சிபானி பாடல், இந்தியாவின் முதல் 3-சக்கர கார்!! ரசிகர்களை கவராததற்கு இதுதான் காரணம்!

மற்ற நாட்டு சந்தைகளுக்கு ஆட்டோமொபைல் வரலாறு இருப்பது போலவே இந்தியாவிற்கும் உள்ளது. இந்தியாவில் கடந்த வருடங்களில் பல புது நிறுவனங்கள் புதுமையான திட்டங்களுடன் கார் விற்பனையில் இறங்கியுள்ளன.

சிபானி பாடல், இந்தியாவின் முதல் 3-சக்கர கார்!! ரசிகர்களை கவராததற்கு காரணம் என்ன?

அவ்வாறு புதுமையான, அதேநேரம் வித்தியாசமான திட்டத்துடன் 1975ல் களமிறங்கிய இந்திய நிறுவனம் ஒன்றை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம். சிபானி என்ற பெயர் கொண்ட இந்த நிறுவனம் மூன்று சக்கரங்களில் கார்களை தயாரித்து விற்பனை செய்ய திட்டமிட்டது.

Image Courtesy: Talking Cars

பாடல் என பெயரிடப்பட்ட இந்த மூன்று-சக்கர காரை டால்க்கிங் கார்ஸ் என்ற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள மேலுள்ள வீடியோவில் காணலாம். ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ், ப்ரீமியர், ஸ்டாண்டர்ட் & ஃபியாட் போன்ற நிறுவனங்கள் இந்திய சந்தையில் கார்களை விற்பனை செய்து கொண்டிருந்த சமயத்தில் சிபானி, சன்ரைஸ் ஆட்டோமோட்டிவ் தொழில் நிறுவனம் என அழைக்கப்பட்டது.

சிபானி பாடல், இந்தியாவின் முதல் 3-சக்கர கார்!! ரசிகர்களை கவராததற்கு காரணம் என்ன?

கார்களே அதிசயமாக பார்க்கப்பட்டு வந்த அந்த சமயத்தில் 3-சக்கர கார் மிகவும் வித்தியாசமான வாகனமாக பார்க்கப்பட்டது. அதேநேரம் சிபானியின் இந்த தயாரிப்பு மலிவானதாகவும் விளங்கியது. இந்த சிறிய ரக காரை தயாரிக்க அனுமதி கிடைத்தவுடன் இங்கிலாந்தை சேர்ந்த ரிலையண்ட் உடன் சிபானி கூட்டணி சேர்ந்தது.

சிபானி பாடல், இந்தியாவின் முதல் 3-சக்கர கார்!! ரசிகர்களை கவராததற்கு காரணம் என்ன?

ரிலையண்ட் நிறுவனமும் இங்கிலாந்தில் ராபின் என்ற 3-சக்கர காரை தான் விற்பனை செய்துவந்தது. ரிலையண்ட் ராபினை பார்த்த பிறகே இந்தியாவை சேர்ந்த சிபானிக்கு இவ்வாறான யோசனை கிடைத்துள்ளது. இந்த கூட்டணி எல்லாம் முன்னரே போடப்பட்ட திட்டங்கள் ஆகும்.

சிபானி பாடல், இந்தியாவின் முதல் 3-சக்கர கார்!! ரசிகர்களை கவராததற்கு காரணம் என்ன?

ஆனால் பாடல் காரை முழுக்க முழுக்க தனது சொந்த பாகங்களின் உதவியுடன் தான் சிபானி தயாரித்தது. ரிலையண்ட் ராபினில் இருந்து ஒரு பாகம் கூட எடுக்கப்படவில்லை. விற்பனையில் இருந்த சமயத்தில் சில ஸ்கூட்டர்கள் கொண்டிருந்த 200சிசி பெட்ரோல் என்ஜின் தான் இந்த 3-சக்கர வாகனத்தில் வழங்கப்பட்டது.

சிபானி பாடல், இந்தியாவின் முதல் 3-சக்கர கார்!! ரசிகர்களை கவராததற்கு காரணம் என்ன?

என்ஜின் இந்த வாகனத்தில் பின்பக்கத்தில் பொருத்தப்பட்டது. ராபின் உடன் ஒப்பிடுகையில் தோற்றத்தில் சிபானி பாடல் சற்று வேறுப்பட்டதாகும். அதாவது ராபின் காரே கிடையாது, 3 சக்கரங்களை கொண்ட ஆட்டோ என்று தான் சொல்ல வேண்டும்.

சிபானி பாடல், இந்தியாவின் முதல் 3-சக்கர கார்!! ரசிகர்களை கவராததற்கு காரணம் என்ன?

ஆனால் பாடலில், கார் என்பதை காட்டும் வகையில் முன்பக்கம் கிட்டத்தட்ட மற்ற கார்களை போன்றே வடிவமைக்கப்பட்டது. இதுக்கூட இந்த 3-சக்கர வாகனம் சந்தையில் பிரபலமாகாமல் போனதற்கு காரணமாக இருக்கலாம்.

சிபானி பாடல், இந்தியாவின் முதல் 3-சக்கர கார்!! ரசிகர்களை கவராததற்கு காரணம் என்ன?

ஏனெனில் முன்பக்கத்தில் எடை கூடுவதால் வாகனம் இரண்டாக உடைவதற்கு வாய்ப்புகள் அதிகம். 70களில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட சிபானி பாடல் இந்தியாவில் வெறும் 300க்கு சற்று அதிகமான மாதிரிகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது.

Most Read Articles

English summary
Sipani Badal Story behind India’s first three wheeled car.
Story first published: Sunday, June 27, 2021, 23:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X