இந்த லாக்டவுண் காலத்துல உங்க காரை எப்படி பாதுகாக்கணும்... ஃபோர்டு அறிவுரை! இது எல்லா வாகனத்துக்கும் பொருந்தும்

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு இந்த லாக்டவுண் காலத்தில் உங்கள் கார்களை எப்படி பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதற்கான அறிவுரைகளை வழங்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

இந்த லாக்டவுண் காலத்துல உங்க காரை எப்படி பாதுகாக்கணும்... ஃபோர்டு கூறும் அறிவுரை... இது எல்லா வாகனத்துக்கும் பொருந்தும்!

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவல் காரணமாக தற்போது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மக்கள் மட்டுமின்றி அவர்கள் பயன்படுத்தும் வாகனங்களும் பார்க்கிங் பகுதிகளில் முடங்கிக் கிடக்கின்றன.

இந்த லாக்டவுண் காலத்துல உங்க காரை எப்படி பாதுகாக்கணும்... ஃபோர்டு கூறும் அறிவுரை... இது எல்லா வாகனத்துக்கும் பொருந்தும்!

ஒரு சில நாட்களுக்கு மட்டும் வாகனங்கள் இயக்கமற்ற நிலையில் முடங்கி கிடக்குமானால் அது எந்த சிக்கலும் ஏற்படாது. ஆனால், நீண்ட நாட்கள் வாகனங்கள் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்படுமானால் சிலவற்றை நாம் முன்னெச்சரிக்கையாக செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்பட்சத்திலேயே மீண்டும் காரை பயன்படுத்தும்போது எந்த சிக்கலும் ஏற்படாது.

இந்த லாக்டவுண் காலத்துல உங்க காரை எப்படி பாதுகாக்கணும்... ஃபோர்டு கூறும் அறிவுரை... இது எல்லா வாகனத்துக்கும் பொருந்தும்!

இதற்கான வழிகாட்டுதல்களையே ஃபோர்டு நிறுவனம் தற்போது வழங்கியிருக்கின்றது. கொரோனா லாக்டவுண் காலத்தில் வாகனங்களை பாதுகாப்பாக வைத்திருக்க இந்த பதிவு நிச்சயம் உங்களுக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

இந்த லாக்டவுண் காலத்துல உங்க காரை எப்படி பாதுகாக்கணும்... ஃபோர்டு கூறும் அறிவுரை... இது எல்லா வாகனத்துக்கும் பொருந்தும்!

குறிப்பு 1

நீங்க உங்க வாகனத்தை நீண்ட நாட்கள் நிறுத்தி வைக்கப் போகிறீர்கள் என்றால், நிச்சயம், அந்த வாகனத்தை பாதுகாப்பான பார்க்கிங் பகுதியில் நிறுத்த வேண்டும். பார்க்கிங் வசதி என்னிடத்தில் இல்லை என கூறும் நபர்கள் காரை பார்க் செய்த பின்னர் முழு போர்வை கொண்டு அதை மூட வேண்டும்.

இந்த லாக்டவுண் காலத்துல உங்க காரை எப்படி பாதுகாக்கணும்... ஃபோர்டு கூறும் அறிவுரை... இது எல்லா வாகனத்துக்கும் பொருந்தும்!

இந்த செயல் வெயில், மழை, தூசி போன்றவற்றில் இருந்து உங்கள் வாகனங்களை பாதுகாக்க உதவும். தொடர்ந்து, மீண்டும் பயன்படுத்த எடுக்கும்போது தூய்மையாகவும், எடுத்த உடனேயே பயன்படுத்துவதற்கு ஏதுவாகவும் இருக்கும். ஆகையால், நல்ல தரமான கார் போர்வையை பயன்படுத்தி காரை பாதுகாப்பான இடத்தில் நிறுத்துவது மிக சிறந்த செயல் ஆகும்.

இந்த லாக்டவுண் காலத்துல உங்க காரை எப்படி பாதுகாக்கணும்... ஃபோர்டு கூறும் அறிவுரை... இது எல்லா வாகனத்துக்கும் பொருந்தும்!

குறிப்பு 2

டயரில் காற்றின் அளவை சரிபார்த்து பின்னர் நிறுத்த வேண்டும். குறைந்த காற்றுடன் காரை நிறுத்தினால், கால நிலையால் டயரின் பக்கவாட்டு பகுதி சேதமடையலாம். அதாவது, வெயில் மற்றும் மழை போன்றவற்றால் டயரின் பக்கவாட்டு சுவர் பகுதி வெடிப்புற ஆரம்பிக்கும். இதனைத் தவிர்க்க வேண்டுமானால் வாகனத்தை நிறுத்துமுன் காற்றை முழுமையாக நிரப்பி பின்னர் நிறுத்த வேண்டும்.

இந்த லாக்டவுண் காலத்துல உங்க காரை எப்படி பாதுகாக்கணும்... ஃபோர்டு கூறும் அறிவுரை... இது எல்லா வாகனத்துக்கும் பொருந்தும்!

குறிப்பு 3

ஹேண்ட் பிரேக் வேண்டவே வேண்டாம். நீண்ட நாட்கள் ஹேண்ட் பிரேக் செயல்பாட்டில் இருக்குமானால் அது அப்படியே உறைந்து (ஸ்டிரக்) நிற்க நேரிடலாம். இந்த நிலை ஏற்படுமானால் மெக்கானிக்கின் உதவியின்றி வாகனத்தை நகர்த்துவது இயலாத காரியமாக மாறிவிடும்.

இந்த லாக்டவுண் காலத்துல உங்க காரை எப்படி பாதுகாக்கணும்... ஃபோர்டு கூறும் அறிவுரை... இது எல்லா வாகனத்துக்கும் பொருந்தும்!

எனவேதான் இந்த நிலையை தவிர்க்க நீண்ட நாட்கள் நிறுத்தத்தின்போது ஹேண்ட் பிரேக்கை எக்காரணத்தைக் கொண்டும் பயன்படுத்த வேண்டாம் என வாகனத்துறை வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். இதற்கு பதிலாக கியரில் வாகனத்தை நிறுத்த அறிவுறுத்துகின்றனர். இதனையேதான் ஃபோர்டு நிறுவனமும் கூறியுள்ளது. இதனால் எந்த பிரச்னையும் ஏற்படாது எனவும் அது கூறியுள்ளது.

இந்த லாக்டவுண் காலத்துல உங்க காரை எப்படி பாதுகாக்கணும்... ஃபோர்டு கூறும் அறிவுரை... இது எல்லா வாகனத்துக்கும் பொருந்தும்!

குறிப்பு 4

எரிபொருள் தொட்டியை நிரப்ப முழுமையாக நிரப்ப வேண்டும். நிறுத்த போற வண்டிக்கு எதுக்குங்க டேங்க் ஃபில் பண்ணனும்னு என்ற கேள்வி உங்கள் மத்தியில் எழும்பலாம். இதுக்கு ஓர் காரணம் இருக்குங்க. எரிபொருள் தொட்டியின் உட்பகுதி உலோகத்தால் தயாரிக்கப்பட்டவை. இது எளிதில் துருப்பிடிக்கும். இதனைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே பெட்ரோல் டேங்கை முழுமையாக நிரப்ப வேண்டும் என ஃபோர்டு கூறியுள்ளது.

இந்த லாக்டவுண் காலத்துல உங்க காரை எப்படி பாதுகாக்கணும்... ஃபோர்டு கூறும் அறிவுரை... இது எல்லா வாகனத்துக்கும் பொருந்தும்!

குறிப்பு 5

பேட்டரியின் இணைப்பை துண்டித்து விடவும். தேவையற்ற பேட்டரி விரையத்தைத் தவிர்க்க இதனைத் துண்டிப்பதே சிறந்தது. இதனைச் செய்யாமல் விடும்போது பேட்டரியின் மின்சார திறன் முழுமையாக தீர்ந்துவிடும். இதனால், காரை ஸ்டார்ட் செய்வது மிக சிரமமாக மாறிவிடும். இந்த நிலையைத் தவிர்ப்பதற்காகவே காரின் பேட்டரியை தனித்துவிட அறிவுறுத்தப்படுகின்றது.

இந்த லாக்டவுண் காலத்துல உங்க காரை எப்படி பாதுகாக்கணும்... ஃபோர்டு கூறும் அறிவுரை... இது எல்லா வாகனத்துக்கும் பொருந்தும்!

குறிப்பு 6

ஒரு காரின் ஆரோக்கியம் அதன் எஞ்ஜினை பராமரிப்பதிலேயே இருக்கின்றது. தரமான எஞ்ஜின் ஆயிலை பயன்படுத்துவதன் வாயிலாக எஞ்ஜினை நல்ல முறையில் பராமரிக்க முடியும். ஆயில்கள் எஞ்ஜின் உராய்வை குறைக்க பயன்படுத்தப்படுகின்றன. ஆகையால், இது அதிக அழுக்கு மற்றும் தூசிகளைக் கொண்டிருக்கும்.

இந்த லாக்டவுண் காலத்துல உங்க காரை எப்படி பாதுகாக்கணும்... ஃபோர்டு கூறும் அறிவுரை... இது எல்லா வாகனத்துக்கும் பொருந்தும்!

இத்தகைய ஆயிலை அப்படியே இயக்கமற்ற வாகனத்தில் விட்டுவிட்டால் அது சிக்கலை ஏற்படுத்தும். ஆகையால், ஒரு முறை பரிசோதித்துவிட்டு பின்னர் வாகனத்தை நீண்ட நாள் இயக்கமற்ற நிலையில் விடுவது சிறந்தது.

இந்த லாக்டவுண் காலத்துல உங்க காரை எப்படி பாதுகாக்கணும்... ஃபோர்டு கூறும் அறிவுரை... இது எல்லா வாகனத்துக்கும் பொருந்தும்!

குறிப்பு 7

உட்பகுதியை சுத்தமாக வச்சிக்கணும். தேவையற்றை பொருட்களை காரின் உட்பகுதியில் விட்டுவிட்டு செல்வதை தவிர்க்க வேண்டும் என ஃபோர்டு அறிவுறுத்துகின்றது. குறிப்பாக, காருக்குள் சிதறிக் கிடக்கும் உணவு பொருட்கள், தேவையற்ற மின்சார சாதனங்கள் ஆகியவற்றை வெளியேற்றிவிட வேண்டும் என அது கூறுகின்றது. தேவைற்ற ஒவ்வாமை மற்றும் துர்நாற்றங்களைப் போக்க இது வழிவகுக்கும்.

Most Read Articles

English summary
Ford Shares Tips On How To Maintain Your Car During Lockdown. Read In Tamil.
Story first published: Thursday, May 27, 2021, 14:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X