வாடிக்கையாளர்களை கவர ஃபோர்டு அதிரடி! அறிமுகத்தை முன்னிட்டு பெட்ரோல் தானியங்கி ஃபிகோவின் டீசர் படம் வெளியீடு!

ஃபோர்டு ஃபிகோ காரின் பெட்ரோல் தானியங்கி கியர்பார்க்ஸ் வசதிக் கொண்ட காரின் புகைப்படங்களை அறிமுகத்திற்கு முன்னரே நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

வாடிக்கையாளர்களை கவர ஃபோர்டு அதிரடி! அறிமுகத்தை முன்னிட்டு பெட்ரோல் தானியங்கி ஃபிகோவின் டீசர் படம் வெளியீடு!

ஃபோர்டு நிறுவனம் மிக விரைவில் அதன் பிரபல கார் மாடலான ஃபிகோ-வில் புதிய தானியங்கி தேர்வை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இது பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் களமிறங்க இருக்கின்றது. இந்த நிலையில், புதிய பெட்ரோல் தானியங்கி எஞ்ஜின் கார் எப்படி இருக்கும் என்பது பற்றிய டீசர் படங்களை நிறுவனம் தற்போது வெளியிட்டிருக்கின்றது.

வாடிக்கையாளர்களை கவர ஃபோர்டு அதிரடி! அறிமுகத்தை முன்னிட்டு பெட்ரோல் தானியங்கி ஃபிகோவின் டீசர் படம் வெளியீடு!

விற்பனைக்கு வருவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஃபோர்டு நிறுவனம் டீசர் புகைப்படங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருப்பது அதன் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் படங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. போர்வை போர்த்தப்பட்ட நிலையில் காரின் முகப்பு பகுதி மட்டும் காட்சியளிக்கும் வகையில் படம் வெளியிடப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களை கவர ஃபோர்டு அதிரடி! அறிமுகத்தை முன்னிட்டு பெட்ரோல் தானியங்கி ஃபிகோவின் டீசர் படம் வெளியீடு!

ஃபோர்டு ஃபிகோ காரில் தற்போது வரை தானியங்கி தேர்வு கிடைக்காதது ஓர் மிகப்பெரிய குறையாகவே இருந்து வருகின்றது. இதன் வாடிக்கையாளர்கள் தானியங்கி வசதி எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்த நிலையில் நிறுவனம் தானியங்கி வசதியுடன் ஃபிகோவை களமிறக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

வாடிக்கையாளர்களை கவர ஃபோர்டு அதிரடி! அறிமுகத்தை முன்னிட்டு பெட்ரோல் தானியங்கி ஃபிகோவின் டீசர் படம் வெளியீடு!

இதன் அறிமுகம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதமே நடைபெற்று விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கோவிட்-19 வைரசால் ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலை இதன் அறிமுகத்தை ஒத்தி வைத்தது. இவ்வாறு நீண்ட நீட்கள் இழுபறி நீடித்து வந்தநிலையில் தற்போது ஃபோர்டு ஃபிகோ காரை அறிமுகம் செய்வதில் தீவிரமாக களமிறங்கியிருக்கின்றது.

வாடிக்கையாளர்களை கவர ஃபோர்டு அதிரடி! அறிமுகத்தை முன்னிட்டு பெட்ரோல் தானியங்கி ஃபிகோவின் டீசர் படம் வெளியீடு!

ஈகோஸ்போர்ட் மாடலில் காணப்படும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் தானியங்கி கியர்பாக்ஸே ஃபிகோ காரில் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த 1.5 லிட்டர், 3 சிலிண்டர் நேட்சுரல்லி அஸ்பயர்டு மோட்டார் 96 பிஎஸ் மற்றும் 119 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது.

வாடிக்கையாளர்களை கவர ஃபோர்டு அதிரடி! அறிமுகத்தை முன்னிட்டு பெட்ரோல் தானியங்கி ஃபிகோவின் டீசர் படம் வெளியீடு!

இந்த எஞ்ஜின் தற்போது 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த எஞ்ஜின் கொண்ட ஃபோர்டு ஃபிகோ 18.5 கிமீ வரை ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மைலேஜ் தரும். இந்த எஞ்ஜின் மாற்றத்தை தவிர வேறு எந்த மாற்றத்தையும் தானியங்கி ஃபிகோவில் எதிர்பார்க்க முடியாது என தெரிகின்றது.

வாடிக்கையாளர்களை கவர ஃபோர்டு அதிரடி! அறிமுகத்தை முன்னிட்டு பெட்ரோல் தானியங்கி ஃபிகோவின் டீசர் படம் வெளியீடு!

ஃபிகோ மேனுவல் வேரியண்ட் ரூ. 5.85 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இதைக் காட்டிலும் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 60 ஆயிரம் கூடுதல் விலையில் தானியங்கி வேரியண்ட் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கார் மாருதி சுசுகி ஸ்விஃப்ட் ஏஎம்டி மற்றும் ஹூண்டாய் நியோஸ் ஏஎம்டி ஆகிய கார்களுக்கு போட்டியாக இந்தியாவில் களமிறங்க இருக்கின்றது.

வாடிக்கையாளர்களை கவர ஃபோர்டு அதிரடி! அறிமுகத்தை முன்னிட்டு பெட்ரோல் தானியங்கி ஃபிகோவின் டீசர் படம் வெளியீடு!

போட்டி கார்கள் ரூ. 6.86 லட்சம் மற்றும் ரூ. 6.62 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆகையால், குறைந்த விலையில் இரண்டு போட்டியாளர்களுக்கும் ஃபோர்டு ஃபிகோ டஃப் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கியர்பாக்ஸ் தேர்வை வேறு எந்த மாற்றமும் ஃபிகோவில் கிடைக்காது என்பதால் தற்போது கிடைக்கும் அதே வண்ணம் மற்றும் வசதிகளுடனேயே தானியங்கி ஃபிகோ கிடைக்க இருக்கின்றது.

வாடிக்கையாளர்களை கவர ஃபோர்டு அதிரடி! அறிமுகத்தை முன்னிட்டு பெட்ரோல் தானியங்கி ஃபிகோவின் டீசர் படம் வெளியீடு!

தற்போது விற்பனையில் இருக்கும் ஃபிகோ கார்கள் 7 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், லெதர் போர்வை போர்த்தப்பட்ட ஸ்டியரிங் வீல், தானியங்கி ஏசி, ஸ்டியரிங் வீல் ஆடியோ கன்ட்ரோல் வசதி, பொத்தான் மூலம் அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட கண்ணாடிகள், இணைப்பு வசதி, ரிமோட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

குறிப்பு: காரின் புகைப்படங்கள் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford Reveals Figo Petrol Automatic Officially Ahead Of India Launch. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X