Just In
- 1 hr ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 1 hr ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 3 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 3 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நம்பவே முடியல... உற்பத்தி பணிக்கு முற்று புள்ளி வைக்கும் ஃபோர்டு... எங்கு தெரியுமா?
மிகப்பெரிய ஜாம்பவான் கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்டு குறிப்பிட்ட ஓர் நாட்டில் உற்பத்தி பணியை முற்றிலுமாக நிறுத்த இருப்பதாக தகவல் வெளியிட்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ஃபோர்டு நிறுவனம் புதிய கார் உற்பத்தி பணியை முற்றிலுமாக நிறுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட ஒரு நாட்டில் மட்டுமே இந்த நடவடிக்கையை அது மேற்கொள்ள இருக்கின்றது. இந்த திட்டம் ஃபோர்டின் உலகளாவிய மறுசீரமைப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.

இதனடிப்படையில் பல்வேறு மாற்றங்களை உலகளவில் ஃபோர்டு நிறுவனம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே இப்புதிய தகவல் வெளியாகியிருக்கின்றது. இந்நிறுவனம் பிரேசில் நாட்டில் மேற்கொண்டு வரும் கார் உற்பத்தி பணியை முற்றிலுமாக நிறுத்த திட்டமிட்டிருக்கின்றது.

இந்த நாட்டில் செயல்பட்டு வரும் கேமகரி (Camaçari) மற்றும் தவுபேட் (Taubaté) ஆகிய ஆலைகளிலேயே உற்பத்தி பணிகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், ஹரிசோன்டே ஆலையில் மட்டும் உற்பத்தி பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. அதாவது, கார்களுக்கான உதிரிபாகங்களின் உற்பத்தி மட்டுமே செய்யப்பட இருக்கின்றது. புதிய கார்கள் தயாரிப்பு இங்கு மேற்கொள்ளப்படாது.

உதிரிபாக உற்பத்தி பணியும்கூட இந்த ஆண்டின் நான்காம் காலாண்டு வரை மட்டுமே செய்யப்பட என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. விற்பனைக்கு பிந்தைய சேவையை தங்கு தடையின்றி வழங்கும் நோக்கில் உதிரிபாக உற்பத்தி பணியை ஹரிசோன்டே ஆலையில் செய்ய ஃபோர்டு திட்டமிட்டிருக்கின்றது.

உற்பத்தி பணிகளை நிறுத்தினால் புதிய கார்கள் விற்பனையில் தொடர்ந்து ஈடுபடு இருப்பதாக ஃபோர்டு நிறுவனம் கூறியிருக்கின்றது. அதாவது, இறக்குமதி வாயிலாக புதிய கார்களை பிரேசிலில் இருந்து விற்பனைக்குக் கொண்டு செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நடவடிக்கையின் காரணமாக தற்போது பிரேசிலில் விற்பனைக்குக் கிடைக்கும் குறைந்த விலை கார் மாடல்களான ஈகோஸ்போர்ட், கேஏ (ஃபிகோ) மற்றும் டி4 எஸ்யூவி கார்கள் சந்தையை விட்டு வெளியேறும் சூழ்நிலை உருவாகியிருக்கின்றது. ஆனால், இதில் ஈகோஸ்போர்ட் கார் மட்டும் விற்பனையில் தொடர்ந்து நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு இக்கார் பிரேசிலில் விற்பனைச் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், இந்நாட்டில் இறக்குமதி வரி மிக அதிகம் என்பதால் ஃபோர்டின் இந்த செயல்பாட்டிற்கு ஆப்பு ஏற்படலாம் என யூகிக்கப்படுகின்றது.

இருப்பினும், ஃபோர்டு இறக்குமதி வாயிலாக பிரேசில் சந்தையில் வர்த்தகத்தைத் தொடர இருப்பதாக அறிவித்திருப்பதால் நிச்சயம் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து புதிய கார்களை ஏற்றுமதி செய்து அது விற்பனைக்கு வழங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், ஃபோர்டு இந்தியாவிற்கு பெரியளவில் ஏற்றுமதிக்கான ஆர்டர் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

இது ஃபோர்டு இந்தியா உற்பத்தி பணியை அதிகரிக்கச் செய்யவும், மேம்படவும் உதவும். அதேசயம், தாய்லாந்து, ரஸ்யா மற்றும் ரோமானியா ஆகிய நாடுகளில் செயல்படும் உற்பத்தி ஆலைகளுக்கும் ஏற்றுமதிக்கான ஆர்டர் கிடைக்க அதிக வாய்ப்பு உருவாகியிருக்கின்றது.