ஸ்டூடன்ட்ஸ் வாழ்க்கையை எஞ்ஜாய் பண்ண ஏற்ற கார்கள்... மொத்தம் 10 வகையான கார் மாடல்கள் நம்ம நாட்டுல இருக்கு!

மாணவர்களுக்கு ஏற்ற கார்கள் மாடல்கள் எது என்பது பற்றிய தகவலை இப்பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இப்பட்டியலில் என்னென் கார்கள் இடம் பிடித்துள்ளன என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

ஸ்டூடன்ட்ஸ் வாழ்க்கையை எஞ்ஜாய் பண்ண ஏற்ற கார்கள்... மொத்தம் 10 வகையான கார் மாடல்கள் நம்ம நாட்டுல இருக்கு!

குடும்பத்துடன் பயணிப்பதற்கு, நீண்ட தூர பயணங்களுக்கு மற்றும் அட்வென்சர் பயணங்களுக்கு ஏற்ற கார்கள் இருப்பது போல மாணவர்கள் மற்றும் இளம் தொழில் முனைவோர் (நிபுணர்களுக்கு) ஏற்ற கார்களும் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அவை என்ன கார்கள் என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். ஒட்டுமொத்தமாக 10 சிறந்த கார்களின் பட்டியலை இப்பதிவில் வழங்கியிருக்கின்றோம் வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ஸ்டூடன்ட்ஸ் வாழ்க்கையை எஞ்ஜாய் பண்ண ஏற்ற கார்கள்... மொத்தம் 10 வகையான கார் மாடல்கள் நம்ம நாட்டுல இருக்கு!

Renault Kwid

Renault Kwid இந்தியாவின் மிகக் குறைந் விலை கார்களில் ஒன்றாகும். எனவேதான் இதனை இளம் தொழில்முனைவோர் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஏற்ற காராக பரிந்துரைக்கப்படுகின்றது. இந்த கார் இந்தியாவில் ரூ. 3.18 லட்சம் தொடங்கி ரூ. 5.39 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

ஸ்டூடன்ட்ஸ் வாழ்க்கையை எஞ்ஜாய் பண்ண ஏற்ற கார்கள்... மொத்தம் 10 வகையான கார் மாடல்கள் நம்ம நாட்டுல இருக்கு!

இந்த கார் ஒரு லிட்டருக்கு 22.3 கிமீ மைலேஜை வழங்கும். இத்துடன், 8 இன்சிலான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் என பல்வேறு சிறப்பு வசதிகளுடன் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. மேலும், இருவிதமான எஞ்ஜின் தேர்விலும் Renault Kwid விற்பனைக்குக் கிடைக்கிறது.

ஸ்டூடன்ட்ஸ் வாழ்க்கையை எஞ்ஜாய் பண்ண ஏற்ற கார்கள்... மொத்தம் 10 வகையான கார் மாடல்கள் நம்ம நாட்டுல இருக்கு!

Tata Tiago

Tata Tiago வும் இது ஓர் மிக சிறந்த ஃபெர்பார்மன்ஸ் மற்றும் ஸ்டைலான கார் மாடலாகும். இந்த கார் இந்தியாவில் ரூ. 4.99 லட்சம் தொடங்கி ரூ. 6.95 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இக்காரை Tata நிறுவனம் தனது இம்பேக்ட் 2.0 டிசைன் தாத்பரியத்தைப் பயன்படுத்தி உருவாக்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்துடன், இது ஓர் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் திறன் கொண்ட காராகவும் விற்பனைக்குக் கிடைக்கிறது.

ஸ்டூடன்ட்ஸ் வாழ்க்கையை எஞ்ஜாய் பண்ண ஏற்ற கார்கள்... மொத்தம் 10 வகையான கார் மாடல்கள் நம்ம நாட்டுல இருக்கு!

Hyundai Grand i10 Nios

Hyundai நிறுவனத்தின் மிக சிறந்த கார் தயாரிப்புகளில் Grand i10 Nios-ம் ஒன்று. இந்த கார் இந்தியாவில் ரூ. 5.23 லட்சம் தொடங்கி ரூ. 8.45 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த கார் ஒரு லிட்டர் டீசலுக்கு 26.2 கிமீ வரை மைலேஜ் வழங்கும். இந்த காரை சிஎன்ஜி தேர்விலும் விற்பனைக்கு வழங்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஸ்டூடன்ட்ஸ் வாழ்க்கையை எஞ்ஜாய் பண்ண ஏற்ற கார்கள்... மொத்தம் 10 வகையான கார் மாடல்கள் நம்ம நாட்டுல இருக்கு!

Maruti Suzuki Baleno

Maruti Suzuki Baleno ஓர் பிரீமியம் தர கார் மாடலாகும். இந்த கார் மாடல் இந்தியாவில் ரூ. 5.98 லட்சம் தொடங்கி ரூ. 9.30 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த கார் அதிகபட்சமாக ஒரு லிட்டருக்கு 23.87 கிமீ மைலேஜ் தரும். இது மிக சிறந்த பிரீமியம் கார் மட்டுமல்ல சிறந்த ஃபெர்பார்மன்ஸ் மற்றும் மாடர்ன் காராக நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. எனவேதான் இது மாணவர்களின் மனம் கவர்ந்த காராகவும் இது விற்பனைக்குக் கிடைக்கின்றது.

ஸ்டூடன்ட்ஸ் வாழ்க்கையை எஞ்ஜாய் பண்ண ஏற்ற கார்கள்... மொத்தம் 10 வகையான கார் மாடல்கள் நம்ம நாட்டுல இருக்கு!

Volkswagen Polo

ஜெர்மன் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் Volkswagen நிறுவனத்தின் மிக சிறந்த தயாரிப்புகளில் Polo-வும் ஒன்று. இந்த கார் இந்தியாவில் ரூ. 6.16 லட்சம் தொடங்கி ரூ. 9.99 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த காரிலும் பிரீமியம் தர வசதிகள் என்பதால் மாணவர்கள் மற்றும் தொழில்முனைவோர் மத்தியில் மிக சிறந்த காராக Volkswagen Polo இருக்கின்றது.

ஸ்டூடன்ட்ஸ் வாழ்க்கையை எஞ்ஜாய் பண்ண ஏற்ற கார்கள்... மொத்தம் 10 வகையான கார் மாடல்கள் நம்ம நாட்டுல இருக்கு!

Honda Amaze

Honda Amaze இது ஓர் செடான் ரக காராகும். குறைந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் செடான் ரக கார்களில் இதுவும் ஒன்று. இந்த கார் இந்தியாவில் ரூ. 6.22 லட்சம் தொடங்கி ரூ. 9.99 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், க்ரூஸ் கன்ட்ரோல், தொடுதிரி இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஹோண்டா கன்னெக்ட் மற்றும் இன்னும் பல அம்சங்களுடன் Amaze விற்பனைக்குக் கிடைக்கிறது.

ஸ்டூடன்ட்ஸ் வாழ்க்கையை எஞ்ஜாய் பண்ண ஏற்ற கார்கள்... மொத்தம் 10 வகையான கார் மாடல்கள் நம்ம நாட்டுல இருக்கு!

Hyundai Aura

Hyundai Aura இதுவும் இது ஓர் மிக சிறந்த செடான் ரக காராக இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த கார் இந்தியாவில் ரூ. 5.97 லட்சம் தொடங்கி ரூ. 9.35 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த காரிலும் எக்கசக்க சிறப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன. அந்தவகையில், 8 இன்சிலான தொடு திரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் இந்த காரில் வழங்கப்படுகின்றன. மேலும், Hyundai நிறுவனம் Aura காரை சிஎன்ஜி தேர்விலும் விற்பனைக்கு வழங்குவது குறிப்பிடத்தகுந்தது.

ஸ்டூடன்ட்ஸ் வாழ்க்கையை எஞ்ஜாய் பண்ண ஏற்ற கார்கள்... மொத்தம் 10 வகையான கார் மாடல்கள் நம்ம நாட்டுல இருக்கு!

Tata Nexon

Tata Nexon இந்தியாவின் மிக சிறந்த மற்றும் பாதுகாப்பான கார் மாடலாக இருக்கின்றது. இது பாதுகாப்பு குறித்து மேற்கொள்ளப்பட்ட மோதல் ஆய்வில் ஐந்திற்கு ஐந்து நட்சத்திரைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் இந்தியாவில் ரூ. 7.19 லட்சம் தொடங்கி ரூ. 12.95 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது. மிக அதிக பாதுகாப்பு வசதியை குறைந்த விலையிலேயே விற்பனைக்குக் கிடைப்பதனால் அனைவருக்கும் காராக இது விளங்குகின்றது. அதேசமயம், மாணவர்களுக்கு மிக சிறந்த மற்றம் அடக்கமான காராகவும் இது இருக்கிறது.

ஸ்டூடன்ட்ஸ் வாழ்க்கையை எஞ்ஜாய் பண்ண ஏற்ற கார்கள்... மொத்தம் 10 வகையான கார் மாடல்கள் நம்ம நாட்டுல இருக்கு!

Hyundai Venue

நாட்டின் விலை காராக விற்பனைக்கு வந்து இந்தியர்களின் மனம் கவர்ந்த வாகனமாக மாறிய கார் மாடல்களில் Hyundai Venue-வும் ஒன்று. இந்த கார் தற்போது இந்தியாவில் ரூ. 6.92 தொடங்கி ரூ. 11.76 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் உருவம் மற்றும் அதிகப்படியான எஞ்ஜின் தேர்வு மாணவர்கள் மட்டுமின்றி இளம் தொழில்முனைவோருக்கு ஏற்ற காராக இது இருக்கின்றது.

ஸ்டூடன்ட்ஸ் வாழ்க்கையை எஞ்ஜாய் பண்ண ஏற்ற கார்கள்... மொத்தம் 10 வகையான கார் மாடல்கள் நம்ம நாட்டுல இருக்கு!

Maruti Suzuki Ciaz

Maruti Suzuki Ciaz அதிக பிரீமியம் வசதிக் கொண்ட செடான் ரக காராக இது இருக்கின்றது. மிக சிறந்த பயண அனுபவத்தை எதிர்பார்க்கும் இளைஞர்களுக்கு ஏற்ற வாகனமே இது. இந்த கார் தற்போது இந்தியாவில் ரூ. 8.52 லட்சம் தொடங்கி ரூ. 11.50 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Most Read Articles

English summary
Here is the list of top ten best cars for students and young professionals
Story first published: Wednesday, August 25, 2021, 6:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X