புதிய ஹோண்டா கார்களுக்கான பிப்ரவரி தள்ளுபடி சலுகைகள்... முழு விபரம்!

விற்பனையை உயர்த்தும் வகையில், கார்களுக்கு பிப்ரவரி தள்ளுபடி சலுகைகளை ஹோண்டா நிறுவனம் வழங்குகிறது. ஒவ்வொரு கார் மாடலுக்கும் அந்நிறுவனம் எவ்வளவு சேமிப்பை வழங்குகிறது என்பது உள்ளிட்ட விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

 புதிய ஹோண்டா கார்களுக்கான பிப்ரவரி தள்ளுபடி சலுகைகள்... முழு விபரம்!

ஹோண்டா அமேஸ்

ஹோண்டா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்றான அமேஸ் காருக்கு ரூ.26,997 வரையிலான சேமிப்புச் சலுகைகளை பெற முடியும். இது 2021ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட கார்களுக்கு பொருந்தும். பழைய காரை கொடுத்து புதிய ஹோண்டா கார் வாங்குவோருக்கு ரூ.12,500 வரையில் கூடுதல் மதிப்பை பெறும் வாய்ப்பு இருக்கிறது. அதேபோன்று, 12,500 வரை நேரடி தள்ளுபடியாகவும் அல்லது ரூ.14,497 வரையில் மதிப்புக்கு ஆக்சஸெரீகளை பெறும் வாய்ப்பும் வழங்குகிறது.

 புதிய ஹோண்டா கார்களுக்கான பிப்ரவரி தள்ளுபடி சலுகைகள்... முழு விபரம்!

2020ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ஹோண்டா அமேஸ் காருக்கு ரூ.15,000 தள்ளுபடி அல்லது ரூ.18,106 மதிப்புடைய ஆக்ஸசெரீகளை பெற முடியும். கூடுதலாக ரூ.12,000 மதிப்புக்கு 4 மற்றும் 5வது ஆண்டுகளுக்கான வாரண்டி மற்றும் ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் பெறும் வாய்ப்பும் உள்ளது.

 புதிய ஹோண்டா கார்களுக்கான பிப்ரவரி தள்ளுபடி சலுகைகள்... முழு விபரம்!

2020ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ஹோண்டா அமேஸ் ஸ்பெஷல் எடிசன் மாடலுக்கு ரூ.15,000 மதிப்புடைய சேமிப்பை பெறும் வாய்ப்பு உள்ளது. ரூ.7,000 தள்ளுபடி, இல்லையெனில், ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் பெறும் வாய்ப்பும் இருக்கிறது.

 புதிய ஹோண்டா கார்களுக்கான பிப்ரவரி தள்ளுபடி சலுகைகள்... முழு விபரம்!

ஹோண்டா அமேஸ் எக்ஸ்க்ளூசிவ் எடிசன்

ஹோண்டா அமேஸ் எக்ஸ்க்ளூசிவ் எடிசன் மாடலுக்கு ரூ.27,000 வரை சேமிப்பு பெறும் வாய்ப்பு இருக்கிறது. ரூ.12,000 வரை தள்ளுபடியும், ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் பெறும் வாய்ப்பு இருக்கிறது.

 புதிய ஹோண்டா கார்களுக்கான பிப்ரவரி தள்ளுபடி சலுகைகள்... முழு விபரம்!

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி

2021ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட புதிய ஹோண்டா சிட்டி காருக்கு ரூ.10,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் பெறும் வாய்ப்பு இருக்கிறது. கடந்த 2020ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட மாடலுக்கு ரூ.10,000 வரை நேரடி தள்ளுபடி அல்லது ரூ.10,798 மதிப்புக்கு ஆக்சஸெரீகள் மற்றும் ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸும் பெறும் வாய்ப்பு இருக்கிறது.

 புதிய ஹோண்டா கார்களுக்கான பிப்ரவரி தள்ளுபடி சலுகைகள்... முழு விபரம்!

புதிய ஹோண்டா டபிள்யூஆர்வி

புதிய ஹோண்டா டபிள்யூஆர்வி காரின் பெட்ரோல், டீசல் மாடல்களுக்கு ரூ.32,527 வரை சேமிப்பு பெறும் வாய்ப்பு இருக்கிறது. 2021ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட டபிள்யூஆர்வி கார்களுக்கு ரூ.15,000 தள்ளுபடி அல்லது ரூ.17,527 மதிப்புடைய ஆக்சஸெரீகளை பெற முடியும். தவிரவும், ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாக பெற முடியும்.

2020ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ஹோண்டா டபிள்யூ கார்களுக்கு ரூ.25,000 தள்ளுபடி அல்லது ரூ.29,427 மதிப்புடைய ஆக்சஸெரீகளை பெற முடியும். ரூ.15,000 மதிப்புடைய எக்ஸ்சேஞ்ச் போனஸ் பெறும் வாய்ப்பும் இருக்கிறது.

 புதிய ஹோண்டா கார்களுக்கான பிப்ரவரி தள்ளுபடி சலுகைகள்... முழு விபரம்!

ஹோண்டா டபிள்யூஆர்வி எக்ஸ்க்ளூசிவ் எடிசன்

2020ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ஹோண்டா டபிள்யூஆர்வி எக்ஸ்க்ளூசிவ் எடிசன் மாடலுக்கு ரூ.25,000 வரையிலான சேமிப்பை பெறும் வாய்ப்பு இருக்கிறது. ரூ.10,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனசாகவும் பெற முடியும்.

 புதிய ஹோண்டா கார்களுக்கான பிப்ரவரி தள்ளுபடி சலுகைகள்... முழு விபரம்!

புதிய ஹோண்டா ஜாஸ்

2021ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட புதிய ஹோண்டா ஜாஸ் காருக்கு ரூ.32,248 மதிப்புடைய சேமிப்பை பெற முடியும். ரூ.15,000 நேரடி தள்ளுபடி அல்லது ரூ.17,248 மதிப்புடைய ஆக்சஸெரீகளை பெற முடியும். தவிரவும், ரூ.15,000 மதிப்புடைய எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையையும் பெற முடியும்.

 புதிய ஹோண்டா கார்களுக்கான பிப்ரவரி தள்ளுபடி சலுகைகள்... முழு விபரம்!

2020ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட புதிய ஹோண்டா ஜாஸ் காருக்கு ரூ.25,000 தள்ளுபடி அல்லது ரூ.29,365 மதிப்புடைய ஆக்சஸெரீகளை இலவசமாக பெற முடியும். ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையும் உள்ளது.

Most Read Articles

English summary
Honda Cars India has announced discounts, benefits and special offers for February 2021. The year-end discounts and benefits are offered on select models including the Jazz, fifth-gen City, Amaze Standard, Special Edition & Exclusive Edition, WR-V and the Civic.
Story first published: Monday, February 8, 2021, 10:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X