பயன்படுத்திய மின்சார காரை வாங்க போறீங்களா? ஒரு நிமிஷம் இந்த பதிவ பாத்துட்டு போங்க! சாதக-பாதகங்கள் பற்றிய தகவல்

பயன்படுத்திய கார்கள் சந்தையில் இருந்து மின்சார காரை வாங்கலாமா என்ற சந்தேகத்தை விளக்கும் பதிவு இது. வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

செகண்ட் ஹேண்ட்ல மின்சார கார் வாங்க போறீங்களா? ஒரு நிமிஷம் இந்த பதிவ பாத்துட்டு போங்க... சாதக-பாதங்களின் தொகுப்பு!

மின்சார வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் இருக்கின்றன. மின் வாகனங்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நாட்டில் தற்போது மிகக் குறைவாகவே தென்படுகின்றன. இந்த காரணத்தினால்தான் மின் வாகனங்களின் விற்பனை இப்போதும் குழந்தை பருவத்திலே இருக்கின்றது.

செகண்ட் ஹேண்ட்ல மின்சார கார் வாங்க போறீங்களா? ஒரு நிமிஷம் இந்த பதிவ பாத்துட்டு போங்க... சாதக-பாதங்களின் தொகுப்பு!

இருப்பினும், மக்கள் மத்தியில் மின் வாகனங்களுக்கான தேவை புதிய கட்டத்தை தற்போது எட்ட ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில், சிலர் மின்சார வாகனங்களை செகண்ட் ஹேண்ட் (பயன்படுத்தப்பட்ட) சந்தையில் வாங்க தொடங்கியிருக்கின்றனர். ஒரு சிலர் பயன்படுத்தப்பட்ட கார்கள் சந்தையில் இருந்து மின்சார கார்களை வாங்கலாமா என்ற சந்தேகத்தையும் எழுப்பி வருகின்றனர்.

செகண்ட் ஹேண்ட்ல மின்சார கார் வாங்க போறீங்களா? ஒரு நிமிஷம் இந்த பதிவ பாத்துட்டு போங்க... சாதக-பாதங்களின் தொகுப்பு!

அத்தகையோருக்கு உதவும் வகையிலேயே இப்பதிவை தொகுத்து வழங்கியிருக்கின்றோம். அதாவது, பயன்படுத்தப்பட்ட மின்சார காரை செகண்ட் ஹேண்டில் வாங்கினால் என்னென்ன சாதக, பாதங்கள் நிலவுகின்றன என்பது பற்றிய தகவலையே வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

செகண்ட் ஹேண்ட்ல மின்சார கார் வாங்க போறீங்களா? ஒரு நிமிஷம் இந்த பதிவ பாத்துட்டு போங்க... சாதக-பாதங்களின் தொகுப்பு!

மிக வேகமாக தேய்மானம் அடைய கூடியவை

மின்சார வாகனங்கள் மிக வேகமாக தேய்மானம் அடையக் கூடியவை என வாகனத்துறையைச் சார்ந்த வல்லுநர்கள் சிலர் தெரிவிக்கின்றனர். இவை, எரிபொருளால் இயங்கும் வாகனங்களைவிட அதிக வேகத்தில் தேய்மானம் அடைவதாக கூறப்படுகின்றது. எனவேதான், செகண்ட் ஹேண்டில் விற்பனைக்குக் கிடைக்கும் பெட்ரோல், டீசல் வாகனங்களைவிட மின்சார வாகனங்கள் மிகக் குறைந்த விலையில் விற்பனைக்குக் கிடைப்பதாகவும் அவர்கள் காரணம் தெரிவித்திருக்கின்றனர்.

செகண்ட் ஹேண்ட்ல மின்சார கார் வாங்க போறீங்களா? ஒரு நிமிஷம் இந்த பதிவ பாத்துட்டு போங்க... சாதக-பாதங்களின் தொகுப்பு!

மென்மையான ஓட்டும் அனுபவம்

பொதுவாகவே மின்சார வாகனம் மென்மையான ஓட்டும் திறன் கொண்டவை ஆகும். ஆகையால், பழைய பெட்ரோல், டீசல் வாகனங்களைப் போல் அதிக அதிர்வுகளை மின்சார வாகனங்கள் வழங்காது. இது மின்சார வாகனத்தில் இருக்கும் மிகப்பெரிய கூடுதல் சிறப்பாகும்.

செகண்ட் ஹேண்ட்ல மின்சார கார் வாங்க போறீங்களா? ஒரு நிமிஷம் இந்த பதிவ பாத்துட்டு போங்க... சாதக-பாதங்களின் தொகுப்பு!

சுற்றுச்சூழலுக்கு நண்பன்

மின்சார வாகனம் பழையதாக இருந்தாலும் சரி, புதிதாக இருந்தாலும் சரி அது சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆகையால், செகண்ட் ஹேண்ட் மின்சார வாகனமாக இருந்தாலும் அது சுற்றுச்சூழலுக்கு நண்பனாகவே செயல்படும். ஆனால், பெட்ரோல்-டீசல் வாகனங்கள் பழையதாக மாற மாற அதிகளவு சுற்றுச்சூழுலுக்கு கேடு விளைவிப்பவையாக மாறிவிடும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

செகண்ட் ஹேண்ட்ல மின்சார கார் வாங்க போறீங்களா? ஒரு நிமிஷம் இந்த பதிவ பாத்துட்டு போங்க... சாதக-பாதங்களின் தொகுப்பு!

செலவு

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு உயர்ந்த வண்ணம் இருக்கின்றன. இதனால் பல்வேறு இன்னல்களை எரிபொருள் எஞ்ஜின் கொண்ட வாகனங்களைப் பயன்படுத்துவோர் சந்தித்து வருகின்றனர். ஆனால், இந்த நிலை மின்சார வாகனங்களை பயன்படுத்துவோரை துளியளவும் பாதிக்காது. இதுவும் மின்சார வாகனங்களில் இருக்கும் கூடுதல் சிறப்பு ஆகும். மேலும், இதன் பராமரிப்பு செலவும் மிக மிகக் குறைவு.

செகண்ட் ஹேண்ட்ல மின்சார கார் வாங்க போறீங்களா? ஒரு நிமிஷம் இந்த பதிவ பாத்துட்டு போங்க... சாதக-பாதங்களின் தொகுப்பு!

பேட்டரி செயல்திறன்

பேட்டரிகள் பயன்படுத்த பயன்படுத்த அதன் செயல்திறன் குறையும். ஆகையால், மின்சார காரின் ரேஞ்ஜ் விகிதம் சற்று குறையும் வாய்ப்பு உள்ளது. ஆகையால், செகண்ட் ஹேண்டில் மின்சார காரை வாங்கும்போது பேட்டரியின் திறனை பார்த்து வாங்குவது சிறந்தது.

செகண்ட் ஹேண்ட்ல மின்சார கார் வாங்க போறீங்களா? ஒரு நிமிஷம் இந்த பதிவ பாத்துட்டு போங்க... சாதக-பாதங்களின் தொகுப்பு!

அடிப்படை கட்டமைப்பு வசதிகள்

தற்போதும் நாட்டில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறைவாகவே உள்ளன. அதேசமயம், அரசும், தனியார் நிறுவனங்களும் மின்சார வாகனங்களுக்கான மின்னேற்றம் செய்யும் நிலையங்களை உருவாக்கும் பணிகளில் தீவிரம் காட்ட தொடங்கியிருக்கின்றன.

செகண்ட் ஹேண்ட்ல மின்சார கார் வாங்க போறீங்களா? ஒரு நிமிஷம் இந்த பதிவ பாத்துட்டு போங்க... சாதக-பாதங்களின் தொகுப்பு!

இதன் விளைவாகவே இப்போதே நாட்டின் சில குறிப்பிட்ட நகரங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் பயன்பாட்டிற்கு வர தொடங்கியிருக்கின்றன. இந்த வசதி உங்கள் வசிப்பிடத்தில் இருக்கின்றதா என்பதை ஆலோசித்து பின்னர் மின் வாகன பயன்பாட்டிற்கு மாறுவது நல்லது.

செகண்ட் ஹேண்ட்ல மின்சார கார் வாங்க போறீங்களா? ஒரு நிமிஷம் இந்த பதிவ பாத்துட்டு போங்க... சாதக-பாதங்களின் தொகுப்பு!

மறு விற்பனை மதிப்பு எப்படி?

பெட்ரோல், டீசல் எஞ்ஜினைக் கொண்ட வாகனங்கள் சில, பல ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட பின்னரும் அதிக விலைக்கு மறு விற்பனைக்கு போகின்றன. ஆனால், மின்சார வாகனங்கள் அப்படி இல்லை. மிக மிக குறைந்த மதிப்பிலேயே அவை மறு விற்பனைக்கு போகும். பேட்டரி திறன் குறைதல், தேய்மானம் அதிகம் உள்ளிட்ட காரணங்களால் இந்த நிலை நிலவுகின்றது.

செகண்ட் ஹேண்ட்ல மின்சார கார் வாங்க போறீங்களா? ஒரு நிமிஷம் இந்த பதிவ பாத்துட்டு போங்க... சாதக-பாதங்களின் தொகுப்பு!

மேலே இருக்கும் இந்த அனைத்து சூழ்நிலைகளையும் மனதில் வைத்து பயன்படுத்தப்பட்ட மின்சார வாகனத்தை நோக்கி நகர்வது மிகவும் நல்லது.

Most Read Articles
English summary
Going To Buy A Used EV? Here Are The Things You Want To Know. Read In Tamil.
Story first published: Thursday, May 27, 2021, 18:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X