நடப்பாண்டு விற்பனைக்கு வந்ததில் அதிக மைலேஜ் வழங்கும் பெட்ரோல் கார்கள்... மாருதி செலிரியோ இவ்ளோ தருதா?

நடப்பாண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதில் அதிக மைலேஜ் வழங்க கூடிய பெட்ரோல் இன்ஜின் கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நடப்பாண்டு விற்பனைக்கு வந்ததில் அதிக மைலேஜ் வழங்கும் பெட்ரோல் கார்கள்... மாருதி செலிரியோ இவ்ளோ தருதா?

புதிய கார் வாங்கும்போது இந்திய வாடிக்கையாளர்கள் அதிகம் கவனிக்கும் ஒரு விஷயம் மைலேஜ்தான். அதுவும் தற்போது எரிபொருள் விலை மிகவும் அதிகமாக உள்ளதால், முன்பை விட தற்போது மைலேஜிற்கு வாடிக்கையாளர்கள் அதிக முக்கியத்துவம் வழங்க தொடங்கியுள்ளனர். பொதுவாக டீசல் இன்ஜின்கள்தான் அதிக மைலேஜ் வழங்கும்.

நடப்பாண்டு விற்பனைக்கு வந்ததில் அதிக மைலேஜ் வழங்கும் பெட்ரோல் கார்கள்... மாருதி செலிரியோ இவ்ளோ தருதா?

ஆனால் பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு பிறகு டீசல் இன்ஜின்களுக்கு கார் உற்பத்தி நிறுவனங்கள் அதிக முக்கியத்துவம் வழங்குவதில்லை. குறிப்பாக மாருதி சுஸுகி போன்ற முன்னணி நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக டீசல் இன்ஜின் கார்களின் விற்பனையை நிறுத்தி விட்டன. தற்போதைய நிலையில் அவை பெட்ரோல் இன்ஜின் மாடல்களை மட்டுமே விற்பனை செய்கின்றன.

நடப்பாண்டு விற்பனைக்கு வந்ததில் அதிக மைலேஜ் வழங்கும் பெட்ரோல் கார்கள்... மாருதி செலிரியோ இவ்ளோ தருதா?

இந்த சூழலில் நடப்பு 2021ம் ஆண்டு இந்திய சந்தையில் ஏராளமான பெட்ரோல் இன்ஜின் கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில், சிறப்பான மைலேஜை வழங்கும் முக்கியமான கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். அதிக மைலேஜ் வழங்க கூடிய பெட்ரோல் இன்ஜின் காரை நீங்கள் தேடி கொண்டிருந்தால் இந்த செய்தி உங்களுக்கு உதவி செய்யும்.

நடப்பாண்டு விற்பனைக்கு வந்ததில் அதிக மைலேஜ் வழங்கும் பெட்ரோல் கார்கள்... மாருதி செலிரியோ இவ்ளோ தருதா?

மாருதி சுஸுகி செலிரியோ : ஒரு லிட்டருக்கு 26.68 கிலோ மீட்டர்

மாருதி சுஸுகி நிறுவனம் செலிரியோ காரின் புதிய தலைமுறை மாடலை நடப்பாண்டு விற்பனைக்கு கொண்டு வந்தது. புதிய தலைமுறை மாடலில் டிசைன் மற்றும் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. புதிய தலைமுறை செலிரியோ காரில், ட்யூயல்ஜெட் கே10 1.0 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

நடப்பாண்டு விற்பனைக்கு வந்ததில் அதிக மைலேஜ் வழங்கும் பெட்ரோல் கார்கள்... மாருதி செலிரியோ இவ்ளோ தருதா?

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 67 ஹெச்பி பவரையும், 89 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த காரின் VXi AMT வேரியண்ட் ஒரு லிட்டருக்கு 26.68 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது. அதே நேரத்தில் ZXi மற்றும் ZXi+ வேரியண்ட்கள் லிட்டருக்கு 26 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மேனுவல் வேரியண்ட்கள் லிட்டருக்கு 24.97-25.24 கிலோ மீட்டர் மைலேஜை வழங்க கூடியவை.

நடப்பாண்டு விற்பனைக்கு வந்ததில் அதிக மைலேஜ் வழங்கும் பெட்ரோல் கார்கள்... மாருதி செலிரியோ இவ்ளோ தருதா?

ரெனால்ட் கைகர் : ஒரு லிட்டருக்கு 20.53 கிலோ மீட்டர்

சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரான ரெனால்ட் கைகர், 1.0 லிட்டர் டர்போ மற்றும் 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் என மொத்தம் 2 விதமான இன்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது. இதில் டர்போ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 100 ஹெச்பி பவரையும், 152 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. அதே சமயம் நேச்சுரலி அஸ்பிரேட்டட் இன்ஜின் அதிகபட்சமாக 72 ஹெச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் வல்லமை வாய்ந்தது.

நடப்பாண்டு விற்பனைக்கு வந்ததில் அதிக மைலேஜ் வழங்கும் பெட்ரோல் கார்கள்... மாருதி செலிரியோ இவ்ளோ தருதா?

இந்த காரின் மேனுவல் டர்போ மாடல் ஒரு லிட்டருக்கு 20.53 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியது. அதே நேரத்தில் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் மாடல் ஒரு லிட்டருக்கு 19.17 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கும் திறன் வாய்ந்தது. இந்தியாவில் தற்போது அதிகம் விற்பனையாகும் ரெனால்ட் நிறுவனத்தின் கார்களில் ஒன்றாக கைகர் திகழ்கிறது.

நடப்பாண்டு விற்பனைக்கு வந்ததில் அதிக மைலேஜ் வழங்கும் பெட்ரோல் கார்கள்... மாருதி செலிரியோ இவ்ளோ தருதா?

ஹூண்டாய் ஐ20 என்-லைன் : ஒரு லிட்டருக்கு 20.25 கிலோ மீட்டர்

இந்தியாவில் நடப்பாண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட விசாலமான மற்றும் ஸ்போர்ட்டியான ஹேட்ச்பேக் கார்களில் ஹூண்டாய் ஐ20 என்-லைன் மிகவும் முக்கியமானது. இந்த காரில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 120 ஹெச்பி பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

நடப்பாண்டு விற்பனைக்கு வந்ததில் அதிக மைலேஜ் வழங்கும் பெட்ரோல் கார்கள்... மாருதி செலிரியோ இவ்ளோ தருதா?

டிசிடி டிரான்ஸ்மிஷன் தேர்வில் இந்த இன்ஜின் ஒரு லிட்டருக்கு 20.25 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியது. அதே நேரத்தில் ஐஎம்டி டிரான்ஸ்மிஷன் தேர்விலும் இந்த இன்ஜின் கிட்டத்தட்ட இதே அளவிற்கான மைலேஜை வழங்குகிறது. அதாவது ஐஎம்டி டிரான்ஸ்மிஷன் தேர்வில் இந்த இன்ஜின் ஒரு லிட்டருக்கு 20 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு விற்பனைக்கு வந்ததில் அதிக மைலேஜ் வழங்கும் பெட்ரோல் கார்கள்... மாருதி செலிரியோ இவ்ளோ தருதா?

டாடா பன்ச் - ஒரு லிட்டருக்கு 18.97 கிலோ மீட்டர்

நடப்பாண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட அற்புதமான கார்களில் ஒன்று டாடா பன்ச். இந்த மைக்ரோ எஸ்யூவி ரக கார், குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளது. இந்த காரில், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தேர்வு வழங்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு விற்பனைக்கு வந்ததில் அதிக மைலேஜ் வழங்கும் பெட்ரோல் கார்கள்... மாருதி செலிரியோ இவ்ளோ தருதா?

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 86 ஹெச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வில் இந்த இன்ஜின் ஒரு லிட்டருக்கு 18.97 கிலோ மீட்டர் மைலேஜையும், ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் தேர்வில் இந்த இன்ஜின் ஒரு லிட்டருக்கு 18.82 கிலோ மீட்டர் மைலேஜையும் வழங்கும். இது அராய் சான்று வழங்கிய மைலேஜ் ஆகும்.

Most Read Articles

English summary
Fuel efficient petrol engine cars launched in 2021 maruti suzuki celerio renault kiger
Story first published: Monday, December 20, 2021, 18:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X