இந்தியாவில் இவ்ளோ விலை உயர்ந்த மின்சார கார்களா? நினைச்சு கூட பாக்க முடியல! ஒவ்வொன்னும் கோடிய தாண்டுது!

ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் கார்களின் பட்டியலை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவில் இவ்ளோ விலை உயர்ந்த மின்சார கார்களா? நினைச்சு கூட பாக்க முடியல! ஒவ்வொன்னும் கோடிய தாண்டுது!

இந்தியாவில் மின் வாகனங்களுக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. உலகளவிலும் இதே நிலையே தென்படுகின்றது. மேலும், மின் வாகனங்கள் இப்போதே பிரபலமடையத் தொடங்கியிருப்பதால் அவற்றின் விலை பல மடங்கு உயர்வாக உள்ளது. இவற்றின் விலையை பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு இணையாகக் குறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் இவ்ளோ விலை உயர்ந்த மின்சார கார்களா? நினைச்சு கூட பாக்க முடியல! ஒவ்வொன்னும் கோடிய தாண்டுது!

இந்தியாவிலும் இதுமாதிரியான முயற்சிகள் எடுக்க்ப்பட்டு வருகின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அண்மையில் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது. இதுகுறித்த விரிவான தகவலை கீழே காணலாம். இதற்கு முன்னதாக தற்போது நாட்டில் மிக மிக அதிக விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் எலெக்ட்ரிக் கார்கள் பற்றிய தகவலைப் பார்த்துவிடலாம்.

இந்தியாவில் இவ்ளோ விலை உயர்ந்த மின்சார கார்களா? நினைச்சு கூட பாக்க முடியல! ஒவ்வொன்னும் கோடிய தாண்டுது!

இந்தியாவில் ஆரம்ப நிலை எலெக்ட்ரிக் காரின் விலையே ரூ. 11.99 லட்சம் ஆகும். டாடா நிறுவனத்தின் டிகோர் இவி-யே இந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆகையால், இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் காராகவும் டிகோர் இவி திகழ்கின்றது. இதைவிட பல மடங்கு உயர்ந்த விலைக் கொண்ட, அதாவது, கோடி ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் ஐந்து மின்சார கார்களின் பட்டியலையே இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இந்தியாவில் இவ்ளோ விலை உயர்ந்த மின்சார கார்களா? நினைச்சு கூட பாக்க முடியல! ஒவ்வொன்னும் கோடிய தாண்டுது!

மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி (Mercedes-Benz EQC)

விலை: ரூ. 1.07 கோடி (எக்ஸ்-ஷோரூம் விலை)

இந்தியாவில் விற்பனைக்கு வந்த முதல் சொகுசு வசதிகள் கொண்ட மின்சார கார் மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி (Mercedes-Benz EQC) ஆகும். ஆடம்பர வசதிகள் கொண்ட மின்சார கார் பிரிவில் சற்றே குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் மின்சார கார்களில் இதுவும் ஒன்று. ஆகையால், இந்திய சொகுசு வாகன பிரியர்கள் மத்தியில் இக்காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது.

இந்தியாவில் இவ்ளோ விலை உயர்ந்த மின்சார கார்களா? நினைச்சு கூட பாக்க முடியல! ஒவ்வொன்னும் கோடிய தாண்டுது!

இந்த மின்சார கார் அதிக சிறப்பு வசதிகளைத் தாங்கி நிற்கின்றது. வெறும் 5.1 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் திறனை இந்த எலெக்ட்ரிக் கொண்டிருக்கின்றது. இத்துடன், பாதுகாப்பு மற்றும் சொகுசு அம்சங்களும் ஏராளமாக வழங்கப்பட்டுள்ளன. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 370 கிமீ தூரம் முதல் 414 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். ஏசி மற்றும் டிசி என இரு விதமான பாயிண்டுகளிலும் இக்காரை சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

இந்தியாவில் இவ்ளோ விலை உயர்ந்த மின்சார கார்களா? நினைச்சு கூட பாக்க முடியல! ஒவ்வொன்னும் கோடிய தாண்டுது!

ஜாகுவார் ஐ-பேஸ் (Jaguar I-Pace)

விலை: ரூ. 1.05 கோடி (எக்ஸ்-ஷோரூம் விலை)

ஜாகுவார் ஐ-பேஸ் ஓர் அனைத்து வீல்களும் இயங்கும் திறன் கொண்ட எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் காராகும். இது வெறும் 4.8 செகண்டுகளில் மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும். இந்த அதிகபட்ச திறனை வெளிப்படுத்துவதற்காக 480 பிஎஸ் திறன் மற்றும் 700 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த மின்சார காரில் ஜாகுவார் நிறுவனம் 90kWh பேட்டரி பேக்கை பயன்படுத்தி இருக்கின்றது.

இந்தியாவில் இவ்ளோ விலை உயர்ந்த மின்சார கார்களா? நினைச்சு கூட பாக்க முடியல! ஒவ்வொன்னும் கோடிய தாண்டுது!

இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 470 கிமீ ரேஞ்ஜை வெளிப்படுத்தும். இந்த மின்சார கார் World Car Of The Year எனும் விருதை வென்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த விருதை மூன்று ஆண்டுகளாக இந்த காரே தட்டி சென்றுக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், ஜாகுவார் நிறுவனம் இக்காரை ஐ-பேஸ் கருப்பு எடிசன் (I-Pace Black edition)-லும் விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

இந்தியாவில் இவ்ளோ விலை உயர்ந்த மின்சார கார்களா? நினைச்சு கூட பாக்க முடியல! ஒவ்வொன்னும் கோடிய தாண்டுது!

ஆடி இ-ட்ரான் (Audi e-tron)

விலை: ரூ. 1 கோடி (எக்ஸ்-ஷோரூம் விலை)

ஆடி நிறுவனம் இந்தியாவில் களமிறக்கிய முதல் மின்சார கார் இ-ட்ரான். இந்த எலெக்ட்ரிக் காரில் 360 பிஎஸ் பவரை வெளியேற்றக் கூடிய மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது வெறும் 5.7 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும்.

இந்தியாவில் இவ்ளோ விலை உயர்ந்த மின்சார கார்களா? நினைச்சு கூட பாக்க முடியல! ஒவ்வொன்னும் கோடிய தாண்டுது!

இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 350 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் ஒட்டுமொத்த எடை 2.4 டன் ஆகும். ஆடி நிறுவனம் இதில் இ-ட்ரான் 50 குவாட்ரோ எனும் தேர்வை வழங்கி வருவது குறிப்பிடத்தகுந்தது. இது வழக்கமான வேரியண்டைக் காட்டிலும் 17 லட்சம் அதிகமான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இந்தியாவில் இவ்ளோ விலை உயர்ந்த மின்சார கார்களா? நினைச்சு கூட பாக்க முடியல! ஒவ்வொன்னும் கோடிய தாண்டுது!

ஆடி இ-ட்ரான் ஜிடி (Audi e-tron GT)

விலை: ரூ. 1.8 கோடி (எக்ஸ்-ஷோரூம் விலை)

ஆடி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கி வரும் மற்றுமொரு மின்சார வாகனமாக இ-ட்ரான் ஜிடி இருக்கின்றது. மேலே பார்த்த இரு மின்சார மாடல்களைக் காட்டிலும் மிக அதிக விலை, அதிக திறன் வெளிப்பாடு, ரேஞ்ஜ் ஆகியவற்றைக் கொண்ட இது இருக்கின்றது. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் வெறும் 3.3 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை இந்த கார் எட்டிவிடும்.

இந்தியாவில் இவ்ளோ விலை உயர்ந்த மின்சார கார்களா? நினைச்சு கூட பாக்க முடியல! ஒவ்வொன்னும் கோடிய தாண்டுது!

போர்ஷே டேகான் (Porsche Taycan)

விலை: ரூ. 1.5 கோடி (எக்ஸ்-ஷோரூம் விலை)

சொகுசு உற்பத்தி நிறுவனமான போர்ஷே, இந்தியாவில் களமிறக்கும் முதல் மின்சார கார் மாடல் இதுவே ஆகும். மிக மிக சமீபத்திலேயே இக்காரை நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இக்காரில் 761 பிஎஸ் பவரை வெளியேற்றக் கூடிய மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

இந்தியாவில் இவ்ளோ விலை உயர்ந்த மின்சார கார்களா? நினைச்சு கூட பாக்க முடியல! ஒவ்வொன்னும் கோடிய தாண்டுது!

இதை வைத்தே இக்கார் மற்ற மின்சார கார்களைக் காட்டிலும் மிக மிக அதிக திறனைக் கொண்ட கார் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகின்றோம். இக்கார் 2.8 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டக் கூடியதாக போர்ஷே டேகான் காட்சியளிக்கின்றது.

Most Read Articles
English summary
Here is a list of top 5 electric vehicles with high cost in india
Story first published: Monday, November 15, 2021, 18:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X