சரக்கு வைப்பதற்கு சின்ன ஃபிரிட்ஜ், மசாஜ் செய்யும் இருக்கை... யப்பப்பா..! பென்ஸ் மேபேக் காரில் இவ்வளவு வசதிகளா?

சரக்கு வைப்பதற்கென சின்ன ஃபிரிட்ஜெ மற்றும் மசாஜ் செய்யும் திறன் கொண்ட இருக்கை என பல்வேறு வசதிகளுடன் மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ் 600 கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள் குறித்த பற்றிய தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

சரக்கு வைப்பதற்கு சின்ன ஃபிரிட்ஜ், மசாஜ் செய்யும் இருக்கை... யப்பப்பா..! மெர்சிடிஸ் மேபேக் காரில் இவ்வளவு வசதிகளா?..

பெரிதும் எதிர்பார்ப்பில் இருந்த மேபேக் ஜிஎல்எஸ் 600 சொகுசு காரை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இன்று (செவ்வாய்கிழமை) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இக்காரில் வீடுகளில் இருப்பதைப் போன்று பல்வேறு சிறப்பு அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

சரக்கு வைப்பதற்கு சின்ன ஃபிரிட்ஜ், மசாஜ் செய்யும் இருக்கை... யப்பப்பா..! மெர்சிடிஸ் மேபேக் காரில் இவ்வளவு வசதிகளா?..

அந்தவகையில், செல்வந்தர்களைக் கவரும் வகையில் இடம் பெற்றிருக்கும் ஐந்து நட்சத்திர அம்சங்கள் பற்றிய தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

சரக்கு வைப்பதற்கு சின்ன ஃபிரிட்ஜ், மசாஜ் செய்யும் இருக்கை... யப்பப்பா..! மெர்சிடிஸ் மேபேக் காரில் இவ்வளவு வசதிகளா?..

அதிக இட வசதி:

அதிக இட வசதியுடன் பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ் 600 கார் உருவாக்கப்பட்டிருக்கின்றது. சொகுசான பயண அனுபவத்தை உறுதி செய்யும் வகையில் அதிக இட வசதி இக்காரில் கொடுக்கப்பட்டுள்ளது. மேபேக் ஜிஎல்எஸ் கார் 5,205 மிமீ நீளத்திலும், இரண்டாவது வரிசை இருக்கைக்கு 93 மிமீ கூடுதல் இடைவெளியும், 2,030 மிமீ அகலத்திலும் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

சரக்கு வைப்பதற்கு சின்ன ஃபிரிட்ஜ், மசாஜ் செய்யும் இருக்கை... யப்பப்பா..! மெர்சிடிஸ் மேபேக் காரில் இவ்வளவு வசதிகளா?..

இதன் உயரம் 1,838 மிமீட்டராக இருக்கின்றது. கூடுதல் இடவசதியானது பயணிகள் தங்களது காலை நீட்டி அமர்வதற்கு ஏதுவாக கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன், பயணிக்கும்போதே மசாஜ் செய்யும் வசதி காரின் இருக்கைகளில் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இது பயணத்தை அலாதியானதாக மாற்ற உதவும்.

சரக்கு வைப்பதற்கு சின்ன ஃபிரிட்ஜ், மசாஜ் செய்யும் இருக்கை... யப்பப்பா..! மெர்சிடிஸ் மேபேக் காரில் இவ்வளவு வசதிகளா?..

குளிர்சாதன பெட்டி

பானங்களை குளிர்ச்சியாக பருகுவதற்கு ஏதுவாக சிறிய குளிர்சாதன பெட்டி ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லீ போன்ற விலையுயர்ந்த கார்களில் இந்த வசதியைக் காண முடியும். இத்தகைய சிறப்பு வசதியையே மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் 600 காரில் தற்போது வழங்கியிருக்கின்றது.

சரக்கு வைப்பதற்கு சின்ன ஃபிரிட்ஜ், மசாஜ் செய்யும் இருக்கை... யப்பப்பா..! மெர்சிடிஸ் மேபேக் காரில் இவ்வளவு வசதிகளா?..

பிரத்யேகமாக சேம்பைன் பாட்டிலை வைத்துக் கொள்வதற்கு ஏதுவாகவே இக்குளிர்சாதன பெட்டி வழங்கப்பட்டிருக்கின்றது. இரண்டு முதல் நான்கு பாட்டில்கள் வரை அதற்குள் வைத்துக் கொள்ள முடியும். தேவையென்றால் தண்ணீர் பாட்டிலையும் வைத்துக் கொள்ளலாம்.

சரக்கு வைப்பதற்கு சின்ன ஃபிரிட்ஜ், மசாஜ் செய்யும் இருக்கை... யப்பப்பா..! மெர்சிடிஸ் மேபேக் காரில் இவ்வளவு வசதிகளா?..

பர்மெஸ்டர் 3டி சரவுண்ட் சிஸ்டம்

காருக்குள் 3டி சரவுண்டை வழங்குவதற்கு ஏதுவாக பரமெஸ்டர் சவுண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது மினி கிளப்பில் இருப்பதற்கு இணையான ஒலியை காருக்குள் ஏற்படுத்திக் கொடுக்கும். ஆகையால், சேம்பைன் பருகும்போது இந்த சவுண்ட் சிஸ்டத்துடன் ஜாலியாக ஓர் பயணத்தை மேற்கொள்ள முடியும்.

சரக்கு வைப்பதற்கு சின்ன ஃபிரிட்ஜ், மசாஜ் செய்யும் இருக்கை... யப்பப்பா..! மெர்சிடிஸ் மேபேக் காரில் இவ்வளவு வசதிகளா?..

இதற்காக காருக்குள் 26 உயர் ரக ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இத்துடன் சப்-ஊஃபரும் காருக்குள் பொருத்தப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து, ஐந்து 3டி பிராட்பேண்ட் ஸ்பீக்கர்கள், 27 சேனல் ஆம்பிளிஃபையரும் வழங்கப்பட்டுள்ளது.

சரக்கு வைப்பதற்கு சின்ன ஃபிரிட்ஜ், மசாஜ் செய்யும் இருக்கை... யப்பப்பா..! மெர்சிடிஸ் மேபேக் காரில் இவ்வளவு வசதிகளா?..

தானியங்கி ஏறு மேடை

மேபேக் ஜிஎல்எஸ் 600 காரின் பக்கவாட்டு பகுதியில் ஏறு மேடை ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தானாக இயங்கும் வசதியுடன் நிறுவனம் கொடுத்திருக்கின்றது. அதாவது, தேவை என்றால் வெளிப்புறத்தில் நீட்டியும், தேவைப்படாத நேரங்களில் மடக்கி வைத்துக் கொள்ளும் வசதியும் அந்த மேடைக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அது பள பளவென வெள்ளி நிறத்தில் காட்சியளிக்கின்றது.

சரக்கு வைப்பதற்கு சின்ன ஃபிரிட்ஜ், மசாஜ் செய்யும் இருக்கை... யப்பப்பா..! மெர்சிடிஸ் மேபேக் காரில் இவ்வளவு வசதிகளா?..

பெரிய அலாய் வீல்

மேபேக் ஜிஎல்எஸ் 600 சொகுசு காரில் 23 அங்குலத்திலான பெரிய அலாய் வீல் பொருத்தப்பட்டிருக்கின்றது. இந்தியாவிலேயே இத்தகைய பெரியளவிலான வீலை பெரும் முதல் கார் இதுவே ஆகும். காரின் கவர்ச்சியான தோற்றத்திற்காக இதனை பல ஸ்போக்குகளுடன் நிறுவனம் தயாரித்திருக்கின்றது. இதை அலங்கரிக்க மிக உயர் ரக செராமிக் குளாஸ் வண்ணப் பூச்சை பென்ஸ் பயன்படுத்தியிருக்கின்றது.

சரக்கு வைப்பதற்கு சின்ன ஃபிரிட்ஜ், மசாஜ் செய்யும் இருக்கை... யப்பப்பா..! மெர்சிடிஸ் மேபேக் காரில் இவ்வளவு வசதிகளா?..

இத்தகைய சொகுசு வசதிகள் நிறைந்த எஸ்யூவி காரையே பென்ஸ் இன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இக்காருக்கு இந்திய மதிப்பில் ரூ. 2.43 கோடி என்ற உச்சபட்ச விலையை நிறுவனம் நிர்ணயித்துள்ளது. பென்ட்லீ பென்டேகா, ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் மற்றும் ரேஞ்ஜ் ரோவர் எஸ்யூவி கார்களுக்கு போட்டியளிக்கும் வகையில் இக்கார் இந்தியாவில் களமிறக்கப்பட்டிருக்கின்றது.

Most Read Articles

English summary
Here Are 5 Stellar Features Available On Newly Introduced Mercedes Maybach GLS 600. Read In Tamil.
Story first published: Wednesday, June 9, 2021, 5:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X