சகல வசதிகளுடன் சீன நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் டிரக் வெளியீடு... டெஸ்லா டிரக்கிற்கு நேர் போட்டியாக வருகிறது

டெஸ்லா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் டிரக்கிற்கு நேர் போட்டியாக புத்தம் புதிய எலெக்ட்ரிக் டிரக்கை சீன நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புதிய டிரக்கின் படங்கள் மற்றும் தகவல்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

 டெஸ்லா எலெக்ட்ரிக் டிரக்கிற்கு போட்டியாக சீன நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் டிரக் வெளியீடு!

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியாக பேட்டரியில் இயங்கும் வாகனங்களை தயாரிப்பதற்கு அனைத்து வாகனத் தயாரிப்பு நிறுவனங்களும் முன்னுரிமை கொடுத்து வருகின்றன. மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்கள் முதல் டிரக் என அனைத்தும் எதிர்காலத்தில் மின்சார வாகனங்களாகவே இருக்கும் நிலை உருவாக இருக்கிறது.

 டெஸ்லா எலெக்ட்ரிக் டிரக்கிற்கு போட்டியாக சீன நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் டிரக் வெளியீடு!

இந்த நிலையில், அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனம் பிரிமீயம் எலெக்ட்ரிக் கார்கள் தவிர்த்து, வர்த்தக பயன்பாட்டிற்கு ஏதுவான டெஸ்லா செமி என்ற பெயரில் மின்சார டிரக் மாடலையும் வெளியிட்டது. அதற்கு போட்டியாக தற்போது சீனாவை சேர்ந்த பிரபல வாகனத் தயாரிப்பு குழுமமான கீலி நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஃபரிஸோன் ஆட்டோ புதிய மின்சார டிரக் மாடலை வெளியிட்டுள்ளது.

 டெஸ்லா எலெக்ட்ரிக் டிரக்கிற்கு போட்டியாக சீன நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் டிரக் வெளியீடு!

ஃபரிஸோன் நிறுவனத்தின் புதிய மின்சார டிரக் மாடலுக்கு ஹோம்டிரக் என்று பெயரிடப்பட்டுள்ளது. சீனா மட்டுமின்றி, உலக அளவில் பல்வேறு நாடுகளில் இந்த புதிய மின்சார டிரக் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. வரும் 2024ம் ஆண்டு இந்த புதிய மின்சார டிரக்கின் டெலிவிரிப் பணிகள் துவங்கப்படும்.

 டெஸ்லா எலெக்ட்ரிக் டிரக்கிற்கு போட்டியாக சீன நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் டிரக் வெளியீடு!

புதிய ஹாம்டிரக்கை நீண்ட தூரம் பயன்படுத்தும் வகையில் மூன்று விதமான எரிபொருள் வகை மாடல்களில் வர இருப்பதாக கூறப்படுகிறது. பேட்டரி மட்டுமின்றி மெத்தனால் எரிபொருளிலும் இயங்கும் மாடலிலும் வர இருப்பதாக தெரிகிறது. பேட்டரியை கழற்றி மாட்டும் வசதியும் இதில் இருப்பது மிக முக்கிய அம்சமாக இருக்கும். அதேநேரத்தில், முழுமையான விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

 டெஸ்லா எலெக்ட்ரிக் டிரக்கிற்கு போட்டியாக சீன நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் டிரக் வெளியீடு!

முழுக்க முழுக்க பேட்டரியில் இயங்கும் மாடலில் பேட்டரியை கழற்றி மாட்டும் வசதி இருப்பதால் நீண்ட தூரம் செல்லும்போது எந்த பிரச்னையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும். சீனாவில் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகளிலும் பேட்டரியை மாற்றிக் கொள்வதற்கான கட்டமைப்பு வசதியும் இருக்கும். இதனால், ஒரு சில நிமிடங்களில் சார்ஜ் ஏற்றப்பட்ட பேட்டரியை மாற்றிக் கொண்டு ஓட்டுனர்கள் பயணத்தை தொடர முடியும்.

 டெஸ்லா எலெக்ட்ரிக் டிரக்கிற்கு போட்டியாக சீன நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் டிரக் வெளியீடு!

இந்த டிரக்கின் கேபின் ஓட்டுனர்களுக்கு வீட்டில் இருப்பது போன்ற உணர்வை தரும் வகையில் இருப்பதால், அவ்வாறே பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஓட்டுனர்கள் களைப்பு இல்லாமல் அதிக தூரம் பயணிக்க ஏதுவாக அமையும்.

 டெஸ்லா எலெக்ட்ரிக் டிரக்கிற்கு போட்டியாக சீன நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் டிரக் வெளியீடு!

இந்த டிரக்கின் கேபினில் சமையல் செய்வதற்கான வசதி, காபி தயாரிக்கும் வசதி, குளிர்சாதனப் பெட்டி, சிறிய படுக்கை வசதி, வாஷிங் மெஷின், குளியலறை மற்றும் கழிவறை வசதிகள் உள்ளன. டிரக்கை கண்காணித்து ஓட்டுவதற்காக உயர் துல்லிய கேமரா, வசதியான இருக்கைகளும் ஓட்டுனர்களுக்கு சிறப்பான பயணத்தை வழங்கும்.

 டெஸ்லா எலெக்ட்ரிக் டிரக்கிற்கு போட்டியாக சீன நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் டிரக் வெளியீடு!

ஹோம்டிரக் மின்சார டிரக்கில் லெவல்-4 எனப்படும் டிரைவரில்லாமல் இயங்கும் தொழில்நுட்பமும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் 2030ம் ஆண்டு இந்த மாடலானது விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Geely Farizon Auto has revealed Homtruck EV and it will go on sale by 2024.
Story first published: Wednesday, November 10, 2021, 11:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X