2021ல் விற்பனைக்கு வந்த இ-கார்களின் பட்டியல்... மலிவு விலை இ-காரும் இந்த ஆண்டுதான் விற்பனைக்கு வந்துச்சு!

2021ம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு வந்த மின்சார கார்கள் பற்றிய தகவலை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

அத்தனையும் மின்சார கார்கள்... 2021ல் விற்பனைக்கு வந்த இ-கார்களின் பட்டியல்! விலை மலிவான இ-காரும் இந்த ஆண்டுதான் விற்பனைக்கு வந்தது!

2020ம் ஆண்டில் இருந்தே இந்தியாவில் மின் வாகனங்களுக்கு டிமாண்ட் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. அதிலும், நடப்பு 2021ம் ஆண்டில் அது பல மடங்கு உயர்ந்து காணப்படுகின்றது. இதன் விளைவாக நாட்டில் புதுமுக வாகனங்களின் வருகையும் அதிகரித்துக் காட்சியளிக்கின்றது.

அத்தனையும் மின்சார கார்கள்... 2021ல் விற்பனைக்கு வந்த இ-கார்களின் பட்டியல்! விலை மலிவான இ-காரும் இந்த ஆண்டுதான் விற்பனைக்கு வந்தது!

விரைவில் முடிவடைய இருக்கும் நடப்பாண்டிலும்கூட பல புதுமுக மின்சார வாகனங்கள் அறிமுகமாகி இருக்கின்றன. இரண்டு, மூன்று மற்றும் நான்கு என அனைத்து பிரிவுகளிலும் புதுமுக மின் வாகனங்களின் வருகை பட்டைய கிளப்பி இருக்கின்றது. அவற்றில் மிக முக்கியமான அறிமுகங்களாக கருதப்படும் புதுமுக எலெக்ட்ரிக் கார்களைப் பற்றிய தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

அத்தனையும் மின்சார கார்கள்... 2021ல் விற்பனைக்கு வந்த இ-கார்களின் பட்டியல்! விலை மலிவான இ-காரும் இந்த ஆண்டுதான் விற்பனைக்கு வந்தது!

அதாவது, நடப்பு 2021ம் ஆண்டில் விற்பனைக்கு வந்த மின்சார கார்கள் பற்றிய தகவலை இப்பதிவில் பார்க்க உள்ளோம். டாடா மோட்டார்ஸ் தொடங்கி ஜாகுவார் நிறுவனம் வரை பல முன்னணி நிறுவனங்கள் நடப்பாண்டை அலங்கரிக்கும் வகையில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றன. அவை பற்றிய விபரங்களை பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

அத்தனையும் மின்சார கார்கள்... 2021ல் விற்பனைக்கு வந்த இ-கார்களின் பட்டியல்! விலை மலிவான இ-காரும் இந்த ஆண்டுதான் விற்பனைக்கு வந்தது!

டாடா டிகோர் இவி (Tata Tigor EV)

இந்தியாவின் மலிவு விலை மின்சார கார் இதுவாகும். ஆமாங்க, தற்போது இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மின்சார கார் மாடல்களிலேயே மிகவும் மலிவு விலைக் கொண்ட இ-காராக டிகோர் இவி இருக்கின்றது. இதற்கு முன்னதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மற்றுமொரு மின்சார தயாரிப்பான நெக்ஸான் இவி நாட்டின் குறைந்த விலை எலெக்ட்ரிக் காராக இருந்தது குறிப்பிடத்தகுந்தது.

அத்தனையும் மின்சார கார்கள்... 2021ல் விற்பனைக்கு வந்த இ-கார்களின் பட்டியல்! விலை மலிவான இ-காரும் இந்த ஆண்டுதான் விற்பனைக்கு வந்தது!

இதைவிட குறைந்த விலைக் கொண்ட இ-காராக சந்தைக்குக் கொண்டு வரப்பட்டதே டிகோர் இவி. இந்த கார் இந்தியாவில் ரூ. 11.99 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இக்காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 306 கிமீ ரேஞ்ஜை வழங்கும்.

அத்தனையும் மின்சார கார்கள்... 2021ல் விற்பனைக்கு வந்த இ-கார்களின் பட்டியல்! விலை மலிவான இ-காரும் இந்த ஆண்டுதான் விற்பனைக்கு வந்தது!

இந்த அதிகபட்ச ரேஞ்ஜ் திறனுக்காக 26 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இத்துடன், 74 பிஎச்பி மற்றும் 170 என்எம் டார்க்கை வெளியேற்றும் மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. டாடா டிகோரின் வழக்கமான கார் மாடல் குளோபல் என்சிஏபி நடத்தி மோதல் ஆய்வில் ஐந்திற்கு நான்கு நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றது குறிப்பிடத்தகுந்தது.

அத்தனையும் மின்சார கார்கள்... 2021ல் விற்பனைக்கு வந்த இ-கார்களின் பட்டியல்! விலை மலிவான இ-காரும் இந்த ஆண்டுதான் விற்பனைக்கு வந்தது!

ஜாகுவார் ஐ-பேஸ் (Jaguar I-Pace)

நடப்பாண்டில் பட்ஜெட் வாகன பிரிவில் மின்சார கார்கள் வந்ததைக் காட்டிலும் லக்சூரி வாகன பிரிவிலேயே அதிகளவில் மின்சார கார்கள் விற்பனைக்கு வந்திருக்கின்றன என்று கூறலாம். அந்தவகையில், இந்திய மின்சார கார் பிரிவை அலங்கரிக்கும் வகையில் வந்த சொகுசு மின்சார காரே ஜாகுவார் ஐ-பேஸ். இந்த எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் ரூ. 1.06 கோடி என்ற விலையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

அத்தனையும் மின்சார கார்கள்... 2021ல் விற்பனைக்கு வந்த இ-கார்களின் பட்டியல்! விலை மலிவான இ-காரும் இந்த ஆண்டுதான் விற்பனைக்கு வந்தது!

இந்த காரில் 90kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 470 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். தொடர்ந்து, இரட்டை மின் மோட்டார் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. இவை 394 பிஎச்பி மற்றும் 696 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டவை ஆகும்.

அத்தனையும் மின்சார கார்கள்... 2021ல் விற்பனைக்கு வந்த இ-கார்களின் பட்டியல்! விலை மலிவான இ-காரும் இந்த ஆண்டுதான் விற்பனைக்கு வந்தது!

ஆடி இ-ட்ரான் 50 மற்றும் ஆடி இ-ட்ரான் 55 (Audi e-tron 50 and e-tron 55)

ஆடி நிறுவனம் வெவ்வேறு விதமான தோற்ற தேர்வில் மின்சார கார்களை விற்பனைக்கு வழங்கும் பொருட்டு இ-ட்ரான் 50 மற்றும் இ-ட்ரான் 55 மின்சார கார்களை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வந்தது. இக்கார் இந்தியாவில் கடந்த ஜூலை மாதமே நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

அத்தனையும் மின்சார கார்கள்... 2021ல் விற்பனைக்கு வந்த இ-கார்களின் பட்டியல்! விலை மலிவான இ-காரும் இந்த ஆண்டுதான் விற்பனைக்கு வந்தது!

இக்கார் 71 kWh மற்றும் 95 kWh ஆகிய இரு விதமான பேட்டரி பேக்கிலும் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கிறது. இதில், 71 kWh பேட்டரி பேக்கில் கிடைக்கும் ஆடி இ-ட்ரான் 359 கிமீ ரேஞ்ஜையும் (308 பிஎச்பி மற்றும் 540 என்எம் டார்க்கை வெளியேற்றும்), 95 kWh பேட்டரி பேக்கில் கிடைக்கும் ஆடி இ-ட்ரான் 484 கிமீ ரேஞ்ஜையும் (402 பிஎச்பி மற்றும் 664 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்) வழங்கும் திறனைக் கொண்டிருக்கின்றது.

அத்தனையும் மின்சார கார்கள்... 2021ல் விற்பனைக்கு வந்த இ-கார்களின் பட்டியல்! விலை மலிவான இ-காரும் இந்த ஆண்டுதான் விற்பனைக்கு வந்தது!

ஆடி இ-ட்ரான் ஜிடி (Audi e-tron GT)

ஆடி நிறுவனத்தின் இந்தியாவிற்கான மூன்றாம் தயாரிப்பு மின்சார வாகனம் இ-ட்ரான் ஜிடி. இந்த கார் இந்தியாவில் ரூ. 1.80 கோடிக்கும் அதிகமான விலை விற்கப்பட்டு வருகின்றது. இது இரு விதமான ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடைக்கும். எஸ் எனும் வேரியண்டில் விற்பனைக்குக் கிடைக்கும் இ-ட்ரான் ஜிடி 523 பிஎச்பி - 630 என்எம் டார்க் மற்றும் 388 கிமீ ரேஞ்ஜை வெளியேற்றும். இதன் ஆர்எஸ் இ-ட்ரான் ஜிடி வேரியண்ட் 637 பிஎச்பி பவர் - 830 என்எம் டார்க் மற்றும் 500 கிமீ ரேஞ்ஜை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது.

அத்தனையும் மின்சார கார்கள்... 2021ல் விற்பனைக்கு வந்த இ-கார்களின் பட்டியல்! விலை மலிவான இ-காரும் இந்த ஆண்டுதான் விற்பனைக்கு வந்தது!

போர்ஷே டேகேன் (Porsche Taycan)

போர்ஷே இந்தியா நாட்டில் டேகேன் மாடலில் அதன் மின்சார காரை விற்பனைக்குக் கொண்டு வந்தது. இது நான்கு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். ரூ. 1.50 கோடி தொடங்கி ரூ. 2.31 கோடி வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். தொடர்ந்து, இரு விதமான பேட்டரி பேக் தேர்விலும் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 79.2kWh மற்றும் 93.4kWh பேட்டரி பேக் தேர்வுகள் இதில் வழங்கப்படுகின்றன.

அத்தனையும் மின்சார கார்கள்... 2021ல் விற்பனைக்கு வந்த இ-கார்களின் பட்டியல்! விலை மலிவான இ-காரும் இந்த ஆண்டுதான் விற்பனைக்கு வந்தது!

பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் (BMW iX)

பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தும் முதல் மின்சார கார் இது. இக்கார் இந்தியாவில் ரூ. 1.16 கோடி என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. எக்ஸ் டிரைவ் 40 ட்ரிம் ஒற்றை தேர்வில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், 71kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 425 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இக்காரின் முதல் லாட்டிற்கான விற்பனை முடிவடைந்துவிட்டது குறிப்பிடத்தகுந்தது.

அத்தனையும் மின்சார கார்கள்... 2021ல் விற்பனைக்கு வந்த இ-கார்களின் பட்டியல்! விலை மலிவான இ-காரும் இந்த ஆண்டுதான் விற்பனைக்கு வந்தது!

மேலே பார்த்த கார்கள் மட்டுமின்றி இன்னும் பல மின்சார கார்கள் இந்தியாவில் வெளியீட்டைப் பெற்று விட்டு விற்பனைக்கு வருவதற்காக தயாராக இருக்கின்றன. அவற்றின் அறிமுகம் மிக விரைவில் இந்தியாவில் அரங்கேற இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
Here is a list of electric vehicles that launched in india in 2021
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X