நிச்சயம் அனைவரும் ஏமாறுவர்... மும்பையில் ஃபெராரி காராக உலாவரும் ஹோண்டா அக்கார்ட்!!

மும்பையில் ஹோண்டா அக்கார்ட் கார் ஒன்று ஃபெராரி 458 இத்தாலியா காருக்கு இணையான தோற்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த மாடிஃபை காரை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

நிச்சயம் அனைவரும் ஏமாறுவர்... மும்பையில் ஃபெராரி காராக உலாவரும் ஹோண்டா அக்கார்ட்!!

சூப்பர் கார் வாங்குவது கார் பிரியர்கள் பலரது கனவு. ஆனால் அவர்களில் சிலர் மட்டுமே தங்களது கனவை நினைவாக்கி உள்ளனர். ஏனெனில் இந்தியாவில் பெரும்பான்மையான சூப்பர் கார்கள் முழுவதும் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டே விற்பனை செய்யப்படுகின்றனர்.

நிச்சயம் அனைவரும் ஏமாறுவர்... மும்பையில் ஃபெராரி காராக உலாவரும் ஹோண்டா அக்கார்ட்!!

இதனால் அவற்றிற்கு நிர்ணயிக்கப்படும் அதிகப்படியான விலையினை கொடுத்து வாங்குவது நம் நாட்டு வாடிக்கையாளர்களை பொறுத்தவரையில் சிரமமானதாக உள்ளது. ஆனால் சிலரோ வேறு மாதிரி யோசிக்கின்றனர்.

நிச்சயம் அனைவரும் ஏமாறுவர்... மும்பையில் ஃபெராரி காராக உலாவரும் ஹோண்டா அக்கார்ட்!!

அதாவது, தற்சமயம் உள்ள கார்களையே பிடித்த சூப்பர் காரின் தோற்றத்திற்கு மாற்ற சிலர் முயற்சித்துள்ளனர், சிலர் முயற்சித்து வருகின்றனர். இவ்வாறு, உலகளவில் பிரபலமான ஃபெராரி 458 இத்தாலியா காரின் தோற்றத்திற்கு மாற்றப்பட்ட ஹோண்டா அக்கார்ட் காரை தான் எம்இசட்ஒய் விலாக்ஸ் என்ற யுடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில் பார்க்கிறீர்கள்.

ஹோண்டா அக்கார்ட் செடான் காரை இவ்வாறான தோற்றத்திற்கு மும்பையை சேர்ந்த எக்ஸிக்யுட்டிவ் மட்கார் ட்ரெண்ட்ஸ் என்ற கஸ்டமைஸ்ட் நிறுவனம் மாற்றியுள்ளது. உண்மையில் இந்த காரை பார்ப்பவர்கள் நிச்சயமாக இது ஹோண்டா அக்கார்டில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது என்பதை நம்பவே மாட்டார்கள்.

நிச்சயம் அனைவரும் ஏமாறுவர்... மும்பையில் ஃபெராரி காராக உலாவரும் ஹோண்டா அக்கார்ட்!!

அந்த அளவிற்கு மாடிஃபிகேஷன் மாற்றங்கள் அதிகளவில் நேர்த்தியாக கொண்டுவரப்பட்டுள்ளன. சிலர் உண்மையிலேயே இது ஃபெராரி கார் தான் என்றும் நம்பிவிடுவார். குறிப்பாக ஹெட்லேம்ப், பம்பர், பொனெட் மற்றும் விண்ட்ஸ்க்ரீன் உள்ளிட்டவற்றுடன் காரின் முன்பகுதி உண்மையான ஃபெராரி 458 காரினை பெரிய அளவில் ஒத்து காணப்படுகிறது.

நிச்சயம் அனைவரும் ஏமாறுவர்... மும்பையில் ஃபெராரி காராக உலாவரும் ஹோண்டா அக்கார்ட்!!

மேலும் ஃப்ரேம் இல்லாத இரு-கதவு உண்மையிலேயே இது ஹோண்டா அக்கார்ட் கார் தானா என நம்மை சந்தேகிக்க வைக்கிறது. அதேபோல் பின்பகுதியில் 458 இத்தாலியாவின் அதே டிசைனில் டெயில்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. பின்பக்க பம்பரில் ஃபாக்ஸ் டிஃப்யூஸர் ட்ரிட்மெண்ட் வழங்கப்பட்டுள்ளது.

நிச்சயம் அனைவரும் ஏமாறுவர்... மும்பையில் ஃபெராரி காராக உலாவரும் ஹோண்டா அக்கார்ட்!!

பின் பம்பரின் மைய பகுதியில் 3 எக்ஸாஸ்ட் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. புதிய அலாய் சக்கரங்களை பற்றியும் கூறியே ஆக வேண்டும். இந்த மாடிஃபிகேஷன் மாற்றங்கள் பார்த்து பார்த்து மேற்கொள்ளப்பட்டிருப்பது, அலாய் சக்கரங்களில் ப்ரேக் காலிபர்கள் கூட சிவப்பு நிற நிறத்தில் வழங்கப்பட்டுள்ளதை பார்க்கும்போது தெரிய வருகிறது.

நிச்சயம் அனைவரும் ஏமாறுவர்... மும்பையில் ஃபெராரி காராக உலாவரும் ஹோண்டா அக்கார்ட்!!

வெளிப்புறத்திற்கு ஏற்ப காரின் உட்புறமும் பெரிய அளவில் மாற்றங்களை ஏற்றுள்ளது. முக்கியமாக, இருக்கைகள் இரண்டாக குறைக்கப்பட்டுள்ளன. இளஞ்சிவப்பு நிற லெதர் உள்ளமைப்பு இருக்கை, டேஸ்போர்ட், 4-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரம் என அனைத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.

நிச்சயம் அனைவரும் ஏமாறுவர்... மும்பையில் ஃபெராரி காராக உலாவரும் ஹோண்டா அக்கார்ட்!!

பின் இருக்கை வரிசை நீக்கப்பட்டுள்ளதால், அந்த பகுதி பொருட்களை வைப்பதற்கான இடமாக மாறியுள்ளது. இந்த மாடிஃபை மாற்றங்களை ஏற்றிருப்பது 2007ல் வாங்கப்பட்ட ஹோண்டா அக்கார்ட் வி6 காராகும். இதில் 3.5 லிட்டர், நேச்சுரலி-அஸ்பிரேட்டட், 6-சிலிண்டர் என்ஜின் 5-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது.

நிச்சயம் அனைவரும் ஏமாறுவர்... மும்பையில் ஃபெராரி காராக உலாவரும் ஹோண்டா அக்கார்ட்!!

இந்த என்ஜின் ஸ்டாக் நிலையில் அதிகப்பட்சமாக 275 பிஎஸ் மற்றும் 335 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. ஆனால் தற்போது சற்று குறைந்திருக்கலாம். இந்த என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் கொண்டு வரப்படாததால், ஃபெராரி 458 இத்தாலியா காரை பற்றி தெரிந்தவர்கள், இந்த மாடிஃபை காரின் இயக்கத்தின்போது இது அது இல்லை என்பதை கண்டுப்பிடித்துவிடுவர்.

நிச்சயம் அனைவரும் ஏமாறுவர்... மும்பையில் ஃபெராரி காராக உலாவரும் ஹோண்டா அக்கார்ட்!!

சுமார் ரூ.8 லட்சம் செலவில் கிட்டத்தட்ட 4-ல் இருந்து 5 மாதங்கள் வரையில் இந்த மாடிஃபிகேஷன் பணிகள் நடைபெற்றுள்ளன. ஆனால் உண்மையில் இவ்வாறான மாடிஃபிகேஷன் பணிகளை இந்திய அரசாங்கம் சட்ட விரோதமாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Honda Accord Masterfully Transformed Into Ferrari 458 Italia Replica. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X