மொபைல் கிளினிக், டெஸ்டிங் லேப் பார்த்திருப்பீங்க... கார் ஷோரூம் பாத்திருக்கிங்களா... இங்கு பார்க்க முடியும்...

மொபைல் கிளினிக், டெஸ்டிங் லேப் போல் கார்களுக்கான மொபைல் ஷோரூமை சிட்ரோன் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.

மொபைல் கிளினிக், டெஸ்டிங் லேப் பார்த்திருப்பீங்க... கார் ஷோரூம் பாத்திருக்கிங்களா... இங்கு பார்க்க முடியும்...

பிரெஞ்சு நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான சிட்ரோன் விரைவில் இந்தியாவில் தனது கால் தடத்தைப் பதிக்க இருக்கின்றது. இதனை முன்னிட்டு தனது விற்பனையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் முயற்சியில் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.

மொபைல் கிளினிக், டெஸ்டிங் லேப் பார்த்திருப்பீங்க... கார் ஷோரூம் பாத்திருக்கிங்களா... இங்கு பார்க்க முடியும்...

முதல் கட்டமாக நாட்டின் மிக முக்கியமான 10 நகரங்களில் பத்து ஷோரூம்களை திறக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனடிப்படையில் தனது முதல் கார் ஷோரூமை குஜராத்தில் உள்ள ஆமதாபாத்தில் மிக சமீபத்தில் சிட்ரோன் தொடங்கி வைத்தது.

மொபைல் கிளினிக், டெஸ்டிங் லேப் பார்த்திருப்பீங்க... கார் ஷோரூம் பாத்திருக்கிங்களா... இங்கு பார்க்க முடியும்...

இதனைத் தொடர்ந்து நாட்டின் பிற பகுதிகளான சென்னை, டெல்லி, மும்பை, புனே, கொல்கத்தா, கொச்சின் பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் குருகிராம் ஆகிய நகரங்களிலும் தனது ஷோரூம்களை திறந்து நெட்வொர்க்கை பலப்படுத்த இருக்கின்றது.

மொபைல் கிளினிக், டெஸ்டிங் லேப் பார்த்திருப்பீங்க... கார் ஷோரூம் பாத்திருக்கிங்களா... இங்கு பார்க்க முடியும்...

இந்த புதிய ஷோரூம்கள் 'லா மெய்சன் சிட்ரோன்' (La Maison Citroen) எனும் பெயரில் களமிறங்க இருக்கின்றன. இது ஓர் பிரெஞ்சு மொழி வார்த்தை ஆகும். இதற்கு தமிழில் சிட்ரோனின் இல்லம் என்பதே பொருள் ஆகும். இந்த பெயரிலேயே நாட்டின் சில இடங்களில் மொபைல் ஷோரூம்களாக இவை பயன்பாட்டிற்கு வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மொபைல் கிளினிக், டெஸ்டிங் லேப் பார்த்திருப்பீங்க... கார் ஷோரூம் பாத்திருக்கிங்களா... இங்கு பார்க்க முடியும்...

இந்நிறுவனம், தனது அறிமுகத்தின் நிகழ்வாக சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் காரை முதலில் களமிறக்க இருக்கின்றது. உலகளவில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் தயாரிப்புகளில் இதுவும் ஒன்று. இது இந்தியர்களின் மனம் கவர்ந்த வாகனமாக மாறும் என்ற நம்பிக்கையில் இக்காரை களமிறக்க அது திட்டமிட்டிருக்கின்றது.

மொபைல் கிளினிக், டெஸ்டிங் லேப் பார்த்திருப்பீங்க... கார் ஷோரூம் பாத்திருக்கிங்களா... இங்கு பார்க்க முடியும்...

இந்த காரின் அறிமுகம் வருகின்ற 15ம் தேதி அரங்கேற இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதில், 2.0 லிட்டர் டீசல் எஞ்ஜினையே சிட்ரோன் பயன்படுத்தியிருக்கின்றது. இது அதிகபட்சமாக 175 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடியது. இந்த எஞ்ஜின் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வில் மட்டுமே கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொபைல் கிளினிக், டெஸ்டிங் லேப் பார்த்திருப்பீங்க... கார் ஷோரூம் பாத்திருக்கிங்களா... இங்கு பார்க்க முடியும்...

இக்காரின் விலை மற்றும் பிற சிறப்பம்சங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. அவை, வரும் பிப்ரவரி 15ம் தேதி வெளியிடப்பட இருக்கின்றன.

Most Read Articles

மேலும்... #சிட்ரோன் #citroen
English summary
French Car Maker Citroen Launches A Mobile Showroom. Read In Tamil.
Story first published: Sunday, February 7, 2021, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X