2021ல் இந்தியாவிற்கு டாடா காட்டிய கார் மாடல்கள்... என்ன சொல்றீங்க 9 மாசத்துல இத்தன கார்கள் வெளியேறி இருக்கா?

2021ம் ஆண்டில் இந்தியாவை விட்டு வெளியேறிய கார்களின் பட்டியலை இப்பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். நடப்பாண்டு தொடங்கி பத்து மாதங்கள் ஆவதற்குள் 8 கார்கள் சந்தையை விட்டு வெளியேறி இருக்கின்றன. இரண்டு கார் மாடல்கள் சந்தையை விட்டு வெளியேற தயாராகி வருகின்றன. அவை என்ன கார் மாடல்கள் என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

2021ல் இந்தியாவிற்கு டாடா காட்டிய கார் மாடல்கள்... என்ன சொல்றீங்க பத்து மாசத்துல இத்தன கார்கள் வெளியேறி இருக்கா!!

கடந்த 2020ம் ஆண்டில் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதியின் காரணமாக பல முன்னணி கார் மாடல்கள் இந்திய சந்தையை விட்டு வெளியேறும் சூழ்நிலை உருவாகியது. இதன் விளைவாக பட்ஜெட் வாகன விரும்பிகளின் பிரியமான கார் மாடல்கள் தற்போது சந்தையில் இல்லாத நிலை உள்ளது. கடந்த ஆண்டைப் போல நடப்பாண்டிலும் கார் மாடல்கள் விற்பனையில் இருந்து வெளியேறி இருக்கின்றன.

2021ல் இந்தியாவிற்கு டாடா காட்டிய கார் மாடல்கள்... என்ன சொல்றீங்க பத்து மாசத்துல இத்தன கார்கள் வெளியேறி இருக்கா!!

கோவிட்19 வைரஸ் மற்றும் புதுமுக வரவுகளின் தாக்கத்தைச் சமாளிக்க முடியாத காரணத்தினால் அவை வெளியேறி இருக்கின்றன. அந்தவகையில், இந்தியாவிற்கு நடப்பாண்டில் டாடா காட்டிய கார் மாடல்களின் முழு விபரத்தையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

2021ல் இந்தியாவிற்கு டாடா காட்டிய கார் மாடல்கள்... என்ன சொல்றீங்க பத்து மாசத்துல இத்தன கார்கள் வெளியேறி இருக்கா!!

டொயோட்டா யாரிஸ் (Toyota Yaris):

டொயோட்டா நிறுவனம் அதன் யார் செடான் ரக காரை இந்திய சந்தையில் இருந்து வெளியேற்றுவதாக மிக சமீபத்தில் அறிவித்தது. ஆகையால், யாரிஸ் கார் மாடல் தற்போது சந்தையில் விற்பனைக்குக் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. புதிய மாடல் ஒன்றின் வருகையை முன்னிட்டு இக்கார் சந்தையை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கின்றது.

2021ல் இந்தியாவிற்கு டாடா காட்டிய கார் மாடல்கள்... என்ன சொல்றீங்க பத்து மாசத்துல இத்தன கார்கள் வெளியேறி இருக்கா!!

மாருதி சுசுகி நிறுவனத்தின் சியாஸ் செடான் காரை டொயோட்டா ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. விரைவில் இந்த ரீபேட்ஜ் செய்யப்பட்ட கார் விற்பனைக்கு வர இருக்கின்றது. இதன் விளைவாகவே யாரிஸ் செடான் தற்போது இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கின்றது. ரீபேட்ஜ் செய்யப்படும் சியாஸ் பெல்டா எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

2021ல் இந்தியாவிற்கு டாடா காட்டிய கார் மாடல்கள்... என்ன சொல்றீங்க பத்து மாசத்துல இத்தன கார்கள் வெளியேறி இருக்கா!!

மஹிந்திரா எக்ஸ்யூவி500 (Mahindra XUV500):

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 காரை நிறுவனம் மிக விரைவில் விற்பனையில் இருந்து வெளியேற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரின் வருகையை முன்னிட்டு இக்கார் வெளியேற்றப்பட இருக்கின்றது. இந்த புதிய மாடல் தற்போது விற்பனையில் இருக்கும் சொகுசு கார்களுக்கே போட்டி அளிக்கும் வகையில் அதி நவீன வசதிகளுடன் விற்பனைக்கு வர இருக்கின்றது. இதன் வருகையை முன்னிட்டே எக்ஸ்யூவி500 மிக விரைவில் விற்பனையில் இருந்து வெளியேற்றப்பட இருக்கின்றது.

2021ல் இந்தியாவிற்கு டாடா காட்டிய கார் மாடல்கள்... என்ன சொல்றீங்க பத்து மாசத்துல இத்தன கார்கள் வெளியேறி இருக்கா!!

ஹோண்டா சிவிக் (Honda Civic):

ஹோண்டா நிறுவனம் சிவிக் காரின் 10ம் தலைமுரை சிவிக் காரை 2019ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இக்காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கவில்லை. இதன் விளைவாக விற்பனை கணிசமாக குறைய தொடங்கியது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் கூடுதல் சிக்கலை இக்காருக்கு ஏற்படுத்தியது. இதன் விளைவாக ஹோண்டா நிறுவனம் சிவிக் காரின் விற்பனையை நிறுத்தியது.

2021ல் இந்தியாவிற்கு டாடா காட்டிய கார் மாடல்கள்... என்ன சொல்றீங்க பத்து மாசத்துல இத்தன கார்கள் வெளியேறி இருக்கா!!

ஹோண்டா சிஆர்-வி (Honda CR-V):

ஹோண்டா சிஆர்-வி கார் இந்தியர்களைக் கவர தவறிவிட்டது என்றே கூற வேண்டும். இதுவே இக்கார் மாடலை ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளியேற்ற காரணமாக இருக்கின்றது. அதேவேலையில், இதன் போட்டியாளர்களான டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு என்டீயோவர் ஆகியவை கடும் போட்டியை வழங்கியதன் காரணத்தினாலும் இக்கார் சந்தையை விட்டு வெளியேற்றப்பட்டது.

2021ல் இந்தியாவிற்கு டாடா காட்டிய கார் மாடல்கள்... என்ன சொல்றீங்க பத்து மாசத்துல இத்தன கார்கள் வெளியேறி இருக்கா!!

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 (Hyundai Grand i10):

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 மாடலை புதிய கிராண்ட் ஐ10 நியாஸ் வருகையை ஒட்டி வெளியேற்றப்பட்டது. இதன் வெளியேற்றத்தை நிறுவனம் மிகவும் சைலண்டாக செய்தது குறிப்பிடத்தகுந்தது. நடப்பாண்டின் தொடக்கத்திலேயே இக்காரை நிறுவனம் வெளியேற்றியது. புதிய கிராண்ட் ஐ10 நியாஸ் கூடுதல் ஸ்போர்ட்டியான தோற்றத்தில் விற்பனைக்குக் கிடைத்து வருவது குறிப்பிடத்தகுந்தது.

2021ல் இந்தியாவிற்கு டாடா காட்டிய கார் மாடல்கள்... என்ன சொல்றீங்க பத்து மாசத்துல இத்தன கார்கள் வெளியேறி இருக்கா!!

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 (Mahindra Alturas G4):

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 கார் தற்போது இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. ஆனால், மிக விரைவில் இக்காரை வெளியேற்ற நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. தற்போது உற்பத்தியாளரிடத்தில் சுமார் 500 யூனிட் அல்டுராஸ் ஜி4 கார்களை உருவாக்கும் அளவிற்கான உதிரி பாகங்கள் மட்டுமே கையிருப்பில் உள்ளன.

2021ல் இந்தியாவிற்கு டாடா காட்டிய கார் மாடல்கள்... என்ன சொல்றீங்க பத்து மாசத்துல இத்தன கார்கள் வெளியேறி இருக்கா!!

இவற்றை கட்டமைத்து விற்பனைச் செய்ய நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. ஆகையால், மிக விரைவில் இது வெளியேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு மாற்றாக வேறொரு வாகனத்தை அறிமுகம் செய்யும் திட்டம் மஹிந்திரா நிறுவனத்திடம் இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

2021ல் இந்தியாவிற்கு டாடா காட்டிய கார் மாடல்கள்... என்ன சொல்றீங்க பத்து மாசத்துல இத்தன கார்கள் வெளியேறி இருக்கா!!

ஃபோர்டு (Ford)

ஃபோரடு நிறுழனம் இந்தியாவை விட்டு ஒட்டுமொத்தமாகவே வெளியேறி இருக்கின்றது. இதன் விளைவாக நிறுவனத்தின் ஃபிகோ (Figo), அஸ்பையர் (Aspire), ஈகோஸ்போர்ட் (EcoSport) மற்றும் என்டீயோவர் (Endeavour) ஆகிய கார் மாடல்கள் சந்தையில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கின்றன. இதில், ஈகோஸ்போர்ட் சப்-4 மீட்டர் காம்பேக்ட எஸ்யூவி இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இது ஓர் அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட கார் மாடலாகும்.

Most Read Articles

English summary
Here list of car model exits from indian market
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X