நினைவுகளை திரும்ப வைக்கும் 2K-வின் 7அழகிய கார் மாடல்கள்... இந்த கார் மாடல்களை யாரெல்லாம் மிஸ் பண்றீங்க?

பழைய நினைவுகளை திரும்ப வரவைக்கக் கூடிய 2000ஸ்-களில் விற்பனையில் இருந்த அழகிய கார் மாடல்கள் சிலவற்றைக் குறித்த பிரத்யேக தகவலை இப்பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். அந்த கார்கள் குறித்த முக்கிய தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

நினைவுகளை திரும்ப வைக்கும் 2K-வின் 7அழகிய கார் மாடல்கள்... இந்த கார் மாடல்களை யாரெல்லாம் மிஸ் பண்றீங்க!

நீங்க நினைக்குறது ரொம்ப தப்பு... நம்மில் பலர் இப்போதுதான் இந்தியாவில் மிகவும் அழகான வாகனங்கள் விற்பனைக்கு வருவதாக நினைக்கின்றோம். ஆனால், 2000த்தின் தொடக்கத்திலேயே இந்தியாவில் அழகிய கார் மாடல்கள் பல விற்பனைக்கு வந்திருக்கின்றன. அவற்றில் ஏழு முக்கியமான கார் மாடல்களையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

நினைவுகளை திரும்ப வைக்கும் 2K-வின் 7அழகிய கார் மாடல்கள்... இந்த கார் மாடல்களை யாரெல்லாம் மிஸ் பண்றீங்க!

இவையனைத்தும் இந்தியர்களின் நினைவில் நீங்க இடத்தைப் பிடித்திருக்கின்ற என்றுகூட கூறலாம். இந்திய ஆட்டோமொபைல் துறையின் பொற்காலம் என்று விவரிக்கக்கூடிய அந்த கால கட்டத்தில் (2000த்தில்) நாம் தற்போது பார்க்க இருக்கும் ஏழு கார் மாடல்களும் விற்பனைக்கு வந்திருக்கின்றன.

நினைவுகளை திரும்ப வைக்கும் 2K-வின் 7அழகிய கார் மாடல்கள்... இந்த கார் மாடல்களை யாரெல்லாம் மிஸ் பண்றீங்க!

Daewoo Matiz

இப்பட்டியலில் நாம் முதலில் பார்க்க இருப்பது டேவூ மேடிஸ் (Daewoo Matiz) கார் மாடல் பற்றியே ஆகும். இது ஓர் ஹேட்ச்பேக் ரக கார் மாடலாகும். 2000மாவது ஆண்டில் இந்தியாவில் விற்பனையில் இருந்த மிகவும் அழகான கார் மாடல்களில் இதுவும் ஒன்று. இதன் டிசைன் கவர்ச்சியான உருவம் கொண்ட கார் பிரியர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும், இது கார் அழகானது மட்டுமல்ல. அதிக இட வசதிக் கொண்டதும்கூட.

நினைவுகளை திரும்ப வைக்கும் 2K-வின் 7அழகிய கார் மாடல்கள்... இந்த கார் மாடல்களை யாரெல்லாம் மிஸ் பண்றீங்க!

இக்காரில் பெப்பி 800சிசி எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது அதிகபட்சமாக 52 எச்பி மற்றும் 71 என்எம் டார்க் வெளியேற்றும் திறன் கொண்டது. இக்கார் அழகாக இருந்தும் வாடிக்கையாளர்களைக் கவர தவறிவிட்டது. குறிப்பாக, டாடா இன்டிகா மற்றும் மாருதி 800 ஆகிய கார்களுடன் இது போட்டி போட முடியாமல் திணறியது. இதன் விளைவாக சந்தையை விட்டு டேவூ மேடிஸ் வர்த்தகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது.

நினைவுகளை திரும்ப வைக்கும் 2K-வின் 7அழகிய கார் மாடல்கள்... இந்த கார் மாடல்களை யாரெல்லாம் மிஸ் பண்றீங்க!

Opel Astra

ஓபல் ஆஸ்ட்ரா, இது ஓர் கிளாசி செடான் ரக கார் ஆகும். இந்த கார் இந்தியாவில் 1998 தொடங்கி 2002ம் ஆண்டு வரை விற்பனையில் இருந்தது. இதன் விளை ரூ. 8 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். அதிக பிரீமியம் தர வசதிகளை இது கொண்டிருந்ததால் இத்தகைய அதிக விலையில் இக்கார் விற்கப்பட்டது. இதன் விளைவாக பலரின் மனதைக் கவர தவறிவிட்டது. இதனால் விற்பனையில் இருந்து விளக்கிக் கொள்ளும் நிலை உருவாகியது.

நினைவுகளை திரும்ப வைக்கும் 2K-வின் 7அழகிய கார் மாடல்கள்... இந்த கார் மாடல்களை யாரெல்லாம் மிஸ் பண்றீங்க!

Fiat Palio

ஃபியாட் நிறுவனம் உருவாக்கிய மாஸ்டர்பீஸ் ரக வாகனம் என பேலியோ மாடலை குறிப்பிடலாம். இந்த ஹேட்ச்பேக் கார் பன்முக எஞ்ஜின் தேர்வில் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்தது குறிப்பிடத்தகுந்தது. மிக சிறந்த ஹேண்ட்லிங் வசதி மற்றும் உருவ தோற்றத்தைக் கொண்ட காராக இது இருந்தது குறிப்பிடத்தகுந்தது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் 2000த்திலேயே அதிக சிறப்பம்சங்கள் கொண்ட காராக இது விற்பனைக்கு வந்தது. இருப்பினும், வாடிக்கையாளர்களை கவர இது தவறிவிட்டது. இதன் இறுதியாக இக்கார் சந்தையை விட்டு வெளியேற்றப்பட்டுவிட்டது.

நினைவுகளை திரும்ப வைக்கும் 2K-வின் 7அழகிய கார் மாடல்கள்... இந்த கார் மாடல்களை யாரெல்லாம் மிஸ் பண்றீங்க!

Mitsubishi Lancer

2000த்தில் இந்தியாவின் அதிக திறன் வெளிப்பாடு வசதிக் கொண்ட காராக விற்பனைக்குக் கிடைத்த வாகனமே மிட்சுபிஷி லேன்சர். இந்த கார் இந்தியாவில் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.8 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என பல வித எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைத்தது. இக்காரின் விலை ரூ. 9.54 லட்சம் ஆகும். ஆகையால், மிகவும் காஸ்ட்லியான செடானாக காட்சியளித்தது. இக்கார் மீதிருக்கும் அதிக காதல் காரணமாக தற்போதும் ஒரு சிலர் இக்காரை பராமரித்து வருகின்றனர்.

நினைவுகளை திரும்ப வைக்கும் 2K-வின் 7அழகிய கார் மாடல்கள்... இந்த கார் மாடல்களை யாரெல்லாம் மிஸ் பண்றீங்க!

Image Courtesy: Gomechanic

Hyundai Santro

ஒரு காலத்தில் இந்தியாவில் விற்பனையில் வெற்ற நடைப்போட்ட கார் மாடலில் ஹூண்டாய் சேன்ட்ரோ-வும் ஒன்று. மிக கவர்ச்சியான தோற்றம் மற்றும் வசதிகளை இது கொண்டிருந்த காரணத்தினால் இந்தியாவில் நல்ல டிமாண்டைப் பெற்றது. இதனை பலர் டால்பாய் என செல்லமாக அழைத்தனர். அந்தளவிற்கு மிக சிறந்த வாகனமாக நாட்டில் விற்பனைக்குக் கிடைத்தது. இருப்பினும், போட்டி அதிகரிப்பு போன்ற சில கடுமையான காரணங்களால் இக்கார் இந்திய சந்தையை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கின்றது.

நினைவுகளை திரும்ப வைக்கும் 2K-வின் 7அழகிய கார் மாடல்கள்... இந்த கார் மாடல்களை யாரெல்லாம் மிஸ் பண்றீங்க!

Fiat Uno

ஃபியாட் உனோ இந்த பெயர் நமக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். ஆனால், பல 60ஸ் மற்றும் 70ஸ் கிட்ஸ்களின் முதல் காராக இது இருக்கின்றது. முதல் காராக மட்டுமில்லைங்க மனம் கவர்ந்த காராகவும் இது இருக்கின்றது. இக்கார் இந்தியாவில் பேல் இந்தியா கூட்டணியில் விற்பனைக்குக் கிடைத்தது.

நினைவுகளை திரும்ப வைக்கும் 2K-வின் 7அழகிய கார் மாடல்கள்... இந்த கார் மாடல்களை யாரெல்லாம் மிஸ் பண்றீங்க!

Image Courtesy: Gomechanic

ஆனால், போதியளவு விற்பனையை இக்கார் பெறவில்லை. விளம்பரம் பொய்த்து போனதனால் இந்த நிலை உனோவிற்கு ஏற்பட்டிருக்கின்றது. இதன் விளைவாக இக்காரும் இந்திய சந்தையை விட்டு விரைவில் வெளியேறியது. அதேவேலையில் இக்காரை அதிக உறுதியான மற்றும் சிறந்த கவர்ச்சியான கார் மாடலாக நிறுவனம் உருவாக்கியது. குறிப்பிடத்தகுந்தது.

நினைவுகளை திரும்ப வைக்கும் 2K-வின் 7அழகிய கார் மாடல்கள்... இந்த கார் மாடல்களை யாரெல்லாம் மிஸ் பண்றீங்க!

Image Courtesy: Wiki Commons/Premnath Kudva

Maruti Suzuki Zen

மாருதி சுசுகி ஜென் இக்கார் இப்போதும் சிலரின் கராஜில் நிறுத்தி வைத்திருப்பதை நம்மால் பார்த்திருக்க முடியும். பலரின் முதல் காராக இது இருக்கின்ற காரணத்தினால் சென்டிமெண்டாக பலர் இக்காரை தற்போதும் பராமரித்து வருகின்றனர். அந்தளவிற்கு மிக சிறப்பான காராக ஜென் இருக்கின்றது. அதிக போட்டி மற்றும் புதுமுகங்களால் இக்கார் விரைவில் பெரும் விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்தது. இதன் விளைவாக தற்போது இக்கார் விற்பனையில் இல்லாத நிலை உருவாகியிருக்கின்றது.

நினைவுகளை திரும்ப வைக்கும் 2K-வின் 7அழகிய கார் மாடல்கள்... இந்த கார் மாடல்களை யாரெல்லாம் மிஸ் பண்றீங்க!

Maruti Suzuki Alto

மாருதி சுசுகி நிறுவனத்தின் மற்றுமொரு மிக சிறந்த மற்றும் இந்தியர்களின் மனம் கவர்ந்த காராக ஆல்டோ இருக்கின்றது. 16 வருடங்களுக்கும் அதிகமாக இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் காராக ஆல்டோ விற்பனையில் இருந்தது. இதுமாதிரியான அமோக வரவேற்பால் பல தலைமுறையைத் தாண்டி தற்போதும் இக்கார் விற்பனையில் இருந்து வருகின்றது. புதிய அவதாரங்களுடன் இந்த கார் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

Most Read Articles
English summary
Here is the list most beautiful cars of 2000s era
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X