மிரட்டும் பவர், சுண்டி இழுக்கும் தோற்றம்... வெளியானது புதிய ஹம்மர் மின்சார எஸ்யூவி!

உலக அளவில் இளம் கோடீஸ்வரர்களின் கனவு எஸ்யூவி மாடலாக ஹம்மர் இருந்து வருகிறது. இந்த நிலையில் அதிசெயல்திறன் மிக்க ஹம்மர் எஸ்யூவியின் மின்சார மாடலை ஜெனரல் மோட்டார்ஸ் வெளியிட்டுள்ளது. ஆஃப்ரோடு திறன்களுடன் மிரட்டும் இந்த புதிய மின்சார எஸ்யூவியின் முக்கிய அம்சங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

 மிரட்டும் பவர், சுண்டி இழுக்கும் தோற்றம்... வெளியானது புதிய ஹம்மர் மின்சார எஸ்யூவி!

இதுவரை இல்லாத அளவில் ஆகச் சிறந்த மின்சார சூப்பர் எஸ்யூவி மாடலாக இதனை உருவாக்கி இருப்பதாக ஜெனரல் மோட்டார்ஸ் பெருமிதம் தெரிவித்துள்ளது. நீண்ட காலதாமதத்திற்கு வந்துள்ள இந்த புதிய மின்சார சூப்பர் எஸ்யூவி அடுத்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

இந்த புதிய மின்சார ஹம்மர் எஸ்யூவி வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை விஞ்சிய தொழில்நுட்பம் மற்றும் வசதிகளுடன் மிகச் சிறந்த தேர்வாக அமையும். புதிய பாதையில் பயணிப்பதற்கான பல்வேறு அம்சங்களை இந்த மின்சார எஸ்யூவி வழங்கும் என்றும் ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

 மிரட்டும் பவர், சுண்டி இழுக்கும் தோற்றம்... வெளியானது புதிய ஹம்மர் மின்சார எஸ்யூவி!

ராணுவ பயன்பாட்டு வாகனமாக உருவாக்கப்பட்டு பின்னர் சாதாரண வாடிக்கையாளர்களுக்கும் விற்பனை செய்யும் அம்சத்துடன் இந்த எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டது. அதிலிருந்து பல தசாப்தங்களாக ஹம்மர் எஸ்யூவிக்கு உலக அளவில் பெரும் ரசிகர்களும், வாடிக்கையாளர் வட்டமும் உள்ளது.

 மிரட்டும் பவர், சுண்டி இழுக்கும் தோற்றம்... வெளியானது புதிய ஹம்மர் மின்சார எஸ்யூவி!

அதே வகையில், ஹம்மர் எஸ்யூவியின் மின்சார மாடலும் எல்லோரையும் திரும்பி பார்க்க வைக்கும் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. மிக வலிமையான பானட், சக்கரங்கள், பாடி உள்ளிட்டவை பார்த்தவுடனே பெரும் கோடீஸ்வரர்களை புக்கிங் செய்ய வைத்துவிடும்.

 மிரட்டும் பவர், சுண்டி இழுக்கும் தோற்றம்... வெளியானது புதிய ஹம்மர் மின்சார எஸ்யூவி!

அதேபோன்று, உட்புறமும் மிக மிரட்டலாகவும், அசத்தலாகவும் இருக்கிறது. செங்குத்தாக பொருத்தப்பட்டு இருக்கும் விண்ட்ஷீல்டு, பெரிய தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கழற்றி மாட்டும் வசதியுடன் கூரை பேனல்கள், கன்வெர்ட்டிபிள் கார் போன்று வசதியை அளிக்கும் ஜன்னல் ஃப்ரேம் அமைப்பு ஆகியவற்றுடன் அசத்துகிறது.

 மிரட்டும் பவர், சுண்டி இழுக்கும் தோற்றம்... வெளியானது புதிய ஹம்மர் மின்சார எஸ்யூவி!

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய அல்டியம் என்ற கட்டமைப்புக் கொள்கையில்தான் இந்த புதிய ஹம்மர் மின்சார எஸ்யூவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவி ஆஃப்ரோடு தொழில்நுட்பங்களுடன் வர இருக்கிறது. இதற்காக சிறப்பு பேக்கேஜையும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய முடியும்.

 மிரட்டும் பவர், சுண்டி இழுக்கும் தோற்றம்... வெளியானது புதிய ஹம்மர் மின்சார எஸ்யூவி!

இந்த புதிய ஹம்மர் எஸ்யூவி 3.2 மீட்டர் வீல் பேஸ் நீளம் கொண்டுள்ளது. 35.4 அடி டர்னிங் ரேடியஸ் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், நீர் நிலைகளில் கடக்கும்போது எவ்வளவு ஆழம் வரை இயக்க முடியும் என்பது குறித்த தகவல் இல்லை. அதிக தகவல்களை இன்று வெளியிடுவதாக ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

புதிய ஹம்மர் மின்சார எஸ்யூவியானது 830 எச்பி பவரையும், 15,591 என்எம் டார்க் திறனையும் அதிகபட்சமாக வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 0 - 100 கிமீ வேகத்தை 3.5 வினாடிகளில் எட்டிவிடும்.

 மிரட்டும் பவர், சுண்டி இழுக்கும் தோற்றம்... வெளியானது புதிய ஹம்மர் மின்சார எஸ்யூவி!

புதிய ஹம்மர் மின்சார எஸ்யூவி 80,000 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.58.70 லட்சம்) முதல் ஆஃப்ரோடு பேக்கேஜ் கொண்ட டாப் வேரியண்ட் 1,10,595 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.81.15 லட்சம்) வரையிலான விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் உற்பத்தி துவங்கப்பட உள்ளது. டெஸ்லா சைபர் டிரக்கிற்கு நேரடி போட்டியாக கருதப்படுகிறது. இந்த அதிசெயல்திறன் மிக்க எஸ்யூவியுடன் பிக்கப் டிரக் வெர்ஷனையும் ஜெனரல் மோட்டார்ஸ் பார்வைக்கு கொண்டு வந்துள்ளது.

Most Read Articles

English summary
General Motors has revealed its Hummer electric SUV with 830 horsepower and expected to go on sale second half next year.
Story first published: Monday, April 5, 2021, 11:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X