2022ம் ஆண்டை அதகளப்படுத்த தயாராகி வரும் 7எஸ்யூவி கார்கள்! மஹிந்திரா ஸ்கார்பியோவும் இந்த பட்டியல்ல இருக்குங்க!

2022ம் ஆண்டில் இந்திய எஸ்யூவி கார் பிரிவை அதகளப்படுத்தும் வகையில் விற்பனைக்கு வர இருக்கும் 7 எஸ்யூவி கார்கள் பற்றிய தகவலை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அவை குறித்த முக்கிய விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

2022ம் ஆண்டை அதகளப்படுத்த தயாராகி வரும் 7 எஸ்யூவி கார்கள்... மஹிந்திரா ஸ்கார்பியோவும் இந்த பட்டியல்ல இருக்குங்க!

இன்றுடன் இன்னும் 7 நாட்களே இருக்கின்றன நடப்பு 2021ஆம் ஆண்டு முடிவடைய. நடப்பாண்டை போலவே 2022ம் ஆண்டிலும் பல புதுமுக கார்கள் விற்பனைக்கு அறிமுகமாக இருக்கின்றன. நடப்பாண்டில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் பல புதிய கார்கள் அறிமுகமாகின. டாடா சஃபாரி, பஞ்ச், புதிய தலைமுறை மாருதி சுசுகி செலிரியோ, ஹூண்டாய் அல்கஸார் உள்ளிட்ட கார்கள் நடப்பாண்டிலேயே அறிமுகமாகின.

2022ம் ஆண்டை அதகளப்படுத்த தயாராகி வரும் 7 எஸ்யூவி கார்கள்... மஹிந்திரா ஸ்கார்பியோவும் இந்த பட்டியல்ல இருக்குங்க!

இதேபோல், ஜாகுவார் ஐ-பேஸ், ஆடி இ-ட்ரான் ஜிடி மற்றும் பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் ஆகிய மின்சார கார்களும் 2021ம் ஆண்டிலேயே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றைப் போலவே வரும் வருடத்திலும் என்ன நடந்தாலும் அறிமுகமாகியே தீருவோம் என்ற கருத்தில் சில கார்கள் நாட்டில் விற்பனைக்கு வர தயாராக இருக்கின்றன.

2022ம் ஆண்டை அதகளப்படுத்த தயாராகி வரும் 7 எஸ்யூவி கார்கள்... மஹிந்திரா ஸ்கார்பியோவும் இந்த பட்டியல்ல இருக்குங்க!

இவற்றில் சில கார் மாடல்கள் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் வாகனங்களாக இருக்கின்றன. அந்தவகையில், வரும் 2022ம் ஆண்டை அதகளப்படுத்த தயாராகி வரும் ஏழு எஸ்யூவி கார்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

2022ம் ஆண்டை அதகளப்படுத்த தயாராகி வரும் 7 எஸ்யூவி கார்கள்... மஹிந்திரா ஸ்கார்பியோவும் இந்த பட்டியல்ல இருக்குங்க!

மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio)

மஹிந்திரா நிறுவனம் அதன் புதிய தலைமுறை ஸ்கார்பியோ காரை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த புதிய தலைமுறை ஸ்கார்பியோ வரும் 2022ம் ஆண்டின் முதல் அரையாண்டிற்குள் அறிமுகமாகிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கார் சீக்கிரத்திலேயே விற்பனைக்கு வர இருக்கின்ற காரணத்தினால், நிறுவனம் இதனை பல பரீட்சைக்கு உட்படுத்தி வருகின்றது.

2022ம் ஆண்டை அதகளப்படுத்த தயாராகி வரும் 7 எஸ்யூவி கார்கள்... மஹிந்திரா ஸ்கார்பியோவும் இந்த பட்டியல்ல இருக்குங்க!

அவ்வாறு புதிய தலைமுறை ஸ்கார்பியோ சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்கள் தற்போதும் இணையத்தில் இருக்கின்றன. இந்த காரை மஹிந்திரா நிறுவனம் புதிய லேடர்-ஆன்-ஃப்ரேம் பிளாட்பாரத்தை தழுவி உருவாக்கி வருகின்றது. மேலும், தார் காரின் சிறப்பம்சங்களையும் இக்காரில் நிறுவனம் வழங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரு மோட்டார் தேர்வுகள் இக்காரில் வழங்கப்பட இருக்கின்றன.

2022ம் ஆண்டை அதகளப்படுத்த தயாராகி வரும் 7 எஸ்யூவி கார்கள்... மஹிந்திரா ஸ்கார்பியோவும் இந்த பட்டியல்ல இருக்குங்க!

மாருதி சுசுகி விட்டாரா ப்ரெஸ்ஸா (2022 Maruti Suzuki Vitara Brezza)

அடுத்த ஆண்டு விற்பனைக்கு வர இருக்கும் கார் மாடல்களில் புதிய தலைமுறை மாருதி சுசுகி விட்டாரா ப்ரெஸ்ஸாவும் ஒன்று. இந்த வாகனம் 2022ம் ஆண்டின் எந்த மாதத்தில் வேண்டுமானாலும் விற்பனைக்கு வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய தலைமுறை விட்டாரா ப்ரெஸ்ஸா பன்முக தோற்ற மாற்றங்களுடன் விற்பனைக்கு வர இருக்கின்றது.

2022ம் ஆண்டை அதகளப்படுத்த தயாராகி வரும் 7 எஸ்யூவி கார்கள்... மஹிந்திரா ஸ்கார்பியோவும் இந்த பட்டியல்ல இருக்குங்க!

இதுமட்டுமின்றி, கூடுதல் பிரீமியம் அம்சங்கள், அதிக சொகுசு வசதிகள் மற்றும் இன்னும் பலவற்றுடன் அது விற்பனைக்கு வர இருக்கின்றது. ஆகையால், இந்திய வாகன சந்தை இந்த காரின் வருகையை பெரிதும் எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கின்றது. தற்போது விற்பனையில் இருக்கும் விட்டாரா ப்ரெஸ்ஸாவிற்கு நாட்டில் நல்ல வரவேற்பு உண்டு. இதனை இரட்டிப்பாக்கும் வகையில் புதிய தலைமுறையை மிக விரைவில் மாருதி விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

2022ம் ஆண்டை அதகளப்படுத்த தயாராகி வரும் 7 எஸ்யூவி கார்கள்... மஹிந்திரா ஸ்கார்பியோவும் இந்த பட்டியல்ல இருக்குங்க!

மாருதி சுசுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny)

மாருதி சுசுகி நிறுவனத்தின் மற்றுமொரு பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் கார் மாடலாக ஜிம்னி இருக்கின்றது. இந்த காரின் வருகை 2022ம் ஆண்டில் அமைய இருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் வகையில் நிறுவனம் இக்காரை சோதனை ஓட்டத்திற்கு உட்படுத்தி வருகின்றது. மாருதி சுசுகி நிறுவனம் ஏற்கனவே இந்த காரை ஏற்றுமதி செய்ய தொடங்கிவிட்டது. ஆனால், இந்திய அறிமுகத்தில் வெகு நீண்ட காலமாகவே இழுபறி நீடித்து வருகின்றது.

2022ம் ஆண்டை அதகளப்படுத்த தயாராகி வரும் 7 எஸ்யூவி கார்கள்... மஹிந்திரா ஸ்கார்பியோவும் இந்த பட்டியல்ல இருக்குங்க!

இது அடுத்த ஆண்டும் நிலவாது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டின் இரண்டாம் பாதியில் இதன் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகின்றது. வெளிநாட்டு சந்தையில், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆகிய வசதிகளில் ஜிம்னி விற்பனைக்குக் கிடைக்கின்றது. இத்துடன், ஆல்கிரிப் 4X4 சிஸ்டமும் இக்காரில் வழங்கப்படுகின்றது.

2022ம் ஆண்டை அதகளப்படுத்த தயாராகி வரும் 7 எஸ்யூவி கார்கள்... மஹிந்திரா ஸ்கார்பியோவும் இந்த பட்டியல்ல இருக்குங்க!

ஸ்கோடோ கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் (Skoda Kodiaq Facelift)

ஃபோக்ஸ்வேகன் குழுமம் மிக விரைவில் ஸ்கோடா கோடியாக் காரை மீண்டும் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனாக இந்தியாவில் இது விற்பனைக்கு வர இருக்கின்றது. ஸ்கோடா நிறுவனம் பிஎஸ்6 மாசு உமிழ்வு காரணமாக இக்காரை 2020இல் வெளியேற்றியது.

2022ம் ஆண்டை அதகளப்படுத்த தயாராகி வரும் 7 எஸ்யூவி கார்கள்... மஹிந்திரா ஸ்கார்பியோவும் இந்த பட்டியல்ல இருக்குங்க!

இப்புதுப்பிக்கப்பட்ட வெர்ஷன் பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே விற்பனைக்கு வர இருக்கின்றது. 2.0 லிட்டர் டிஎஸ்ஐ எஞ்ஜின் இம்முறை எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மோட்டாரில் டிஎஸ்ஜி தானியங்கி கியர்பாக்ஸ் எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இக்காரை ஸ்கோடா நிறுவனம் சிகேடி வாயிலாக விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதன் வருகை வரும் ஜனவரி மாதம் அமைய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2022ம் ஆண்டை அதகளப்படுத்த தயாராகி வரும் 7 எஸ்யூவி கார்கள்... மஹிந்திரா ஸ்கார்பியோவும் இந்த பட்டியல்ல இருக்குங்க!

ஆடி க்யூ7 ஃபேஸ்லிஃப்ட் (Audi Q7 Facelift)

சொகுசு வாகன உற்பத்தி நிறுவனமான ஆடி பிஎஸ்6 மாசு உமிழ்வு நடைமுறைக்கு வந்த காரணத்தினால் அதன் பிரபல சொகுசு கார் மாடலான க்யூ7-ஐ விற்பனையில் இருந்து வெளியேற்றியது. இந்த காரையே தற்போது புதிய பிஎஸ்6 தரத்திற்கு ஏற்ப நிறுவனம் தயாரித்திருக்கின்றது. இதனையே மிக விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.

2022ம் ஆண்டை அதகளப்படுத்த தயாராகி வரும் 7 எஸ்யூவி கார்கள்... மஹிந்திரா ஸ்கார்பியோவும் இந்த பட்டியல்ல இருக்குங்க!

இந்த காரும் பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இதன் அறிமுகமும் ஜனவரி மாதமே எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், ஆடி நிறுவனத்தின் 2022ம் ஆண்டிற்கான முதல் அறிமுகமாக இந்த கார் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இக்காரை சிகேடி வாயிலாக விற்பனைக்குக் கொண்டு வர ஆடி திட்டமிட்டிருக்கின்றது.

2022ம் ஆண்டை அதகளப்படுத்த தயாராகி வரும் 7 எஸ்யூவி கார்கள்... மஹிந்திரா ஸ்கார்பியோவும் இந்த பட்டியல்ல இருக்குங்க!

ஜீப் காம்பஸ் - 3 வரிசை இருக்கை அமைப்பு கொண்ட எஸ்யூவி (Jeep Compass-Based 3-Row SUV)

ஜீப் நிறுவனம் அதன் காம்பஸ் கார் மாடலை தழுவி 3 வரிசைகள் இருக்கைகள் அமைப்பு கொண்ட ஓர் எஸ்யூவி காரை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. பிரத்யேகமாக பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற வாகனமாக இதனை நிறுவனம் உருவாக்கி வருகிறது. இந்த கார் மாடல் வரும் 2022ம் ஆண்டிலேயே அறிமுகமாக இருக்கின்றது. இதன் வருகை டாடா சஃபாரி மற்றும் ஹூண்டாய் அல்கஸார் ஆகிய எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக அமைய இருக்கின்றது.

2022ம் ஆண்டை அதகளப்படுத்த தயாராகி வரும் 7 எஸ்யூவி கார்கள்... மஹிந்திரா ஸ்கார்பியோவும் இந்த பட்டியல்ல இருக்குங்க!

இந்த காரின் முன்மாதிரி மாடல்கள் ஏற்கனவே சாலை சோதனையோட்டத்தின்போது காட்சியளித்திருக்கின்றன. இதன் வருகை 2022ம் ஆண்டு இறுதிக்குள்ளேயே அரங்கேறிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில், ஆண்டின் முடிவிற்கு பின்னரும் இது சந்தையை வந்தடையலாம் என்றும் கூறப்படுகின்றது. காம்பஸ் காரை தழுவி உருவாக்கப்பட்டாலும் இது புதிய பெயரிலேயே விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில், மெரிடியன் (Meridian) எனும் பெயரில் இக்கார் எதிர்பார்க்கப்படுகின்றது.

2022ம் ஆண்டை அதகளப்படுத்த தயாராகி வரும் 7 எஸ்யூவி கார்கள்... மஹிந்திரா ஸ்கார்பியோவும் இந்த பட்டியல்ல இருக்குங்க!

டொயோட்டா ஹைலக்ஸ் (Toyota Hilux)

டொயோட்டா நிறுவனம் ஹைலக்ஸ் பிக்-அப் ட்ரக்கை அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இக்கார் இந்திய சாலைகளில் பலபரீட்சையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது. இதன் அறிமுகம் புத்தாண்டை அலங்கரிக்கும் வகையில் ஜனவரி மாதமே அமைய இருக்கின்றது.

குறிப்பு: கார்களின் படங்கள் சில உதாரணத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கின்றன.

Most Read Articles

English summary
Here is the list upcoming 7 suv s launching in india in 2022
Story first published: Saturday, December 25, 2021, 17:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X