Tata Tigor தொடங்கி மொத்தம் மூன்று கார்களுக்கு போட்டி... 2021 Honda Amaze காரின் முழு ரிவியூ தகவல்!

2021 Honda Amaze காரை நாங்கள் ரிவியூ டிரைவ் செய்து பார்த்தோம். அப்போது எங்களுக்கு கிடைத்த அனுபவம் மற்றும் முக்கியமான விபரங்களை இப்பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

Tata Tigor தொடங்கி மொத்தம் மூன்று கார்களுக்கு போட்டி... 2021 Honda Amaze காரின் முழு ரிவியூ தகவல்...

இந்தியாவில் காம்பேக்ட் செடான் ரக காரை விரும்புவர்களுக்கு பல்வேறு தேர்வுகள் கிடைக்கின்றன. அதில் மிக முக்கியமான தேர்வாக Honda நிறுவனத்தின் Amaze கார் இருக்கின்றது. இந்த காரை Honda நிறுவனம் முதல் முறையாக 2013 ஆண்டே நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கியது. Maruti Suzuki Dzire, Ford Aspire உள்ளிட்ட செடான் ரக கார் மாடல்களுக்கு போட்டியாக இக்கார் விற்பனையில் இருந்து வருகின்றது.

Tata Tigor தொடங்கி மொத்தம் மூன்று கார்களுக்கு போட்டி... 2021 Honda Amaze காரின் முழு ரிவியூ தகவல்...

தற்போது இந்திய வாகன சந்தையில் சிறிய எஸ்யூவி ரக கார் மற்றும் காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கே நல்ல வரவேற்பு நிலவி வருகின்றன. அதேசமயம், செடான் ரக கார்களுக்கும் கணிசமான வரவேற்பு நமது நாட்டு மக்களிடையே கிடைத்து வருகின்றது. அந்தவகையில், மக்கள் மத்தியில் குறிப்பிட்ட அளவு வரவேற்பைப் பெற்று வரும் கார் மாடலாக Amaze இருக்கின்றது.

Tata Tigor தொடங்கி மொத்தம் மூன்று கார்களுக்கு போட்டி... 2021 Honda Amaze காரின் முழு ரிவியூ தகவல்...

இந்த வரவேற்பை சற்று அதிகரிக்கும் நோக்கில் Honda நிறுவனம் Amaze கார் மாடலின் இரண்டாம் தலைமுறை வெர்ஷனின் புதுப்பிக்கப்பட்ட மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கின்றது. இரண்டாம் தலைமுறை கார் முதன் முதலாக 2018ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.

Tata Tigor தொடங்கி மொத்தம் மூன்று கார்களுக்கு போட்டி... 2021 Honda Amaze காரின் முழு ரிவியூ தகவல்...

இந்த புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனையே நாங்கள் அண்மையில் ரிவியூ டிரைவ் செய்து பார்த்தோம். அப்போது எங்களுக்கு கிடைத்த அனுபவத்தையே மிகவும் விரிவாக இப்பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

Tata Tigor தொடங்கி மொத்தம் மூன்று கார்களுக்கு போட்டி... 2021 Honda Amaze காரின் முழு ரிவியூ தகவல்...

Honda Amaze இன் டிசைன் மற்றும் ஸ்டைல்:

Honda நிறுவனம் இரண்டாம் தலைமுறை Amaze காரில் சில மாற்றங்களைச் செய்திருக்கின்றது. இந்த மாற்றங்கள் மிகப் பெரிய பட்டியலாக இருக்கும் என எண்ணிவிடாதீர்கள். பழைய வெர்ஷனுடன் ஒப்பிடுகையில் கூடுதல் கவர்ச்சியான தோற்றத்தை வழங்கக் கூடிய கணிசமான வேலைகளே இதில் செய்யப்பட்டுள்ளன.

Tata Tigor தொடங்கி மொத்தம் மூன்று கார்களுக்கு போட்டி... 2021 Honda Amaze காரின் முழு ரிவியூ தகவல்...

புதிய மின் விளக்குகளால் கார் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், மறு வடிவமைக்கப்பட்ட எல்இடி புரஜெக்டர் ஹெட்லெம்ப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஹெட்லேம்பிற்குள்ளேயே எல்இடி டிஆர்எல்கள் இடம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு வடிவமைப்பு யுக்தியாக உள்ளது. இது, ஆங்கில எழுத்து 'சி' வடிவிலான டிஆர்எல்கள் ஆகும். இது காரின் முகப்பு பகுதிக்கு கூடுதல் கவர்ச்சியான தோற்றத்தை வழங்கும் வகையில் இருக்கின்றது.

Tata Tigor தொடங்கி மொத்தம் மூன்று கார்களுக்கு போட்டி... 2021 Honda Amaze காரின் முழு ரிவியூ தகவல்...

தொடர்ந்து, முன்னதாக பயன்படுத்தப்பட்டிருந்த 3 ஸ்லேட் க்ரில் நீக்கப்பட்டு தற்போது பெரிய ஒற்றை துண்டிலான க்ரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், குரோம் பூச்சுகள் அகற்றப்படாத நிலையே காணப்படுகின்றது. ஆனால், முன்பு இருந்ததைக் காட்டிலும் சிறியதாக இரு லைன்களும், ஓர் பட்டையான லைனும் இம்முறை பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

Tata Tigor தொடங்கி மொத்தம் மூன்று கார்களுக்கு போட்டி... 2021 Honda Amaze காரின் முழு ரிவியூ தகவல்...

பம்பரின் அடிப்பகுதியில் இரு எல்இடி தர பனி மின் விளக்குகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. Bonnet மற்றும் Bumper ஆகியவை பழைய தோற்றம் மாறாத உருவத்திலேயே காட்சியளிக்கின்றது. அதே நேரான மற்றும் சமமான தோற்றத்தில் அவை காட்சியளிக்கின்றன.

Tata Tigor தொடங்கி மொத்தம் மூன்று கார்களுக்கு போட்டி... 2021 Honda Amaze காரின் முழு ரிவியூ தகவல்...

Honda Amaze இல் தற்போது மிகவும் ஸ்டைலான இரு நிறத்திலான, பத்து ஸ்போக்குகள் கொண்ட 15 இன்ச் அலாய் வீல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. பக்கவாட்டு பகுதியைக் கூடுதல் கவர்ச்சியானதாக காட்டும் நோக்கில் இத்தகைய சிறப்பு வசதிகள் கொண்ட அலாய் வீல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

Tata Tigor தொடங்கி மொத்தம் மூன்று கார்களுக்கு போட்டி... 2021 Honda Amaze காரின் முழு ரிவியூ தகவல்...

தொடர்ந்து, பெரிய மற்றும் திரும்புவதை சமிக்ஞை செய்யும் இன்டிகேட்டர்களுடன் கூடிய பின்பக்கத்தை பார்க்க உதவும் கண்ணாடிகள் இரு பக்கவாட்டு பகுதியிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவற்றை பொத்தான்கள் மூலம் கட்டுப்படுத்த மூடியும். அதாவது, எலெக்ட்ரானிக் வாயிலாக மடக்கி, விரிக்க முடியும். காரின் கதவு கைப் பிடிகளுக்கு தனி சிறப்பளிக்கும் வகையில் குரோம் பூச்சு பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

Tata Tigor தொடங்கி மொத்தம் மூன்று கார்களுக்கு போட்டி... 2021 Honda Amaze காரின் முழு ரிவியூ தகவல்...

முன் பக்கம், பக்கவாட்டு பகுதியில் மேற்கொள்ளப்பட்டதைப் போலவே Honda Amaze இன் பின் பக்கத்திலும் கணிசமான புதுப்பித்தல் வேலைகள் செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில், எல்இடி மின் விளக்குகள் வால் பகுதியில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இங்கும் சி வடிவிலான மின் விளக்குகளே பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்பக்க பம்பரின் அடிப்பகுதியில் குரோம் பூச்சு பயன்படுத்தப்பட்டுள்ளது.

Tata Tigor தொடங்கி மொத்தம் மூன்று கார்களுக்கு போட்டி... 2021 Honda Amaze காரின் முழு ரிவியூ தகவல்...

Honda Amaze இன் உட்பகுதி

காரின் வெளிப்புறத்தைப் போலவே உட்புறமும் பெட்டி போன்ற மற்றும் ஒரு நேர் கோடு போன்ற அமைப்பு தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால், Honda Amaze இன் உட்பகுதிக்குள் நுழையும் போது பிற கார்களில் இருந்து மாறுப்பட்ட உணர்வை வழங்கும். தொடர்ந்து, காரின் உட்பகுதியை நிறுவனம் பழுப்பு மற்றும் கருப்பு நிறத்தால் அலங்கரித்திருக்கின்றது. புதுப்பித்தலின் அடிப்படையில் இந்த நிறம் உட்பகுதிக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

Tata Tigor தொடங்கி மொத்தம் மூன்று கார்களுக்கு போட்டி... 2021 Honda Amaze காரின் முழு ரிவியூ தகவல்...

பழுப்பு நிறமானது காரின் இருக்கை, அடிப்பகுதி, மற்றும் டேஷ்போர்டு உள்ளிட்ட பகுதிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. காரின் மேற் பகுதி மற்றும் மைய கன்சோல் உள்ளிட்ட பகுதிகளில் கருப்பு நிறம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி இன்னும் ஓர் நிறமும் குறிப்பிட்ட சில பாகங்களை ஹைலைட் செய்து காட்டும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Tata Tigor தொடங்கி மொத்தம் மூன்று கார்களுக்கு போட்டி... 2021 Honda Amaze காரின் முழு ரிவியூ தகவல்...

இதற்காக சாடின் சில்வர் நிறமே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டியரிங் வீல், கதவுகள் மற்றும் டேஷ்போர்டு குறிப்பிட்ட சில இடங்களில் இந்நிறம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. மேலும், இதன் டேஷ்போர்டு பகுதியிலேயே ஏசி காற்று வெளி வரும் துளைகள் இடம் பெற்றிருக்கின்றன. இதன் வலது கீழ் பக்கத்திலேயே 7 அங்குல தொடுதிரை வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம் பிடித்திருக்கின்றது.

Tata Tigor தொடங்கி மொத்தம் மூன்று கார்களுக்கு போட்டி... 2021 Honda Amaze காரின் முழு ரிவியூ தகவல்...

இது ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் வெப்லிங்க் உள்ளிட்ட இணைப்பு வசதிகளைக் கொண்டிருக்கின்றது. இவற்றின் வாயிலாக செல்போனை இணைப்பது மிக சுலபம். அவ்வாறு இணைக்கும்போது செல்போனுக்கு வரும் அழைப்பு, குறுஞ்செய்தி உள்ளிட்டவற்றை நம்மால் காரின் இன்ஃபோடெயின்மென்ட் திரையிலேயே கண்டறிந்து கொள்ள முடியும்.

Tata Tigor தொடங்கி மொத்தம் மூன்று கார்களுக்கு போட்டி... 2021 Honda Amaze காரின் முழு ரிவியூ தகவல்...

க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் ஏசி கன்ட்ரோல்களுக்கான பொத்தான்கள் இன்ஃபோடெயின்மென்டிற்கு கீழ் பகுதியில் இடம் பெற்றிருக்கின்றன. இவை மிகவும் விநோதமான தொடுதல் உணர்வு வசதியை வழங்கும் பொத்தான்களாக இருக்கின்றன. இதுமட்டுமின்றி, நேவிகஷேன் போன்ற முக்கிய தகவல்களையும் வழங்கும் ஓர் சிறப்பு அம்சமாக இது இருக்கின்றது.

Tata Tigor தொடங்கி மொத்தம் மூன்று கார்களுக்கு போட்டி... 2021 Honda Amaze காரின் முழு ரிவியூ தகவல்...

தொடர்ந்து மிக சிறந்த பயண அனுபவத்தை வழங்கும் வகையில் Honda Amaze காரில் ஸ்டியரிங் வீல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் இன்ஃபோடெயின்மென்டைக் கன்ட்ரோல் செய்யக் கூடிய பொத்தான்கள் இடம் பெற்றிருக்கின்றன. இது ஓர் மிக உறுதியான பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதனை கூடுதலாக அலங்கரிக்கும் லெதர் மற்றும் துணி போர்வையால் இது போர்த்தப்படுகின்றது.

Tata Tigor தொடங்கி மொத்தம் மூன்று கார்களுக்கு போட்டி... 2021 Honda Amaze காரின் முழு ரிவியூ தகவல்...

இன்ஸ்ட்ரூமென்டேஷனைக் கட்டுப்படுத்த டிஜிட்டல் அனலாக் கன்சோல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இதில் வழங்கப்பட்டிருக்கும் எம்ஐடி திரை எரிபொருள் அளவு, பயண தூரம், ட்ரிப் மீட்டர், ஓடோமீட்டர் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை வழங்கும். பின் பக்க இருக்கைப் பகுதியிலும் சில அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. மடித்துக் கொள்ளக் கூடிய கைகளுக்கான ஓய்வளிப்பான், கோப்பை தாங்கும் வசதி, 12வோல்ட் மின்சார திறன் கொண்ட சார்ஜர் பாயிண்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

Tata Tigor தொடங்கி மொத்தம் மூன்று கார்களுக்கு போட்டி... 2021 Honda Amaze காரின் முழு ரிவியூ தகவல்...

Honda Amaze இல் இடம் பெற்றிருக்கும் கம்ஃபோர்ட், நடைமுறைக்கு ஏற்ற வசதிகள்:

மிக சிறந்த பயண அனுபவத்தை வழங்குவதற்கு ஏதுவான அம்சங்கள் இந்த காரில் இடம் பெற்றிருக்கின்றன. அந்தவகையில், இதன் இருக்கைகளில் மிக சிறந்த ஸ்பாஞ்சுகள் மற்றும் துணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. நீண்ட தூரம் பயணித்தாலும் அசௌகரியமான பயண உணர்வை இது வழங்காது.

Tata Tigor தொடங்கி மொத்தம் மூன்று கார்களுக்கு போட்டி... 2021 Honda Amaze காரின் முழு ரிவியூ தகவல்...

குறிப்பாக, ஓட்டுநரின் இருக்கையில் சில வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், இருக்கையின் உயரத்தை மற்றும் முன், பின் நகர்த்தும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக மிக சிறந்த கையாளுமையை பெற முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த இருக்கைகளை மிக சிறந்த இருக்கைகள் என குறிப்பிடப்படுகின்றது.

Tata Tigor தொடங்கி மொத்தம் மூன்று கார்களுக்கு போட்டி... 2021 Honda Amaze காரின் முழு ரிவியூ தகவல்...

இருக்கைகளுக்கு இடையே அதிக இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கால்களை வசதியாக நீட்டிக் கொள்வதற்கு ஏற்ற இடைவெளி Honda Amaze இல் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதை இன்னும் கொஞ்சம்கூட அதிகரித்திருக்ககலாம் என நாங்கள் யூகிக்கின்றோம். தொடர்ந்து, இதன் ஹெட்ரூமும் நல்ல இடைவெளிக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. ஆனால், நடு இருக்கையில் அமர்பவருக்கு இது லேசான அசௌகரியமான உணர்வை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது.

Tata Tigor தொடங்கி மொத்தம் மூன்று கார்களுக்கு போட்டி... 2021 Honda Amaze காரின் முழு ரிவியூ தகவல்...

பூட் ஸ்பேஸ்; Honda Amaze காரின் பூட் ஸ்பேஸ் 420 லிட்டராக இருக்கின்றது. போதுமான அளவு லக்கேஜை ஏற்றிச் செல்ல உதவும். அதாவது ஓர் சிறிய குடும்பம் அதன் பொருட்களை ஏற்றி செல்ல இதுவே போதுமானது ஆகும்.

Tata Tigor தொடங்கி மொத்தம் மூன்று கார்களுக்கு போட்டி... 2021 Honda Amaze காரின் முழு ரிவியூ தகவல்...
Dimensions Honda Amaze Facelift
நீளம் 3,995mm
அகலம் 1,695mm
உயரம் 1,498mm
வீல்பேஸ் 2,470mm
பூட் ஸ்பேஸ் 420 litres
கிரவுண்ட் கிளியரன்ஸ் 165mm
Tata Tigor தொடங்கி மொத்தம் மூன்று கார்களுக்கு போட்டி... 2021 Honda Amaze காரின் முழு ரிவியூ தகவல்...

2021 Honda Amaze காரின் எஞ்ஜின் பெர்ஃபார்மன்ஸ் மற்றும் டிரைவிங் இம்பிரஸ்ஸன்ஸ்

2021 Honda Amaze கார் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான எஞ்ஜின் தேர்விலும் விற்பனைக்குக் கிடைக்கும். இதில், 1.2 லிட்டர் ஐ-விடெக் தொழில்நுட்பத்தில் கிடைக்கும் எஞ்ஜினையே நாங்கள் ஓட்டி பார்த்தோம். இது 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு சிவிடி டிரான்ஸ்மிஷன் தேர்வில் கிடைக்கும்.

Tata Tigor தொடங்கி மொத்தம் மூன்று கார்களுக்கு போட்டி... 2021 Honda Amaze காரின் முழு ரிவியூ தகவல்...

இதன் பெட்ரோல் எஞ்ஜின் கொண்ட தேர்வு 88 பிஎச்பி மற்றும் 110 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. ஆனால், இதன் டீசல் இரு விதமான ட்யூன்-அப்பில் கிடைக்க இருக்கிறது. அந்தவகையில், மேனுவல் கியர்பாக்ஸில் கிடைக்கும் டீசல் எஞ்ஜின் 98.6 பிஎச்பி மற்றும் 200 என்எம் டார்க்கையும், சிவிடி தேர்வு 78.9 பிஎச்பியையும்,160 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

Tata Tigor தொடங்கி மொத்தம் மூன்று கார்களுக்கு போட்டி... 2021 Honda Amaze காரின் முழு ரிவியூ தகவல்...

இதில் சிவிடி வசதிக் கொண்ட பெட்ரோல் எஞ்ஜின் காரையே நாங்கள் ரிவியூ டிரைவ் செய்து பார்த்தோம். இதன் எஞ்ஜின் திறன் வெளிப்பாடு மிக சிறந்த வசதியான உணர்வை வழங்கும் வகையில் இருந்தது. இந்த காரில் எந்த வித டிரைவிங் மோட்களும் வழங்கப்படவில்லை. ஆனால், இதன் கியர்பாக்ஸில் 'டி' மற்றும் 'எஸ்' எனும் இரு விதமான மோட்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

Tata Tigor தொடங்கி மொத்தம் மூன்று கார்களுக்கு போட்டி... 2021 Honda Amaze காரின் முழு ரிவியூ தகவல்...

இதில் 'டி' மோடில் கியரைப் பயன்படுத்தும்போது கியர்கள் மிகவும் ஸ்மூத்தாக இயங்குகின்றன. இதனை ஈகோ மோடில் வைத்து இயக்கியபோது நல்ல மைலேஜை வழங்கியது. நாங்கள் ஈகோ லெவலுக்கு உள்ளாகவே, அதாவது, மணிக்கு 85 கிமீ எனும் வேகத்திற்கு உள்ளாகவே வைத்து 2021 Honda Amaze காரை இயக்கினோம். இவ்வாறு இயக்கியபோதே குறைவான அளவு எரிபொருளை கார் உள் வாங்கியது.

Tata Tigor தொடங்கி மொத்தம் மூன்று கார்களுக்கு போட்டி... 2021 Honda Amaze காரின் முழு ரிவியூ தகவல்...

இதையடுத்து 'எஸ்' மோடில் வைத்தும் காரை இயக்கி பார்த்தோம். அப்போது மிக சிறந்த மற்றும் ஷார்ப்பான த்ரோட்டில் ரெஸ்பான்ஸ் கிடைத்தது. முந்தைய மாடலைப் போல் 2021 2021 Honda Amaze-லும் பேட்டில் ஷிஃப்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் சஸ்பென்ஷன் செட்-அப் மிகவும் நேர்த்தியானதாகவும், மென்மையானதாகவும் உள்ளது. பள்ளம், மேடு ஆகியவற்றை மிக எளிதில் சமாளிக்கும் ஓர் கருவியாக இது உள்ளது.

Tata Tigor தொடங்கி மொத்தம் மூன்று கார்களுக்கு போட்டி... 2021 Honda Amaze காரின் முழு ரிவியூ தகவல்...

இதன் ஸ்டியரிங் வீல் மிகவும் இலகான மற்றும் உடனுக்குடன் ரெஸ்பான்ஸ் செய்யும் வகையில் உள்ளீடுகளைப் பெற்றிருக்கின்றது. இதனை மிக வேகமாக திருப்பினால் உடனுக்குடன் திசையை மாற்றி செல்ல உதவும். ஆனால், அடுத்த சில செகண்டுகளில் அது அன்-ஸ்டேபிளாக மாறிவிடுகிறது. ஆகையால், இந்த ஸ்டியரிங் வீல் கையாள்வதில் ஓர் வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் வகையில் இருக்கின்றது.

Tata Tigor தொடங்கி மொத்தம் மூன்று கார்களுக்கு போட்டி... 2021 Honda Amaze காரின் முழு ரிவியூ தகவல்...

எங்களிடம் Honda Amaze சில மணி நேரங்களே இருந்தன. ஆகையால், முறையான அளவில் இதன் மைலேஜ் திறன் பற்றி ஆராய முடியவில்லை. நிறுவனத்தின் கூற்றுபடி, பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும் 2021 Honda Amaze மேனுவல் தேர்வு மற்றும் சிவிடி ஆகிய இரண்டும் லிட்டருக்கு 18 கிமீ வரை மைலேஜ் தரும் என கூறப்பட்டுள்ளது.

Tata Tigor தொடங்கி மொத்தம் மூன்று கார்களுக்கு போட்டி... 2021 Honda Amaze காரின் முழு ரிவியூ தகவல்...

இதன் டீசல் வேரியண்டின் மேனுவல் தேர்வு லிட்டருக்கு 24 கிமீ மைலேஜையும், சிவிடி 21 கிமீ மைலேஜையும் வழங்கும் என்றும் நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. விரைவில் இந்த காரை அதிக நேரம் ரிவியூ செய்வதற்காக பெற இருக்கின்றோம். அப்போது கார்குறித்த மைலேஜ் விபரங்கள் முழுவதையும் நாங்கள் வெளியிடுவோம்.

Tata Tigor தொடங்கி மொத்தம் மூன்று கார்களுக்கு போட்டி... 2021 Honda Amaze காரின் முழு ரிவியூ தகவல்...

Honda Amaze காரில் இடம் பெற்றிருக்கும் பாதுகாப்பு அம்சங்கள்:

  • இரட்டை ஏர்பேக் வழக்கமான அம்சமாக வழங்கப்படுகின்றது.
  • தானியங்கி முகப்பு விளக்கு
  • பின்பக்க பார்க்கிங் கேமிரா
  • இபிடி உடன் கூடிய ஏபிஎஸ்
  • ஐசோஃபிக்ஸ் மவுண்ட் சிறுவர்களுக்கான இருக்கை
  • எஞ்ஜின் இம்மொபிளிசெர்
  • Tata Tigor தொடங்கி மொத்தம் மூன்று கார்களுக்கு போட்டி... 2021 Honda Amaze காரின் முழு ரிவியூ தகவல்...

    சிறப்பம்சங்கள்

    • எல்இடி புரெக்டர் ஹெட்லேம்ப்
    • 7.0 இன்சிலான தொடுதிரை
    • ஸ்டியரிங் வீலில் பன்முக கன்ட்ரோல்கள்
    • குரல் கட்டளை
    • க்ரூஸ் கன்ட்ரோல்
    • தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோல்
    • பவர்ட் ஓஆர்விஎம்கள்
    • Tata Tigor தொடங்கி மொத்தம் மூன்று கார்களுக்கு போட்டி... 2021 Honda Amaze காரின் முழு ரிவியூ தகவல்...

      வேரியண்டுகள், நிறம் மற்றும் விலை பற்றிய தகவல்

      வேரியண்டுகள்:

      இ, எஸ் மற்றும் விஎக்ஸ் Honda Amaze ஆகிய மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். இதில், வேரியண்டானது வெறும் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்விலும், எஸ் மற்றும் விஎக்ஸ் வேரியண்டுகளில் மேனுவல் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும்.

      Tata Tigor தொடங்கி மொத்தம் மூன்று கார்களுக்கு போட்டி... 2021 Honda Amaze காரின் முழு ரிவியூ தகவல்...

      நிற தேர்வு:

      • மெட்டிரோய்ட் கிரே மெட்டாலிக்
      • கதிரியக்க சிவப்பு
      • பிளாட்டினம் வெள்ளை முத்து
      • லூனார் சில்வர் உலோகம்
      • கோல்டன் பழுப்பு உலோகம்
      • Tata Tigor தொடங்கி மொத்தம் மூன்று கார்களுக்கு போட்டி... 2021 Honda Amaze காரின் முழு ரிவியூ தகவல்...

        Honda Amaze காரின் விலை:

        Variants Petrol Diesel
        E MT ₹6.32 lakh ₹8.66 lakh
        S MT ₹7.16 lakh ₹9.26 lakh
        S CVT ₹8.06 lakh NA
        VX MT ₹8.22 lakh ₹10.25 lakh
        VX CVT ₹9.05 lakh ₹11.15 lakh
        Tata Tigor தொடங்கி மொத்தம் மூன்று கார்களுக்கு போட்டி... 2021 Honda Amaze காரின் முழு ரிவியூ தகவல்...

        போட்டியாளர்கள்:

        Honda Amaze கார் Maruti Suzuki Dzire, Tata Tigor மற்றும் Ford Aspire உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக விற்பனைக்கு வந்திருக்கின்றது. சிறிய ஓப்பீட்டை பட்டியலாகக் கீழே பார்க்கலாம்.

        Specifications Honda Amaze Maruti Dzire Tata Tigor Ford Aspire
        Engine 1.2-litre Petrol / 1.5-litre Turbo-Diesel 1.2-litre Petrol 1.2-litre Petrol 1.2-litre Petrol / 1.5-litre Turbo-Diesel
        Power 88bhp / 98bhp 88.5bhp 84.5bhp 95bhp / 99bhp
        Torque 110Nm / 200Nm 113Nm 113Nm 119Nm / 215Nm
        Transmission 5-speed Manual / CVT 5-speed Manual / 5-speed AMT 5-speed Manual / 5-speed AMT 5-speed Manual
        Prices Rs 6.32 lakh to Rs 11.15 lakh Rs 5.98 lakh to Rs 9.02 lakh Rs 5.64 lakh to Rs 7.81 lakh Rs 7.28 lakh to Rs 8.73
        Tata Tigor தொடங்கி மொத்தம் மூன்று கார்களுக்கு போட்டி... 2021 Honda Amaze காரின் முழு ரிவியூ தகவல்...

        இறுதி:

        2021 Honda Amaze காருக்கு நாங்கள் 3.5 ஸ்டார் ரேட்டிங்கை வழங்குகின்றோம். போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் இந்த கார் சற்று காஸ்ட்லியான தயாரிப்பாக இருக்கின்றது. ஆனால், புதுப்பித்தலின் வாயிலாக சில யுக்திகளைக் கையாண்டிருப்பதால் நல்ல போட்டியாளராக இது மாறியிருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #ஹோண்டா #honda #honda amaze
English summary
Here is what we have to say about 2021 honda amaze
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X