உலகின் மிக அதிக வேக திறனுடைய எலெக்ட்ரிக் கார்கள்... இவ்ளோ வேகத்தில் போகும் மின்சார கார்கள்கூட இருக்கா?

உலகின் அதிகவேக திறன் கொண்ட எலெக்ட்ரிக் கார்களின் பட்டியலை இப்பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். என்னென்ன கார்கள் எவ்வளவு வேகத்தில் செல்லும் என்பது பற்றிய முக்கிய விபரத்தை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

உலக மின் வாகன தின ஸ்பெஷல்: உலகின் மிக அதிக வேக திறனுடைய எலெக்ட்ரிக் கார்கள்... இவ்ளோ வேகத்தில் போகும் மின்சார கார்கள்கூட இருக்கா?

மின் வாகனங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், மக்கள் மத்தியில் மின் வாகனங்களின் பயன்பாட்டைக் கொண்டு சேர்க்கும் வகையிலும் இன்று (செப்டம்பர் 9) உலக மின் வாகன தினம் கொண்டாடப்படுகின்றது. இந்த தினத்தை முன்னிட்டு உலகின் அதி-திறன் வெளிப்பாடுக் கொண்ட எலெக்ட்ரிக் கார்களின் பட்டியலை இப்பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம்.

உலக மின் வாகன தின ஸ்பெஷல்: உலகின் மிக அதிக வேக திறனுடைய எலெக்ட்ரிக் கார்கள்... இவ்ளோ வேகத்தில் போகும் மின்சார கார்கள்கூட இருக்கா?

என்ன சொல்றீங்க..! கதை விடாதீங்க..! என கூறுமளவிற்கு அதிக திறன் வெளிப்பாடு கொண்ட எலெக்ட்ரிக் கார்களின் பட்டியலையே இப்பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். ஒட்டுமொத்தமாக ஐந்து அதி-வேக எலெக்ட்ரிக் கார்கள் பற்றிய தகவலை இப்பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அவைகுறித்த தகவலைப் பார்க்கலாம்.

உலக மின் வாகன தின ஸ்பெஷல்: உலகின் மிக அதிக வேக திறனுடைய எலெக்ட்ரிக் கார்கள்... இவ்ளோ வேகத்தில் போகும் மின்சார கார்கள்கூட இருக்கா?

ஆடி ஆர்எஸ் இ-ட்ரான் ஜிடி குவாட்ரோ (Audi RS E-Tron GT Quattro)

சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான ஆடி, எரிபொருளால் இயங்கக் கூடியதைப் போலவே மின்சாரத்தால் இயங்கக் கூடிய வாகனங்களையும் தயாரித்து வருகின்றது. அந்தவகையில் நிறுவனம் உற்பத்தி செய்யும் மிக அதிக சொகுசு வசதி மற்றும் சூப்பர் பவர் கொண்ட எலெக்ட்ரிக் காராக ஆடி ஆர்எஸ் இ-ட்ரான் ஜிடி குவாட்ரோ இருக்கின்றது.

உலக மின் வாகன தின ஸ்பெஷல்: உலகின் மிக அதிக வேக திறனுடைய எலெக்ட்ரிக் கார்கள்... இவ்ளோ வேகத்தில் போகும் மின்சார கார்கள்கூட இருக்கா?

இந்த காரில் ட்வின் மோட்டார் சிஸ்டம் மற்றும் ட்ரிக் டூ-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வசதி பயன்படுத்தப்படுத்தப்பட்டிருக்கின்றது. இவை அதிகபட்சமாக 637 பிஎச்பி வரை வெளியேற்றும். மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் வெறும் 3.3 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தில் பயணிக்கும் திறனை மின்மோட்டார்கள் வெளியேற்றுகின்றது.

உலக மின் வாகன தின ஸ்பெஷல்: உலகின் மிக அதிக வேக திறனுடைய எலெக்ட்ரிக் கார்கள்... இவ்ளோ வேகத்தில் போகும் மின்சார கார்கள்கூட இருக்கா?

Porsche Taycan Turbo S (போர்ஷே டேகேன் டர்போ எஸ்)

டேகேன் டர்போ எஸ் எலெக்ட்ரிக் காரானது போர்ஷே நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காராகும். இந்த கார் டெஸ்லா மாடல் எஸ் காருடன் போட்டியிடும் வகையில் விற்பனையில் இருக்கின்றது. இதில் 93.4kWh திறன் கொண்ட பேட்டரி பைக் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. டேகேன் டர்போ எஸ் மற்றும் டேகேன் டர்போ ஆகிய இரு விதமான தேர்வுகளில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கிறது.

உலக மின் வாகன தின ஸ்பெஷல்: உலகின் மிக அதிக வேக திறனுடைய எலெக்ட்ரிக் கார்கள்... இவ்ளோ வேகத்தில் போகும் மின்சார கார்கள்கூட இருக்கா?

இதில் டர்போ எஸ் வெர்ஷனே அதிக வேகத்தை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கின்றது. இது அதிகபட்சமாக 761 எச்பி திறனை வெளியேற்றும். பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்ட வெறும் 2.8 செகண்டுகளையே இக்கார் எடுத்துக் கொள்கின்றது.

உலக மின் வாகன தின ஸ்பெஷல்: உலகின் மிக அதிக வேக திறனுடைய எலெக்ட்ரிக் கார்கள்... இவ்ளோ வேகத்தில் போகும் மின்சார கார்கள்கூட இருக்கா?

Tesla Model X Plaid (டெஸ்லா மாடல் எக்ஸ் பிளைட்)

டெஸ்லா நிறுவனம் மின் வாகன தயாரிப்பை மட்டுமே மையமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. இந்நிறுவனத்தின் எந்தவொரு தயாரிப்பும் இதுவரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை. அதேவேலையில், நாட்டில் தனது தயாரிப்புகளை விற்பனைக்குக் களமிறக்கும் முயற்சியில் நிறுவனம் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தகுந்தது.

உலக மின் வாகன தின ஸ்பெஷல்: உலகின் மிக அதிக வேக திறனுடைய எலெக்ட்ரிக் கார்கள்... இவ்ளோ வேகத்தில் போகும் மின்சார கார்கள்கூட இருக்கா?

இந்நிறுவனத்தின் மிக முக்கியமான எலெக்ட்ரிக் கார் மாடல்களில் ஒன்றாக மாடல் எக்ஸ் பிளைட் இருக்கின்றது. இக்காரில் 1006 பிஎச்பி திறனை வெளியேற்றக் கூடிய மூன்று மின்மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இக்கார் வெறும் 2.5 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டக் கூடியது. ஆகையால் எலெக்ட்ரிக் வாகன உலகின் மிக அதிக திறனை வெளியேற்றக் கூடிய வாகனமாக மாட்ல் எக்ஸ் பிளைட் இருக்கின்றது.

உலக மின் வாகன தின ஸ்பெஷல்: உலகின் மிக அதிக வேக திறனுடைய எலெக்ட்ரிக் கார்கள்... இவ்ளோ வேகத்தில் போகும் மின்சார கார்கள்கூட இருக்கா?

Tesla Roadster (டெஸ்லா ரோட்ஸ்டர்)

டெஸ்லா ரோட்ஸ்டர் இதுவும் உலகில் விற்பனைக்குக் கிடைக்கும் மிக அதிக திறனை வெளியேற்றக் கூடிய மின்சார கார் மாடலாகும். இந்த காரில் 200kWh பேட்டரி பேக்கை நிறுவனம் பயன்படுத்தியிருக்கின்றது. இது 1000 பிஎச்பி திறனை வெளியேற்றக் கூடிய மின் மோட்டாருக்கு தேவையான மின்சாரத் திறனை வழங்கும்.

உலக மின் வாகன தின ஸ்பெஷல்: உலகின் மிக அதிக வேக திறனுடைய எலெக்ட்ரிக் கார்கள்... இவ்ளோ வேகத்தில் போகும் மின்சார கார்கள்கூட இருக்கா?

இந்த மின் மோட்டார் உச்சபட்சமாக வெறும் 1.99 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டக் கூடியது. ஆகையால், நாம் பார்த்துக் கொண்டிருக்கும் அதிக வேகத்தில் இயங்கக் கூடிய மின்சார கார்களின் பட்டியலில் டெஸ்லா ரோட்ஸ்டர் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கின்றது.

உலக மின் வாகன தின ஸ்பெஷல்: உலகின் மிக அதிக வேக திறனுடைய எலெக்ட்ரிக் கார்கள்... இவ்ளோ வேகத்தில் போகும் மின்சார கார்கள்கூட இருக்கா?

Rimac C-Two (ரைமேக் சி-டூ)

எலெக்ட்ரிக் சூப்பர் கார்களை கைதேர்ந்த நிறுவனமாக ரைமேக் இருக்கின்றது. இந்நிறுவனம் எலெக்ட்ரிக் சூப்பர் தயாரிப்பில் மட்டுமில்லைங்க அதிக திறன் வெளிப்பாடுக் கொண்ட மின் வாகனங்களுக்கான பேட்டரியை தயாரிப்பதிலும் புகழ்பெற்று விளங்குகின்றது. இந்நிறுவனம் மிக சிறந்த மற்றும் அதிக வேக திறன் வெளிப்பாடுக் கொண்ட மாடலாக சி-டூ இருக்கின்றது. இக்காரில் 120kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இக்காரின் நான்கு வீல்களும் இயங்கும் திறன் கொண்டது.

உலக மின் வாகன தின ஸ்பெஷல்: உலகின் மிக அதிக வேக திறனுடைய எலெக்ட்ரிக் கார்கள்... இவ்ளோ வேகத்தில் போகும் மின்சார கார்கள்கூட இருக்கா?

இத்துடன், 1914 பிஎச்பி திறனை வெளியேற்றக் கூடிய கார்பன்-ஃபைபர் பாடியிலான மான்ஸ்டர் ரக மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த மோட்டார் வெறும் 1.85 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தில் இயங்கக் கூடியது. இத்தகைய திறன் வெளிப்பாட்டை இக்கார் கொண்டிருப்பதால் நம்முடைய பட்டியலில் ரைமேக் டி-டூ எலெக்ட்ரிக் கார் முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது.

Most Read Articles

English summary
Here is top 5 world s fastest electric cars list
Story first published: Thursday, September 9, 2021, 20:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X