Just In
- 30 min ago
ஒரு முறை சார்ஜ் செஞ்சா 70 கிமீ அசால்டா போகலாம்... 2021 சூப்பர் சோகோ சியூமினி மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்...
- 8 hrs ago
விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!
- 9 hrs ago
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!
- 10 hrs ago
மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?
Don't Miss!
- News
தேனியில் டிடிவி தினகரன் தங்க வீடு பார்க்கும் அமமுகவினர்.. கலக்கத்தில் இரண்டு தலைகள்!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 02.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்குமாம்…
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Movies
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சென்னையில் டீசல் டோர் டெலிவிரி தரும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது கோ ஃப்யூவல்!
சென்னையில் டீசல் எரிபொருளை டோர் டெலிவிரி செய்யும் திட்டத்தை கோ ஃப்யூவல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பெரிய அளவில் டீசல் எரிபொருள் தேவைப்படும் தொழில்சாலைகள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இது சிறந்த திட்டமாக இருக்கிறது. இந்த திட்டம் குறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்த திட்டத்தை பயன்படுத்தி சென்னையை தலைமையிடமாக கொண்டு துவங்கப்பட்டுள்ள கோ ஃப்யூவல் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் ஹை ஸ்பீடு டீசலை டோர் டெலிவிரி செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.இதற்காக, அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட பிரத்யேக டேங்கர் வாகனங்களை பயன்படுத்த உள்ளது. முதல்கட்டமாக அடுக்குமாடி குடியிருப்புகள், தொழிற்சாலைகள் மற்றும் அதிக டீசல் எரிபொருள் தேவைப்படும் நிறுவனங்களுக்கு சப்ளை செய்ய திட்டமிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, குறைவான அளவில் டீசல் எரிபொருளை சப்ளை செய்யும் திட்டத்துடன் விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக, நாட்டின் மூன்று பெரிய எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து உரிமம் பெற்றுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக மிக எளிதாக டீசலை ஆர்டர் செய்து பெறும் வாய்ப்பு இருக்கிறது.

டீசலை ஆர்டர் செய்து பெறுவது மற்றும் பணம் செலுத்துவதற்காக ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் சாதனங்களுக்காக பிரத்யேக மொபைல் அப்ளிகேஷன்களை கோ ஃப்யூவல் அறிமுகம் செய்துள்ளது. இந்த மொபைல் அப்ளிகேஷனை பயன்படுத்தி, எளிதாக டீசல் எரிபொருளை ஆர்டர் செய்ய முடியும்.

ஆர்டர் செய்தவுடன், டேங்கர் லாரி வருவது குறித்த நிகழ்நேர முறையில் கண்காணிக்க முடியும். மேலும், டேங்கர் லாரியில் இருந்து எரிபொருளில் கலப்படம் செய்வதற்கோ அல்லது எரிபொருள் அளவில் தில்லுமுல்லு செய்வதற்கோ வாய்ப்பில்லாத வகையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய எரிபொருள் வழங்கும் எந்திரம் பொருத்தப்பட்டு இருக்கிறது.

வாடிக்கையாளர் ஆர்டர் செய்தவுடன் மொபைல்போனுக்கு வரும் ஓடிபி எண்ணை பதிவு செய்தால் மட்டுமே, இந்த டேங்கர் லாரியில் உள்ள எரிபொருள் வழங்கும் எந்திரம் டீசலை வழங்கும். எனவே, தரமான டீசலை சரியான அளவில் பெறுவதற்கான வாய்ப்பாக அமையும்.

அத்துடன், மொபைல் அப்ளிகேஷன் மூலமாக ஆர்டர் செய்த விபரங்களை வாடிக்கையாளர்கள் எளிதாக தெரிந்து கொள்ள முடியும். இதற்காக, அதிநவீன முறையில் கட்டமைக்கப்பட்ட விசேஷ டிரக்குகளை கோ ஃப்யூவல் நிறுவனம் பயன்படுத்துகிறது. இவை மிகவும் பாதுகாப்பான முறையில் எரிபொருள் வழங்கும்.

சென்னை நகரில் மட்டும் பரீட்சார்த்த முறையில் இந்த திட்டத்தை கோ ஃப்யூவல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அடுத்த 18 மாதங்களில் நாட்டின் பிற நகரங்களுக்கும் இந்த திட்டத்தை விரிவுப்படுத்த கோ ஃப்யூவல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக 1,000 டேங்கர் லாரிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு கோ ஃப்யூவல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில் டீசல் மட்டுமின்றி, பெட்ரோலையும் இதே முறையில் டோர் டெலிவிரி செய்யும் திட்டத்தை கொண்டு வருவதற்கும் கோ ஃப்யூவல் திட்டமிட்டுள்ளது. மத்திய கிழக்கு நாட்டை சேர்ந்த முதலீட்டாளர் ரூ.100 கோடியை முதலீடு செய்ய இசைவு தெரிவித்துள்ளதால், தனது விரிவாக்கத் திட்டங்களில் கோ ஃப்யூவல் நிறுவனம் தீவிரமாக இறங்கி உள்ளது.