விடைபெற்று செல்லும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்!! இதற்கு மாற்றாக விற்பனையில் இருக்கும் சிறந்த கார்கள்

ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் இருந்து விரைவில் விடைப்பெற்று செல்லவுள்ளது. இதனால் இந்த நிறுவனம் நம் சென்னையில் தயாரித்துவரும் கார்கள் அனைத்தின் விற்பனையையும் நம் நாட்டு சந்தையில் நிறுத்தி கொள்ளவுள்ளது. இதில் ஃபிகோ, அஸ்பியர், ஃப்ரீஸ்டைல், ஈக்கோஸ்போர்ட் மற்றும் எண்டேவியர் உள்ளிட்டவை அடங்குகின்றன.

விடைபெற்று செல்லும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்!! இதற்கு மாற்றாக விற்பனையில் இருக்கும் சிறந்த கார்கள்

ஆனால் சிபியூ முறையில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் மஸ்டங் போன்ற லக்சரி கார்கள் தொடர்ந்து அறிமுகமாகி கொண்டு தான் இருக்கும் என நினைக்கிறோம். இந்த வகையில் இந்தியர்கள் விரும்பக்கூடிய காம்பெக்ட் எஸ்யூவி கார்களுள் ஒன்றாக இருக்கும் ஈக்கோஸ்போர்ட்டும் நம்மை விட்டு பிரியவுள்ளது.

விடைபெற்று செல்லும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்!! இதற்கு மாற்றாக விற்பனையில் இருக்கும் சிறந்த கார்கள்

கிட்டத்தட்ட 8 வருடங்களாக நம் நாட்டில் விற்பனையில் இருக்கும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் இந்த ஆண்டில் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை பெற்றிருந்தது. இதற்கு தற்போதைக்கு விற்பனையில் போட்டியாக இருப்பவை எவை? இந்த ஃபோர்டு தயாரிப்பிற்கு மாற்றாக வாங்கக்கூடியத்தக்க சில கார்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

விடைபெற்று செல்லும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்!! இதற்கு மாற்றாக விற்பனையில் இருக்கும் சிறந்த கார்கள்

மஹிந்திரா எக்ஸ்யூவி300

ஃபோர்டின் கூட்டணி நிறுவனமாக உள்ள மஹிந்திராவின் காம்பெக்ட் எஸ்யூவி மாடலான எக்ஸ்யூவி300-ஐ பற்றி முதலில் பார்த்துவிடுவோம். தங்களது கூட்டணியில் இருந்து இந்திய சந்தைக்கான காம்பெக்ட் எஸ்யூவி கார் ஒன்றை அறிமுகப்படுத்த இவை திட்டமிட்டன. ஆனால் இறுதியில் இந்த இரு பிராண்ட்களில் இருந்து தனித்தனியாக கார்கள் வெளிவந்தன.

விடைபெற்று செல்லும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்!! இதற்கு மாற்றாக விற்பனையில் இருக்கும் சிறந்த கார்கள்

மஹிந்திரா எக்ஸ்யூவி300-இன் விற்பனையும் பெரிய அளவில் இல்லை என்றாலும், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டை வாங்க திட்டமிட்டு வந்தவர்கள் தங்களது முடிவை இந்த மஹிந்திரா காருக்கு மாற்றி கொள்ளலாம். சிறுத்தை போன்றதான உடலமைப்புடன் ஈக்கோஸ்போர்ட்டை காட்டிலும் எக்ஸ்யூவி300 மாடலின் விலைகள் சற்று குறைவு தான்.

விடைபெற்று செல்லும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்!! இதற்கு மாற்றாக விற்பனையில் இருக்கும் சிறந்த கார்கள்

டாடா நெக்ஸான்

தற்சமயம் பீய்த்து கொண்டு விற்பனையாகும் காம்பெக்ட் எஸ்யூவிகளுள் ஒன்றாக டாடா நெக்ஸான் உள்ளது. இதனால் இதுவும் சிறந்த மாற்று தேர்வாகவே இருக்கும். இந்தியாவின் மலிவான காம்பெட் எஸ்யூவி கார், டாடா மோட்டார்ஸின் தரமான தயாரிப்புகளுள் ஒன்று என்ற இரு விஷயங்கள் இதன் விற்பனைக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

விடைபெற்று செல்லும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்!! இதற்கு மாற்றாக விற்பனையில் இருக்கும் சிறந்த கார்கள்

1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு ரெவோட்ரான் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு ரெவோடார்க் டீசல் என்ஜின் தேர்வுகளில் நெக்ஸான் விற்பனை செய்யப்படுகிறது. இதில் பெட்ரோல் என்ஜின் உடன் 17.4 kmpl மைலேஜையும், டீசல் என்ஜின் உடன் 22.4 kmpl மைலேஜையும் இந்த டாடா கார் வழங்குவதாக சான்றளிக்கப்பட்டுள்ளது.

விடைபெற்று செல்லும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்!! இதற்கு மாற்றாக விற்பனையில் இருக்கும் சிறந்த கார்கள்

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா

பிரச்சனையே வேண்டாம், பலர் அதிகளவில் வாங்கும் காம்பெக்ட் எஸ்யூவி காரின் பக்கமே செல்ல விரும்புக்கிறீர்கல் என்றால், நீங்கள் பார்க்க வேண்டியது மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவை. எக்ஸ்யூவி300-ஐ போன்று ஈக்கோஸ்போர்ட்டை காட்டிலும் இந்த மாருதி காரின் விலையும் குறிப்பிடத்தக்க அளவில் குறைவாகும்.

விடைபெற்று செல்லும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்!! இதற்கு மாற்றாக விற்பனையில் இருக்கும் சிறந்த கார்கள்

அதேபோல் மைலேஜ் விஷயத்திலும் விட்டாரா பிரெஸ்ஸா தான் சிறந்ததாக தெரிகிறது. தொலைத்தொடர்பு சாதனங்களில் தான் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா பெரிதாக அடிவாங்குகிறது. இதனால் தான் இந்த மாருதி சுஸுகி காரின் விலையை குறைவாக நிர்ணயிக்க முடிந்துள்ளது.

விடைபெற்று செல்லும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்!! இதற்கு மாற்றாக விற்பனையில் இருக்கும் சிறந்த கார்கள்

கியா சொனெட்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டை காட்டிலும் மாடர்னான தோற்றத்தில் காம்பெக்ட் எஸ்யூவி காரை எதிர்பார்ப்பவர்களுக்கு கியா சொனெட் சிறந்த தேர்வாகும். தென் கொரிய காரான இதனை கியா நிறுவனம் கடந்த ஆண்டு இறுதியில் தான் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி இருந்தது.

விடைபெற்று செல்லும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்!! இதற்கு மாற்றாக விற்பனையில் இருக்கும் சிறந்த கார்கள்

மற்ற காம்பெக்ட் எஸ்யூவி கார்களை போன்று குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் கியா சொனெட்டில் 1497சிசி, 4-சிலிண்டர் இன்லைன், 4 வால்வுகள்/ சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. மைலேஜிலும் ஈக்கோஸ்போர்ட்டை காட்டிலும் சிறந்ததாக இருப்பதால், கியா சொனெட் மிக சரியான மாற்று தேர்வாக இருக்கும்.

விடைபெற்று செல்லும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்!! இதற்கு மாற்றாக விற்பனையில் இருக்கும் சிறந்த கார்கள்

டொயோட்டா அர்பன் க்ரூஸர்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டிற்கு இணையான தோற்றத்தை கொண்டுள்ளதா என்றால் இல்லை தான் பதில். இருப்பினும் இந்த ஃபோர்டு எஸ்யூவி வாகனத்தை வாங்க முடியாமல் போனவர்கள், டொயோட்டாவின் அர்பன் க்ரூஸரையும் ஒரு கண்ணோட்டம் பார்க்கலாம். நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும் இது மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவின் டொயோட்டா வெர்சன் என்று.

விடைபெற்று செல்லும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்!! இதற்கு மாற்றாக விற்பனையில் இருக்கும் சிறந்த கார்கள்

இதில் பொருத்தப்படுகின்ற 1.5 லிட்டர், 4-சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 105 எச்பி மற்றும் 138 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. மைலேஜிலும் மற்ற காம்பெக்ட் எஸ்யூவி கார்களை போன்று அர்பன் க்ரூஸரும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டை முந்தியுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
5 Great Alternatives For The Discontinued Ford EcoSport.
Story first published: Tuesday, September 14, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X