கூகுளில் அதிகம் தேடப்பட்ட இ-கார்கள்.. 10 கார்களை அதிகளவில் இந்தியர்கள் தேடி இருக்காங்க! இதோ அவற்றின் பட்டியல்!

2021ம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட மின்சார கார்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. எந்தெந்த கார்கள் இந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கின்றன என்பது பற்றிய முக்கிய விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

கூகுளில் அதிகம் தேடப்பட்ட மின்சார கார்கள்... 10 இ-காரை அதிகளவில் இந்தியர்கள் தேடி இருக்காங்க! இதோ அவற்றின் பட்டியல்!

நடப்பு 2021ம் ஆண்டு மிக விரைவில் முடிவடைய இருக்கின்றது. இன்னும் ஒரு சில தினங்களே இதற்கு இருக்கின்றன. இந்த நிலையில் நடப்பாண்டில் அரங்கேறிய சுவாரஷ்ய நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் வெளி வந்த வண்ணம் இருக்கின்றன. அந்தவகையில், கூகுள் தேடு பொறியில் இந்தியர்கள் அதிகம் தேடிய 10 மின்சார கார்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

கூகுளில் அதிகம் தேடப்பட்ட மின்சார கார்கள்... 10 இ-காரை அதிகளவில் இந்தியர்கள் தேடி இருக்காங்க! இதோ அவற்றின் பட்டியல்!

இதுகுறித்த தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். பத்து மின்சார கார்களில் எந்த காரை அதிகம் இந்தியர்கள் தேடி இருக்கின்றனர். அவற்றின் சிறப்பு வசதிகள் என்ன என்பது போன்ற பல்வேறு முக்கிய தகவல்களையும் இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

கூகுளில் அதிகம் தேடப்பட்ட மின்சார கார்கள்... 10 இ-காரை அதிகளவில் இந்தியர்கள் தேடி இருக்காங்க! இதோ அவற்றின் பட்டியல்!

டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV)

டாடா நிறுவனத்தின் இந்த காரை கூகுளில் 1.35 லட்சம் முறை இந்தியர்கள் தேடியிருக்கின்றனர். இதன் விளைவாக இக்கார் 2021ம் ஆண்டின் கூகுளில் அதிகம் தேடப்பட்ட மின்சார கார்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது. இந்த கார் இந்தியாவில் ரூ. 14 லட்சத்து 24 ஆயிரம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். நெக்ஸான் இவி மின்சார காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 312 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த காரில் ஐபி67 சான்று பெற்ற பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

கூகுளில் அதிகம் தேடப்பட்ட மின்சார கார்கள்... 10 இ-காரை அதிகளவில் இந்தியர்கள் தேடி இருக்காங்க! இதோ அவற்றின் பட்டியல்!

டாடா டிகோர் இவி (Tata Tigor EV)

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை டாடா டிகோர் இவி மின்சார கார் பிடித்திருக்கின்றது. இக்காரை 74 ஆயிரம் முறை இந்தியர்கள் கூகுளில் தேடியிருக்கின்றனர். டிகோர் இவி மின்சார காரே இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் வாகனம் ஆகும். இந்த காரில் 26 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 306 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த மின்சார கார் இந்தியாவில் ரூ. 11 லட்சத்து 99 ஆயிரம் என்ற விலையில் விற்கப்பட்டு வருகின்றது.

கூகுளில் அதிகம் தேடப்பட்ட மின்சார கார்கள்... 10 இ-காரை அதிகளவில் இந்தியர்கள் தேடி இருக்காங்க! இதோ அவற்றின் பட்டியல்!

எம்ஜி இசட்எஸ் இவி (MG ZS EV)

எம்ஜி இசட்எஸ் இவி வாகனத்தை ஒட்டுமொத்தமாக 60,500 முறை இந்தியர்கள் கூகுளில் தேடி இருக்கின்றனர். இதன் விளைவாக இப்பட்டியில் எம்ஜி இசட்எஸ் இவி மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கின்றது. இக்கார் இந்தியாவில் ரூ. 30 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இதில் 44.5 kWh உயர் தொழில்நுட்பம் கொண்ட பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 419 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இக்காரில் வெவ்வேறு விதமான ரைடிங் மோட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

கூகுளில் அதிகம் தேடப்பட்ட மின்சார கார்கள்... 10 இ-காரை அதிகளவில் இந்தியர்கள் தேடி இருக்காங்க! இதோ அவற்றின் பட்டியல்!

ஆடி இ-ட்ரான் (Audi e-tron)

இந்தியாவின் விலை உயர்ந்த மின்சார கார்களில் இதுவும் ஒன்று. இந்த காரை இந்தியாவில் கூகுளின் வாயிலாக 27,100 முறை தேடி இருக்கின்றனர். ஆடி இ-ட்ரான் மின்சார கார் மூன்று விதமான உடல் ஸ்டைலில் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இ-ட்ரான் ரூ. 1.01 கோடி என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.

கூகுளில் அதிகம் தேடப்பட்ட மின்சார கார்கள்... 10 இ-காரை அதிகளவில் இந்தியர்கள் தேடி இருக்காங்க! இதோ அவற்றின் பட்டியல்!

ஜாகுவார் ஐ-பேஸ் (Jaguar I-Pace)

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மற்றுமொரு விலை உயர்ந்த மின்சார காராக ஜாகுவார் ஐ-பேஸ் இருக்கின்றது. இந்த கார் 24 ஆயிரத்துக்கும் அதிகமான முறை இந்தியர்கள் கூகுளில் தேடி இருக்கின்றனர். இக்காரின் மற்றுமொரு சிறப்பு என்ன என்றால் இது வேர்ல்டு கார் ஆஃப் தி இயர் எனும் விருதைப் பெற்றிருப்பதாகவும். 90 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கே இக்காரில் பொருத்தப்பட்டிருக்கின்றது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 470 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

கூகுளில் அதிகம் தேடப்பட்ட மின்சார கார்கள்... 10 இ-காரை அதிகளவில் இந்தியர்கள் தேடி இருக்காங்க! இதோ அவற்றின் பட்டியல்!

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் (Hyundai kona Electric)

ஹூண்டாய் கோனா இந்தியாவில் விற்பனைக்கு வந்த முதல் மின்சார எஸ்யூவி ரக கார் மாடலாகும். இந்த காரை 22,200 முறை இந்தியர்கள் கூகுளில் தேடியிருக்கின்றனர். இக்காரில் 100 கிலோவாட் மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த மின் மோட்டார் 131 பிஎச்பி மற்றும் 395 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது. மேலும், இந்த எலெக்ட்ரிக் கார் ஒரு முழுமையான சார்ஜில் 452 கிமீ வரை ரேஞ்ஜ் வழங்கும். ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் இந்தியாவில் ரூ. 23.79 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.

கூகுளில் அதிகம் தேடப்பட்ட மின்சார கார்கள்... 10 இ-காரை அதிகளவில் இந்தியர்கள் தேடி இருக்காங்க! இதோ அவற்றின் பட்டியல்!

மஹிந்திரா இ-வெரிட்டோ (Mahindra e-Verito)

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மின்சார கார்களில் இ-வெரிட்டோவும் ஒன்று. இந்த கார் வணிக பிரிவை மையமாகக் கொண்டு விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இக்காரை 8,100 முறை இந்தியர்கள் கூகுளில் தேடி இருக்கின்றனர். ரூ. 10.15 லட்சம் என்ற தொடக்க விலையில் இருந்து இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

கூகுளில் அதிகம் தேடப்பட்ட மின்சார கார்கள்... 10 இ-காரை அதிகளவில் இந்தியர்கள் தேடி இருக்காங்க! இதோ அவற்றின் பட்டியல்!

மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி (Mercedes-Benz EQC)

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்திய முதல் மின்சார கார் மாடல் இதுவாகும். 5,400 முறை இக்கார் கூகுகளில் தேடப்பட்டிருக்கின்றது. இந்த சொகுசு எலெக்ட்ரிக் கார் அனைத்து வீல் இயக்கம், இரட்டை மின் மோட்டார் உள்ளிட்ட பன்முக சிறப்பு வசதிகளுடன் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இந்த காரில் இடம் பெற்றிருக்கும் 80kW லித்தியம் அயன் பேட்டரி ஒற்றை முழுமையான சார்ஜில் 450 கிமீ தூரம் முதல் 471 கிமீ தூரம் வரை ரேஞ்ஜை வழங்கும். ரூ. 1.06 கோடிக்கும் அதிகமான விலையில் இக்கார் இந்தியாவில் விற்கப்பட்டு வருகின்றது.

கூகுளில் அதிகம் தேடப்பட்ட மின்சார கார்கள்... 10 இ-காரை அதிகளவில் இந்தியர்கள் தேடி இருக்காங்க! இதோ அவற்றின் பட்டியல்!

மஹிந்திரா இ20 ப்ளஸ் (Mahindra e20 Plus)

இந்தியர்களால் இக்கார் கூகுளில் 2,400 முறை தேடப்பட்டிருக்கின்றது. துரதிரஷ்டவசமாக இந்த கார் தற்போது இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கவில்லை. அதேநேரத்தில் பயன்படுத்திய கார்கள் சந்தையில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது ஓர் சிறிய தோற்றம் கொண்ட நகர்புற பயணங்களுக்கு ஏற்ற மின்சார காராகும்.

கூகுளில் அதிகம் தேடப்பட்ட மின்சார கார்கள்... 10 இ-காரை அதிகளவில் இந்தியர்கள் தேடி இருக்காங்க! இதோ அவற்றின் பட்டியல்!

மஹிந்திரா ரெவா (Mahindra Reva)

இந்த காரும் தற்போது இந்தியாவில் விற்பனையில் இல்லை. இந்த காரின் விற்பனையை மஹிந்திரா நிறுத்தி பல மாதங்கள் ஆகின்றன. ஆனால், இந்த காரையும் இந்தியர்கள் 90 முறை வரை தேடி இருக்கின்றனர். இந்தியாவின் முதல் மின்சார கார் என்ற பெருமைக்குரிய எலெக்ட்ரிக் வாகனம் இதுவாகும்.

Most Read Articles

English summary
Here is the list top ten most searched e cars on google in india 2021
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X