55 வருடங்கள் ஆனபோதிலும் பழமைமாறா தோற்றத்தில் ஜொலிக்கும் ஹிந்துஸ்தான் அம்பாசடர் கார்!! இப்போதும் பயன்பாட்டில்..

1965களில் விற்பனையில் இருந்த ஹிந்துஸ்தான் அம்பாசடர் கார் ஒன்று மீண்டும் பழமையான தோற்றத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

55 வருடங்கள் ஆனபோதிலும் பழமைமாறா தோற்றத்தில் ஜொலிக்கும் ஹிந்துஸ்தான் அம்பாசடர் கார்!! இப்போதும் பயன்பாட்டில்..

ஹிந்துஸ்தான் அம்பாசடர் 1958ல் இருந்து 50 வருடங்களுக்கு மேலாக 2014 வரையில் விற்பனையில் இருந்த பிரபலமான இந்திய கார். இப்போது விற்பனையில் இல்லாவிட்டாலும், பயன்பாட்டில் சில கார்கள் இருக்கின்றன.

55 வருடங்கள் ஆனபோதிலும் பழமைமாறா தோற்றத்தில் ஜொலிக்கும் ஹிந்துஸ்தான் அம்பாசடர் கார்!! இப்போதும் பயன்பாட்டில்..

அவற்றில் ஒன்றாக அம்பாசடர் எம்கே 2 காரை வைத்திருந்த ஜினில் ஜான்சன் என்பவர் அதனை மீண்டும் விற்பனையில் இருந்த போது கொண்டிருந்த அழகான தோற்றத்திற்கு மாற்றியுள்ளார். நீல நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ள இந்த அம்பாசடர் காரில் க்ரோம் பாகங்கள் சரியான அளவிற்கு வழங்கப்பட்டுள்ளன.

55 வருடங்கள் ஆனபோதிலும் பழமைமாறா தோற்றத்தில் ஜொலிக்கும் ஹிந்துஸ்தான் அம்பாசடர் கார்!! இப்போதும் பயன்பாட்டில்..

ஜினில் ஜான்சன் வெளியிட்டுள்ள இது தொடர்பான படங்களில் கார் கேரள மாநிலத்தின் பதிவு எண்ணை கொண்டுள்ளது. இதனால் இது கேரளாவில் வாங்கப்பட்ட காராகவே இருக்கும். முன்பக்கத்தில் துணை விளக்குகள் மற்றும் வெளிப்புற ஹார்ன்களை பம்பர் தாங்கியுள்ளது.

55 வருடங்கள் ஆனபோதிலும் பழமைமாறா தோற்றத்தில் ஜொலிக்கும் ஹிந்துஸ்தான் அம்பாசடர் கார்!! இப்போதும் பயன்பாட்டில்..

முன்பக்க ஹெட்லைட்கள், க்ரில் மற்றும் டர்ன் இண்டிகேட்டர்களின் வடிவத்தில் எந்த குறையும் இல்லை. குறிப்பாக சக்கரங்கள், மையத்தில் க்ரோம் மூடியுடன் நீலம் மற்றும் வெள்ளை என நம்மை கவரும் வகையில் இரு நிறங்களில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

55 வருடங்கள் ஆனபோதிலும் பழமைமாறா தோற்றத்தில் ஜொலிக்கும் ஹிந்துஸ்தான் அம்பாசடர் கார்!! இப்போதும் பயன்பாட்டில்..

உட்புறத்தில் ஸ்விட்ச்கள் மற்றும் டயல்களை கொண்ட மைய கன்சோல் உடன் டேஸ்போர்டு மற்றும் கியர் லிவரை கொண்ட ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்டவை அனைத்தும் அவற்றின் பழைய வடிவத்தில் அப்படியே காட்சி தருகின்றன. ஆனால் கேபினை சுற்றிலும் வழங்கப்பட்டுள்ள லெதர்கள் புதியவை ஆகும்.

55 வருடங்கள் ஆனபோதிலும் பழமைமாறா தோற்றத்தில் ஜொலிக்கும் ஹிந்துஸ்தான் அம்பாசடர் கார்!! இப்போதும் பயன்பாட்டில்..

விற்பனையில் இருந்தபோது வழங்கப்பட்ட அதே 1.5 லிட்டர், நேச்சுரலி அஸ்பிரேட்டட், இன்லைன்-4, கார்புரேட்டட் பெட்ரோல் என்ஜின் தான் தற்போதும் இந்த காரில் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதிகப்பட்சமாக 55 பிஎஸ் பவரை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் இணைக்கப்பட்ட 4-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் என்ஜினின் ஆற்றலை பின் சக்கரங்களுக்கு வழங்குகிறது.

55 வருடங்கள் ஆனபோதிலும் பழமைமாறா தோற்றத்தில் ஜொலிக்கும் ஹிந்துஸ்தான் அம்பாசடர் கார்!! இப்போதும் பயன்பாட்டில்..

இதன் என்ஜின் அமைப்பில் ஏகப்பட்ட ஹார்ன்களை பார்க்க முடிகிறது. இந்த கஸ்டமைஸ்ட் பணிகளுக்கு எவ்வளவு செலவானது உள்ளிட்ட விபரங்கள் கிடைக்கவில்லை. ஆனால் நாம் சமீபத்தில் பார்த்த மிகவும் அழகான ஹிந்துஸ்தான் அம்பாசடர் கார்களில் இதுவும் ஒன்று.

Most Read Articles

English summary
Check Out This Beautiful Restomodded 1965 Hindustan Ambassador In Tamil.
Story first published: Saturday, February 13, 2021, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X