ஃபோர்டு வெளியேறுவதால் கொண்டாட்டம்... ஜாலி மூடில் டொயோட்டா... ஃபார்ச்சூனர் கார் சேல்ஸ் தூள் கௌப்ப போகுது!

இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஃபுல்-சைஸ் எஸ்யூவி கார்கள் குறித்த தகவல்களை பார்க்கலாம்.

ஃபோர்டு வெளியேறுவதால் கொண்டாட்டம்... ஜாலி மூடில் டொயோட்டா... ஃபார்ச்சூனர் கார் சேல்ஸ் தூள் கௌப்ப போகுது!

இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஃபுல்-சைஸ் எஸ்யூவி கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், டொயோட்டா ஃபார்ச்சூனர் முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் வெறும் 1,045 ஃபார்ச்சூனர் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

ஃபோர்டு வெளியேறுவதால் கொண்டாட்டம்... ஜாலி மூடில் டொயோட்டா... ஃபார்ச்சூனர் கார் சேல்ஸ் தூள் கௌப்ப போகுது!

இந்த எண்ணிக்கை நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 1,869 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் விற்பனையில் 79 சதவீத வளர்ச்சியை டொயோட்டா ஃபார்ச்சூனர் பதிவு செய்துள்ளது. இது மிக பிரம்மாண்டமான விற்பனை வளர்ச்சி என்பதில் சந்தேகமில்லை. வரும் காலங்களில் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் விற்பனை இன்னும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபோர்டு வெளியேறுவதால் கொண்டாட்டம்... ஜாலி மூடில் டொயோட்டா... ஃபார்ச்சூனர் கார் சேல்ஸ் தூள் கௌப்ப போகுது!

ஃபோர்டு நிறுவனம் இந்திய சந்தையை விட்டு வெளியேறுவதுதான் காரணம். இந்தியாவில் ஏற்பட்ட கடுமையான நஷ்டம் காரணமாக ஃபோர்டு நிறுவனம் இங்கு தனது கார்களின் உற்பத்தியை நிறுத்துகிறது. எனவே ஃபோர்டு நிறுவனத்தின் எண்டேவர் எஸ்யூவி, இனி டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு விற்பனையில் சவாலாக இருக்காது.

ஃபோர்டு வெளியேறுவதால் கொண்டாட்டம்... ஜாலி மூடில் டொயோட்டா... ஃபார்ச்சூனர் கார் சேல்ஸ் தூள் கௌப்ப போகுது!

இதனை டொயோட்டா நிறுவனம் நன்கு பயன்படுத்தி கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகதான் ஃபார்ச்சூனரின் விற்பனை உயரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த செப்டம்பர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஃபுல்-சைஸ் எஸ்யூவி கார்களின் பட்டியலில் எம்ஜி க்ளோஸ்டர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

ஃபோர்டு வெளியேறுவதால் கொண்டாட்டம்... ஜாலி மூடில் டொயோட்டா... ஃபார்ச்சூனர் கார் சேல்ஸ் தூள் கௌப்ப போகுது!

எம்ஜி நிறுவனம் நடப்பாண்டு செப்டம்பர் மாதம் இந்திய சந்தையில் 292 க்ளோஸ்டர் கார்களை விற்பனை செய்துள்ளது. எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவி கார் இந்திய சந்தையில் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எனவே கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் இதன் விற்பனை எண்ணிக்கையை ஒப்பிட முடியாது.

ஃபோர்டு வெளியேறுவதால் கொண்டாட்டம்... ஜாலி மூடில் டொயோட்டா... ஃபார்ச்சூனர் கார் சேல்ஸ் தூள் கௌப்ப போகுது!

எம்ஜி நிறுவனம் இந்தியாவின் எஸ்யூவி செக்மெண்ட்டை குறிவைத்து செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே ஹெக்டர், ஹெக்டர் ப்ளஸ் மற்றும் இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி ஆகிய கார்களை விற்பனை செய்து வரும் நிலையில், சமீபத்தில் அஸ்டர் என்ற மிட்-சைஸ் எஸ்யூவி காரையும் எம்ஜி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

ஃபோர்டு வெளியேறுவதால் கொண்டாட்டம்... ஜாலி மூடில் டொயோட்டா... ஃபார்ச்சூனர் கார் சேல்ஸ் தூள் கௌப்ப போகுது!

ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஆகிய கார்களுக்கு போட்டியாக, அதிநவீன வசதிகளுடன் எம்ஜி அஸ்டர் களமிறக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை ஹூண்டாய் டூஸான் பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் 85 டூஸான் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

ஃபோர்டு வெளியேறுவதால் கொண்டாட்டம்... ஜாலி மூடில் டொயோட்டா... ஃபார்ச்சூனர் கார் சேல்ஸ் தூள் கௌப்ப போகுது!

இந்த எண்ணிக்கை நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 139 ஆக உயர்ந்துள்ளது. இது 64 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் நான்காவது இடத்தை மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 73 ஆக இருந்த இந்த எஸ்யூவியின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு செப்டம்பர் மாதம் வெறும் 51 ஆக குறைந்துள்ளது. இது 30 சதவீத வீழ்ச்சியாகும்.

ஃபோர்டு வெளியேறுவதால் கொண்டாட்டம்... ஜாலி மூடில் டொயோட்டா... ஃபார்ச்சூனர் கார் சேல்ஸ் தூள் கௌப்ப போகுது!

அதே நேரத்தில் இந்திய சந்தையில் நடப்பாண்டு செப்டம்பர் மாதம் ஒரு ஃபோர்டு எண்டேவர் கார் கூட விற்பனையாகவில்லை. ஆனால் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஃபோர்டு நிறுவனம் 694 எண்டேவர் கார்களை விற்பனை செய்திருந்தது. ஃபோர்டு எண்டேவர் சந்தையை விட்டு வெளியேறும் நிலையில், அதனை டொயோட்டா ஃபார்ச்சூனரும், எம்ஜி க்ளோஸ்ட்டரும் பயன்படுத்தி கொள்ளலாம்.

ஃபோர்டு வெளியேறுவதால் கொண்டாட்டம்... ஜாலி மூடில் டொயோட்டா... ஃபார்ச்சூனர் கார் சேல்ஸ் தூள் கௌப்ப போகுது!

இந்தியாவில் சமீப காலமாகவே எஸ்யூவி கார்களுக்கான வரவேற்பு அதிகரித்து கொண்டே வருகிறது. ஃபுல்-சைஸ் எஸ்யூவி கார்களை காட்டிலும், மிட்-சைஸ் மற்றும் காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு இங்கு அதிக வரவேற்பு கிடைத்து கொண்டுள்ளது. மிட்-சைஸ் மற்றும் காம்பேக்ட் எஸ்யூவி கார்கள் ஓரளவிற்கு விலை குறைவானவை என்பதுதான் இதற்கு காரணம்.

ஃபோர்டு வெளியேறுவதால் கொண்டாட்டம்... ஜாலி மூடில் டொயோட்டா... ஃபார்ச்சூனர் கார் சேல்ஸ் தூள் கௌப்ப போகுது!

குறிப்பாக வாடிக்கையாளர்களின் அமோக ஆதரவு காரணமாக காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் தொடர்ச்சியாக புதிய கார்கள் அறிமுகமாகி கொண்டே இருக்கின்றன. கியா சொனெட், நிஸான் மேக்னைட், ரெனால்ட் கைகர் போன்ற கார்களை இதற்கு உதாரணமாக கூற முடியும். வரும் காலங்களிலும் இந்த செக்மெண்ட் பல்வேறு புதிய தயாரிப்புகளை காண உள்ளது.

Most Read Articles

English summary
Full size suv september 2021 sales report toyota fortuner leads chart
Story first published: Friday, October 15, 2021, 18:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X