ஒத்த காருக்கு போட்டியா நாட்டில் களமிறங்க உள்ள கார்கள்... ஒட்டுமொத்தமா ஐந்து புதுமுகங்கள் அறிமுகமாக போகுதாம்!

ஒரே ஒரு காருக்கு போட்டியளிக்கும் வகையில் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக ஐந்து புதுமுக கார்கள் களமிறங்க இருக்கின்றன. இந்த புதுமுக கார்களின் வரவை அந்தந்த தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்கனவே உறுதி செய்திருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஹூண்டாய் க்ரெட்டா ஒற்றை காருக்கு போட்டியாக இந்தியாவில் களமிறங்க இருக்கும் கார்கள்... ஐந்து புதுமுகங்கள் அறிமுகமாக போகுதாம்!

நாட்டில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி ரக கார்களில் ஒன்றாக Hyundai நிறுவனத்தின் Creta கார் இருக்கின்றது. இந்த காருக்கே போட்டியளிக்கும் வகையில் மிக விரைவில் ஐந்து புதுமுக கார்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. இவற்றின் அறிமுகங்களை ஏற்கனவே அந்தந்த தயாரிப்பு நிறுவனங்கள் உறுதி செய்திருக்கின்றன.

ஹூண்டாய் க்ரெட்டா ஒற்றை காருக்கு போட்டியாக இந்தியாவில் களமிறங்க இருக்கும் கார்கள்... ஐந்து புதுமுகங்கள் அறிமுகமாக போகுதாம்!

என்னென்ன கார்கள் Hyundai Creta-விற்கு போட்டியளிக்கும் வகையில் வர இருக்கின்றன. அவற்றின் சிறப்புகள் என்ன என்பது பற்றிய தகவலை இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம். Hyundai Creta ஓர் மிட்-சைஸ் எஸ்யூவி ரக காராகும். இது பிரீமியம் வசதிகள் ஏராளமாக உள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஹூண்டாய் க்ரெட்டா ஒற்றை காருக்கு போட்டியாக இந்தியாவில் களமிறங்க இருக்கும் கார்கள்... ஐந்து புதுமுகங்கள் அறிமுகமாக போகுதாம்!

Volkswagen Taigun

Hyundai Creta-விற்கு போட்டியாக இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் கார் மாடல்களில் Volkswagen Taigun-ம் ஒன்று. இந்த காரை அறிமுகம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் Volkswagen செய்துவிட்டது. ஆகையால், வரும் செப்டம்பர் மாதம் Taigun இந்திய சாலைகளைப் பதம் பார்க்கும் என தெரிகின்றது.

ஹூண்டாய் க்ரெட்டா ஒற்றை காருக்கு போட்டியாக இந்தியாவில் களமிறங்க இருக்கும் கார்கள்... ஐந்து புதுமுகங்கள் அறிமுகமாக போகுதாம்!

மேலும், ஏற்கனவே இக்காருக்கான புக்கிங்கை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இதுமட்டுமின்றி, தனது சக்கன் உற்பத்தி ஆலையில் காரை தயாரிக்கும் பணிகளையும் நிறுவனம் தொடங்கிவிட்டது. ஆகையால், புக்கிங் வாடிக்கையாளர்களுக்கு காரை டெலிவரி செய்யும் பணியை Volkswagen கூடிய விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹூண்டாய் க்ரெட்டா ஒற்றை காருக்கு போட்டியாக இந்தியாவில் களமிறங்க இருக்கும் கார்கள்... ஐந்து புதுமுகங்கள் அறிமுகமாக போகுதாம்!

Volkswagen நிறுவனம் Taigun காரை அதன் MQB AO IN எனும் பிளாட்பாரத்தில் வைத்து உருவாக்கி வருகின்றது. 1.0 லிட்டர், மூன்று சிலிண்டர் மற்றும் 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போ பெட்ரோல் என இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் Taigun எஸ்யூவி காரை விற்பனைக்கு வழங்க இருக்கின்றது, Volkswagen. 6 ஸ்பீடு மேனுவல் (1.0 லிட்டர் எஞ்ஜினில் மட்டும் கிடைக்கும்) மற்றும் 6 ஸ்பீடு தானியங்கி (1.0 லிட்டர் எஞ்ஜினில் மட்டும் கிடைக்கும்) மற்றும் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி (1.5 லிட்டர் எஞ்ஜினில் மட்டும் கிடைக்கும்) ஆகிய கியர்பாக்ஸ் தேர்வுகளையும் நிருவனம் வழங்க இருகின்றது.

ஹூண்டாய் க்ரெட்டா ஒற்றை காருக்கு போட்டியாக இந்தியாவில் களமிறங்க இருக்கும் கார்கள்... ஐந்து புதுமுகங்கள் அறிமுகமாக போகுதாம்!

MG Astor

MG Astor கார் Hyundai Creta-விற்கு மட்டுமின்றி மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் ஒட்டுமொத்த தயாரிப்புகளுக்குமே கடும் போட்டியை வழங்க இருக்கின்றது. இக்காரின் அறிமுகமும் வரும் செப்டம்பர் மாதமே அரங்கேற இருக்கின்றது. இதனை கார் உற்பத்தியாளர் மிக சமீபத்திலேயே உறுதி செய்தார்.

ஹூண்டாய் க்ரெட்டா ஒற்றை காருக்கு போட்டியாக இந்தியாவில் களமிறங்க இருக்கும் கார்கள்... ஐந்து புதுமுகங்கள் அறிமுகமாக போகுதாம்!

MG Astor காரில் மிக மிக சிறப்பு அம்சம் ஒன்றை நிறுவனம் புகுத்த இருக்கின்றது. செயற்கை நுண்ணறிவு மற்றும் லெவல் இரண்டு தன்னாட்சி தொழில்நுட்பம் கொண்ட உதவியாளர் வசதி இக்காரில் வழங்கப்பட இருக்கின்றது. இத்தகைய சிறப்பு தொழில்நுட்ப வசதியுடன் நாட்டில் விற்பனைக்கு வர இருக்கும் முதல் கார் இதுவே ஆகும்.

ஹூண்டாய் க்ரெட்டா ஒற்றை காருக்கு போட்டியாக இந்தியாவில் களமிறங்க இருக்கும் கார்கள்... ஐந்து புதுமுகங்கள் அறிமுகமாக போகுதாம்!

ஆகையால், ஒட்டுமொத்த இந்தியர்களின் பாார்வையும் MG Astor காரின் பக்கம் திரும்பியிருக்கின்றது. இதுமட்டுமின்றி, ஸ்மார்ட் ஐஹப் எனப்படும் கார் இணைப்பு தொழில்நுட்பம், ஜியோவின் இன்டர்நெட் வசதி, ஸ்மார்ட்போன் இணைப்பு வசதியுடன் கூடிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் என பிரம்மிக்க வைக்கும் தொழில்நுட்ப வசதிகள் இந்த காரில் இடம் பெற இருக்கின்றன.

ஹூண்டாய் க்ரெட்டா ஒற்றை காருக்கு போட்டியாக இந்தியாவில் களமிறங்க இருக்கும் கார்கள்... ஐந்து புதுமுகங்கள் அறிமுகமாக போகுதாம்!

Honda Elevate

Honda நிறுவனம் மிக சமீபத்திலேயே இந்த காரின் வருகை குறித்த தகவலை உறுதி செய்தது. அது, இந்தியர்களுக்கான ஓர் பிரத்யேக மிட்-சைஸ் கார் உருவாக்கத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியிட்டது. உற்பத்தி தயாராக இருக்கும் அக்கார் Elevate எனும் பெயரில் விற்பனைக்கு வரும் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹூண்டாய் க்ரெட்டா ஒற்றை காருக்கு போட்டியாக இந்தியாவில் களமிறங்க இருக்கும் கார்கள்... ஐந்து புதுமுகங்கள் அறிமுகமாக போகுதாம்!

ஆனால், இப்பெயர்குறித்த தகவலை இதுவரை Honda உறுதிப்படுத்தவில்லை. தனது புகழ்வாய்ந்த கார் மாடல்களில் ஒன்றான City செடான் ரக காரில் இடம் பெற்றிருக்கும் எஞ்ஜினையே இப்புதிய தயாரிப்பில் Honda பயன்படுத்த இருக்கின்றது. ஆகையால், 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் புதுமுக Honda எஸ்யூவி கார் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹூண்டாய் க்ரெட்டா ஒற்றை காருக்கு போட்டியாக இந்தியாவில் களமிறங்க இருக்கும் கார்கள்... ஐந்து புதுமுகங்கள் அறிமுகமாக போகுதாம்!

New Mahindra XUV500

Mahindra நிறுவனம் அதன் புகழ்பெற்ற XUV500 எஸ்யூவி காரை புதுப்பிக்கப்பட்ட ஓர் காராக மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்க திட்டமிட்டுள்ளது. தற்போது விற்பனையில் இருக்கும் XUV300 மற்றும் மிக சமீபத்தில் அறிமுகமான XUV700 ஆகிய இரு கார்களுக்கும் இடைப்பட்ட இடத்தில் இக்கார் நிலை நிறுத்தப்பட இருக்கின்றது.

ஹூண்டாய் க்ரெட்டா ஒற்றை காருக்கு போட்டியாக இந்தியாவில் களமிறங்க இருக்கும் கார்கள்... ஐந்து புதுமுகங்கள் அறிமுகமாக போகுதாம்!

மேலும், Mahindra இந்த காரில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய எஞ்ஜின் தேர்வுகளையும் வழங்க இருக்கின்றது. இந்த எஞ்ஜின்கள் பிஎஸ்6 இரண்டு விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட இருப்பதாகவும், இதனையே மறு அறிமுகம் பெற இருக்கும் XUV500 காரில் Mahindra இடம்பெற செய்ய இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹூண்டாய் க்ரெட்டா ஒற்றை காருக்கு போட்டியாக இந்தியாவில் களமிறங்க இருக்கும் கார்கள்... ஐந்து புதுமுகங்கள் அறிமுகமாக போகுதாம்!

Maruti Suzuki New SUV

Maruti Suzuki நிறுவன் அதன் SUV ரக கார் பிரிவை சற்று விரிவாக்கம் செய்ய இருக்கின்றது. இதனடிப்படையில் ஓர் புதுமுக மிட்-சைஸ் எஸ்யூவி காரை உருவாக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இக்காரின் பெயர் மற்றும் முக்கிய விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

ஹூண்டாய் க்ரெட்டா ஒற்றை காருக்கு போட்டியாக இந்தியாவில் களமிறங்க இருக்கும் கார்கள்... ஐந்து புதுமுகங்கள் அறிமுகமாக போகுதாம்!

அதேசமயம், Hyundai Creta-விற்கு போட்டியாக மிக விரைவில் ஓர் தயாரிப்பை களமிறக்க திட்டமிட்டிருப்பதை நிறுவனம் அண்மையில் உறுதிப்படுத்தியது. இந்த கார் Suzuki-Toyota இணைவில் உருவாக்கப்பட இருக்கின்றது. Toyota நிறுவனத்தின் கர்நாடாக பிடாடி ஆலையில் வைத்தே இப்புதிய கார் உருவாக்கப்பட உள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டா ஒற்றை காருக்கு போட்டியாக இந்தியாவில் களமிறங்க இருக்கும் கார்கள்... ஐந்து புதுமுகங்கள் அறிமுகமாக போகுதாம்!

புதுமுக எஸ்யூவி Toyota-வின் DNGA பிளாட்பாரத்தில் வைத்து உருவாக்கப்பட்டு வருகின்றது. இந்த கார் 4.3 மீட்டர் நீளத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றது. இது அடுத்த வருடம் இறுதிக்குள் விற்பனைக்கு வந்துவிடும் என தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
Here is the confirmed list for hyundai creta rivals
Story first published: Saturday, August 21, 2021, 11:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X