“2050இல் தங்களது வாகனங்களால் முற்றிலுமாக விபத்து ஏற்படாது”- 2 முக்கிய தொழிற்நுட்பங்களை உருவாக்கும் ஹோண்டா!!

2050ஆம் ஆண்டிற்குள் சாலை விபத்துகளை பூஜ்ஜியமாக்க ஹோண்டா புதிய தொழிற்நுட்பங்கள் கண்டுப்பிடிப்பில் ஈடுப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. ஹோண்டாவின் இந்த தொழிற்நுட்பங்களை பற்றியும், இதுகுறித்த கூடுதல் விபரங்களையும் இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

“2050இல் தங்களது வாகனங்களால் முற்றிலுமாக விபத்து ஏற்படாது”- 2 முக்கிய தொழிற்நுட்பங்களை உருவாக்கும் ஹோண்டா!!

சாலை விபத்துகள் நாளுக்கு நாள் அரசாங்கங்களின் தலைவலியாக மாறி வருகின்றன. குறிப்பாக, மக்கள் தொகை பெருக்கம் அதிகம் கொண்ட நம் இந்தியா போன்ற நாட்டில் சாலை விபத்துகளை குறைப்பது என்பது ஆட்சியில் இருப்பவர்களுக்கு பெரும் சவாலானதாக விளங்குகிறது.

“2050இல் தங்களது வாகனங்களால் முற்றிலுமாக விபத்து ஏற்படாது”- 2 முக்கிய தொழிற்நுட்பங்களை உருவாக்கும் ஹோண்டா!!

இதற்காகவே பல்வேறு நடவடிக்கைகளிலும், திட்டங்களிலும் நமது மத்திய அரசாங்கமும், மாநில அரசாங்கங்களும் ஈடுப்பட்டு வருவதை பார்த்து வருகிறோம். இந்த நிலை நம் இந்தியாவில் மட்டுமில்லை. மக்கள் அடர்த்தி அதிகம் கொண்ட நாடுகளிலும் தான். இதனை கருத்தில் கொண்டு முடிந்த வரையில் தனது தயாரிப்புகளில் தற்காலத்திற்கு ஏற்ற மாடர்ன் பாதுகாப்பு தொழிற்நுட்பங்களை வழங்க ஆட்டோமொபைல் நிறுவனங்கள் முயற்சிக்கின்றன.

“2050இல் தங்களது வாகனங்களால் முற்றிலுமாக விபத்து ஏற்படாது”- 2 முக்கிய தொழிற்நுட்பங்களை உருவாக்கும் ஹோண்டா!!

மேலும் புதிய புதிய தொழிற்நுட்பங்களை கண்டறிவதற்கும், ஆராய்ச்சி செய்வதற்கும் R&D எனப்படும் ஆராய்ச்சி & கண்டுப்பிடிப்பு மையத்தினை வைத்துள்ளன. இந்த வகையில், எதிர்காலத்திற்கான அதிநவீன பாதுகாப்பு தொழிற்நுட்பங்களை கண்டறியும் பணியில் ஈடுப்பட உள்ளதாக ஹோண்டா மோட்டார் நிறுவனம் சார்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானை சேர்ந்த பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான ஹோண்டா 2050ஆம் ஆண்டிற்குள் உலகம் முழுவதிலும் தனது மோட்டார்சைக்கிள்கள் மற்றும் கார்கள் மூலமாக ஏற்படக்கூடிய சாலை விபத்துகளை பூஜ்ஜியமாக குறைக்க இப்போதில் இருந்தே பணியாற்ற துவங்கிவிட்டது. அதன் ஒரு பகுதியாகவே விரைவில் அதிநவீன பாதுகாப்பு தொழிற்நுட்பங்களின் கண்டுப்பிடிப்பு பணிகளில் ஈடுப்பட உள்ளதாக ஹோண்டா தற்போது அறிவித்துள்ளது.

“2050இல் தங்களது வாகனங்களால் முற்றிலுமாக விபத்து ஏற்படாது”- 2 முக்கிய தொழிற்நுட்பங்களை உருவாக்கும் ஹோண்டா!!

இதன்படி, செயற்கை நுண்ணறிவு பெற்ற ஓட்டுனர் உதவி தொழிற்நுட்பம் ஒன்றையும், பாதுகாப்பு & ஒலி நெட்வொர்க் தொழிற்நுட்பம் ஒன்றையும் உருவாக்கவுள்ளதாக ஹோண்டா தகவல்களை பகிர்த்து கொண்டுள்ளது. இதில், ஒரு சில பிராண்ட்களின் கார்களில் ஏற்கனவே வர ஆரம்பித்துவிட்ட செயற்கை நுண்ணறிவு பெற்ற ஓட்டுனர் உதவி தொழிற்நுட்பம் வாகனத்தின் ஓட்டுனர் செய்யக்கூடிய சிறு சிறு தவறுகளையும் தவிர்க்கக்கூடியதாக, அதன் காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்கக்கூடியதாக கொண்டுவரப்பட உள்ளது.

“2050இல் தங்களது வாகனங்களால் முற்றிலுமாக விபத்து ஏற்படாது”- 2 முக்கிய தொழிற்நுட்பங்களை உருவாக்கும் ஹோண்டா!!

பாதுகாப்பு & ஒலி நெட்வொர்க் தொழிற்நுட்பமானது விபத்தை குறைக்கும் வகையில் இயங்கும் வாகனம் மற்றும் சாலையில் செல்லும் மற்ற வாகனங்கள் & பாதசாரிகளுக்கு இடையே தகவல் தொடர்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என தெரிகிறது. ஏனெனில் இதன் மூலமாக எதிர்பாராத விதமாக நடைபெறும் விபத்துகளை தவிர்க்க முடியும். அதுமட்டுமில்லாமல் விபத்தில் சிக்கவுள்ள வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளை விபத்திற்கு முன்பாகவே எச்சரிக்கவும் முடியும் என ஹோண்டா நம்பிக்கை கொண்டுள்ளது.

“2050இல் தங்களது வாகனங்களால் முற்றிலுமாக விபத்து ஏற்படாது”- 2 முக்கிய தொழிற்நுட்பங்களை உருவாக்கும் ஹோண்டா!!

முன்னதாக, மோதல் இல்லா போக்குவரத்தை கொண்டுவரும் முயற்சியாக ஹோண்டா சென்சிங் 360 தொழிற்நுட்பத்தை அதன் பெரும்பாலான தயாரிப்புகளில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஹோண்டா தெரிவித்திருந்தது. ஒரே பாதையை தொடர உதவி, தகவமைத்து கொள்ளக்கூடிய க்ரூஸ் கண்ட்ரோல், போக்குவரத்து சிக்னல்களை அடையாளம் காணும் வசதி, ஓட்டுனரால் பார்க்க முடியாத பகுதியை கண்காணிக்கும் வசதி, ரிவர்ஸில் வரும்போது குறுக்காக வாகனம் வருவதை எச்சரிக்கும் வசதி உள்ளிட்டவை ஹோண்டா சென்சிங் 360 அமைப்பில் அடங்குகின்றன.

“2050இல் தங்களது வாகனங்களால் முற்றிலுமாக விபத்து ஏற்படாது”- 2 முக்கிய தொழிற்நுட்பங்களை உருவாக்கும் ஹோண்டா!!

இந்த ஓட்டுனர் உதவி அமைப்பை 2030ஆம் ஆண்டிற்குள் முதன்மையான நாடுகளில் உள்ள அனைத்து மாடல்களிலும் கொண்டுவர ஹோண்டா பணியாற்றி வருகிறது. தனது அதிநவீன ஓட்டுனர் உதவி அமைப்புகளின் செயல்பாடுகளை இவ்வாறு மேம்படுத்த தயாராகிவரும் ஹோண்டா, அதேநேரம் மோட்டார்சைக்கிளை அடையாளம் காணும் வசதியினையும் முதலாவதாக தனது கார்களில் வரும் ஆண்டுகளில் அறிமுகப்படுத்த உள்ளது.

“2050இல் தங்களது வாகனங்களால் முற்றிலுமாக விபத்து ஏற்படாது”- 2 முக்கிய தொழிற்நுட்பங்களை உருவாக்கும் ஹோண்டா!!

ஓட்டுனரை கவலையடைய செய்யும் ஓட்டுனர் பிழைகளுக்கான காரணங்களை ஆராய்வதற்காக, எஃப்.எம்.ஆர்.ஐ (fMRI- செயல்பாட்டு காந்த அதிர்வு இமேஜிங்)-யை பயன்படுத்தி வாகனம் ஓட்டும்போது மக்களின் சிந்தனை செயல்முறையை புரிந்து கொள்வதற்கான தொழிற்நுட்பங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை மேற்கொண்டு வரும் ஹோண்டா நிறுவனம், அடுத்த தலைமுறை ஓட்டுனர்-உதவி செயல்பாடுகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் இருப்பதாகவும் தெரிவிக்கிறது.

Most Read Articles

மேலும்... #ஹோண்டா #honda
English summary
Honda Plans To Achieve Zero Accidental Deaths
Story first published: Saturday, November 27, 2021, 23:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X