாவில் இல்லைங்க!

அமெரிக்க சந்தையில் ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் மிக சிறந்த அடையாளமாக விளங்கும் பிரான்கோ எப்போதும் சிறப்பாக விற்பனையாகக்கூடிய மாடல் ஆகும். இந்த ஆஃப்-ரோடு வாகனத்திற்கு வாடிக்கையாளர்கள் தொடர்ச்சியாக கிடைத்து வந்தாலும், இந்த சூழ்நிலையை சரியாக பயன்படுத்தி கொள்ளும் நிலையில் ஃபோர்டு இல்லை.

வாடிக்கையாளர்களுக்கு பரிசாக ‘சரக்கு’!! ஃபோர்டின் வித்தியாசமான அறிவிப்பு - இந்தியாவில் இல்லைங்க!

பிரான்கோவின் தயாரிப்பு பணிகளில் சில தடைகள் உள்ளதால், முன்பதிவு செய்பவர்களுக்கு விரைவாக இந்த வாகனத்தை டெலிவிரி செய்ய முடியாமல் ஃபோர்டு நிறுவனம் தவித்து வருகிறது. இதனால் தான், பிரான்கோவை முன்பதிவு செய்து நீண்ட மாதங்களாக காத்திருக்கும் உறுதிச்செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்காக சிறப்பு 'திருப்தி நிதி'-ஐ ஃபோர்டு அறிவித்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வாடிக்கையாளர்களுக்கு பரிசாக ‘சரக்கு’!! ஃபோர்டின் வித்தியாசமான அறிவிப்பு - இந்தியாவில் இல்லைங்க!

பிரான்கோவிற்கான காத்திருப்பு காலம் அதிகரித்துள்ளதால் டீலர்ஷிப் மீதான மதிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் குறையும். இது நேரடியாக டீலர்களை தான் பாதிக்கும். இதனையும் கருத்தில் கொண்டே இந்த 'திருப்தி நிதி'-யினை ஃபோர்டு அறிவித்துள்ளதாகவும் அந்த ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வாடிக்கையாளர்களுக்கு பரிசாக ‘சரக்கு’!! ஃபோர்டின் வித்தியாசமான அறிவிப்பு - இந்தியாவில் இல்லைங்க!

ஃபோர்டின் இந்த நிதியின் மூலம் ஒவ்வொரு பிரான்கோ வாடிக்கையாளரும் 1,000 அமெரிக்க டாலர்கள் வரையில் பெறலாம். ஆனால் இதனை பணமாக பெற முடியாது என்றே செய்திகள் கூறுகின்றன. அதாவது டீலர்ஷிப்- வாடிக்கையாளர் இடையேயான உறவை பலப்படுத்தும் வகையில் ஏதாவது பொருளாகவோ அல்லது இலவச பராமரிப்பு சேவைகளாகவோ பெறலாமாம்.

வாடிக்கையாளர்களுக்கு பரிசாக ‘சரக்கு’!! ஃபோர்டின் வித்தியாசமான அறிவிப்பு - இந்தியாவில் இல்லைங்க!

வாடிக்கையாளர் விரும்பினால் மது பாட்டில்களாக கூட அந்த நிதியை பெற்று கொள்ளலாம் என நகைச்சுவையாக தனது அறிக்கையில் கூறியுள்ள ஃபோர்டு மோட்டார் நிறுவனம், இது அவர்கள் (பிரான்கோ வாடிக்கையாளர்கள்) தங்களது கெத்தை விடாமல், அமைதியாக பொறுமை காத்ததற்கு நாங்கள் தெரிவிக்கும் நன்றி எனவும் அதில் தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு பரிசாக ‘சரக்கு’!! ஃபோர்டின் வித்தியாசமான அறிவிப்பு - இந்தியாவில் இல்லைங்க!

வாடிக்கையாளர்களுக்கு ஆல்கஹாலை வழங்கும் நிறுவனத்தை பார்ப்பது அபூர்வம் தான். இருப்பினும், வாடிக்கையாளர்களுடன் நெருக்கமாக உறவு வைத்து கொள்ள விரும்பும் ஃபோர்டு இவ்வாறான அறிக்கையை வெளியிட்டதில் எந்த ஆச்சிரியமும் இல்லை. ஏனெனில் இதன் மூலமாகவே சந்தையில் நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்க முடியும் என இந்த நிறுவனம் நம்புகிறது.

வாடிக்கையாளர்களுக்கு பரிசாக ‘சரக்கு’!! ஃபோர்டின் வித்தியாசமான அறிவிப்பு - இந்தியாவில் இல்லைங்க!

ஏற்கனவே கூறியதுபோல், பிரான்கோவை முன்பதிவு செய்து, பிறகு அதனை ஆர்டராக மாற்றிய வாடிக்கையாளர்களுக்கே இந்த நிதி வழங்கப்பட உள்ளது. அதாவது, வாகனத்தின் மொத்த தொகையினை செலுத்தி, டெலிவிரிக்காக காத்திருக்க வேண்டும். இத்தகையர்கள் மட்டுமின்றி, பிரான்கோ கடின மேற்கூரை மாற்றத்திற்காக டீலர்ஷிப் ஷோரூமிற்கு வந்தவர்களும் கூட இந்த நிதியினை பெறாமல் என்கிறது ஃபோர்டு.

வாடிக்கையாளர்களுக்கு பரிசாக ‘சரக்கு’!! ஃபோர்டின் வித்தியாசமான அறிவிப்பு - இந்தியாவில் இல்லைங்க!

கடந்த செப்டம்பர் 1ஆம் தேதியில் இருந்து துவங்கிய ஃபோர்டின் இந்த சிறப்பு 'திருப்தி நிதி' அடுத்த ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வரையில் அமலில் இருக்க போகிறது. தற்போதைக்கு, பிரான்கோவை அடுத்த 2022ஆன் ஆண்டில் டெலிவிரி எடுப்பதற்காக முன்பதிவு செய்பவர்களுக்கு பரிசு கிட்டத்தட்ட உறுதி.

சில வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் பரிசு கிடைக்கும் என்று கூற முடியாது. ஏனெனில் இந்த நிதி தொகையினை வாடிக்கையாளர் பொறுத்து வழங்குமாறு டீலர்ஷிப்களுக்கு ஃபோர்டு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. அதாவது எதிர்க்கொள்ளும் சூழலை பொறுத்து வாடிக்கையாளர் பிரிக்கப்பட உள்ளனர்.

வாடிக்கையாளர்களுக்கு பரிசாக ‘சரக்கு’!! ஃபோர்டின் வித்தியாசமான அறிவிப்பு - இந்தியாவில் இல்லைங்க!

இதுகுறித்து ஃபோர்டு பிரான்கோவின் சந்தைப்படுத்துதல் அதிகாரி மார்க் க்ரூபெர் கருத்து தெரிவிக்கையில், ஒவ்வொரு வாடிக்கையாளரும் ஒவ்வொரு விதமான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பர். சிலருக்கு இந்த நிதி தேவையே படாது. ஆனால் சிலருக்கோ பெரிய விஷயமாக இருக்கும். ஆகவே தான் வாடிக்கையாளரை பொறுத்து நிதியை செலவழிக்க டீலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.

வாடிக்கையாளர்களுக்கு பரிசாக ‘சரக்கு’!! ஃபோர்டின் வித்தியாசமான அறிவிப்பு - இந்தியாவில் இல்லைங்க!

இதற்கிடையில் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தை சேர்ந்த டீலர்ஷிப் ஒன்று வேறு விதமாக பிளான் போட்டுள்ளது. அதாவது, 35 பிரான்கோ வாடிக்கையாளர்களை தேர்வு செய்து, ஃபோர்டு நிறுவனம் அவர்களுக்கென ஒதுக்கியுள்ள இந்த நிதி பணத்தில் டெக்ஸாஸில் உள்ள பிரான்கோ ஆஃப்-ரோடீயோ தொழிற்சாலைக்கும், இரு-இரவுகளுக்கு ஓட்டலுக்கும் அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு பரிசாக ‘சரக்கு’!! ஃபோர்டின் வித்தியாசமான அறிவிப்பு - இந்தியாவில் இல்லைங்க!

அமெரிக்காவில் இவ்வாறு வாடிக்கையாளர்களின் மனம் கோணாமல் செயல்பட்டுவரும் ஃபோர்டு நிறுவனம் இந்திய சந்தையில் இருந்து விடைப்பெற்று செல்ல தயாராகி வருகிறது. இணையத்தில் கடந்த சில நாட்களாக ஹாட் டாபிக்காக ஓடும் விஷயங்களில் இதுவும் ஒன்றாகும். கடந்த பத்து வருடங்களில் செவ்ரோலெட், ஹார்லி-டேவிட்சன் என சில பிரபலமான நிறுவனங்கள் நம் நாட்டு சந்தையை விட்டு சென்றுள்ளனர். இதில் ஃபோர்டும் தற்போது ஒன்றாக மாறியுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford learnt to have set up special customer 'Satisfaction Fund' for dealers.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X