ஹோண்டா கார்களுக்கு நவம்பர் மாத சிறப்புச் சேமிப்புச் சலுகைகள் விபரம்

பண்டிகை காலம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சிறப்பு சேமிப்புச் சலுகைகளை ஹோண்டா கார் நிறுவனம் அறிவித்துள்ளது. நவம்பர் மாதத்தில் புதிய ஹோண்டா காரை புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமான சேமிப்பை பெறுவதற்கான வாய்ப்புகளை ஹோண்டா வெளியிட்டுள்ளது.

 ஹோண்டா கார்களுக்கு நவம்பர் மாத சிறப்புச் சேமிப்புச் சலுகைகள் விபரம்

கார் மாடல் மற்றும் வேரியண்ட்டுகளுக்கு தக்கவாறு 38,000 வரை சிறப்பு தள்ளுபடியாக ஹோண்டா கார் நிறுவனம் வழங்குகிறது. ஒவ்வொரு ஹோண்டா கார் மாடலுக்கும் எவ்வளவு சேமிப்புச் சலுகைகளை பெற முடியும் என்ற விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

 ஹோண்டா கார்களுக்கு நவம்பர் மாத சிறப்புச் சேமிப்புச் சலுகைகள் விபரம்

ஹோண்டா ஜாஸ்

பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் வாங்க விரும்புவோருக்கான பட்டியலில் ஹோண்டா ஜாஸ் கார் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. டிசைன், எஞ்சின் தேர்வுகள், இடவசதி, வசதிகளில் சிறப்பான மதிப்பை பெற்றிருக்கிறது. இந்த நிலையில், பிரிமீயம் ஹேட்ச்பேக் காரை வாங்க விரும்புவோரை கவரும் வகையில், சிறப்பு சேமிப்புச் சலுகைகளை அறிவிக்கப்பட்டுள்ளன.

 ஹோண்டா கார்களுக்கு நவம்பர் மாத சிறப்புச் சேமிப்புச் சலுகைகள் விபரம்

ஹோண்டா ஜாஸ் காருக்கு ரூ.36,147 மதிப்புடைய சேமிப்பை பெறும் வாய்ப்பு இருக்கிறது. இதில், ரூ.10,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.12,147 மதிப்புடைய ஆக்சஸெரீகளையும் பெற முடியும். ரூ.5,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ.5,000 லாயல்டி போனசாகவும் பெற முடியும்.

 ஹோண்டா கார்களுக்கு நவம்பர் மாத சிறப்புச் சேமிப்புச் சலுகைகள் விபரம்

ஹோண்டா அமேஸ்

காம்பேக்ட் செடான் கார் மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வாகவும், அதிக வரவேற்பை பெற்ற மாடலாகவும் ஹோண்டா அமேஸ் கார் பெற்றிருக்கிறது. அதிக இடவசதியை அளிக்கும் மாடல் என்பதுடன் சற்றே பிரிமீயமான தேர்வாகவும் இருந்து வருகிறது.

 ஹோண்டா கார்களுக்கு நவம்பர் மாத சிறப்புச் சேமிப்புச் சலுகைகள் விபரம்

இந்த நிலையில், ஹோண்டா அமேஸ் காரை வாங்க விரும்புவோர் ரூ.15,000 வரையில் அதிகபட்சமாக சேமிப்பு பெறும் வாய்ப்பு இருக்கிறது. இதில், ரூ.5,000 லாயல்டி போனசாகவும், ரூ.6,000 எக்ஸ்சேஞ்ச் போனசாகவும், ரூ.4,000 கார்ப்பரேட் போனசாகவும் பெறும் வாய்ப்பு இருக்கிறது.

 ஹோண்டா கார்களுக்கு நவம்பர் மாத சிறப்புச் சேமிப்புச் சலுகைகள் விபரம்

ஹோண்டா டபிள்யூஆர்வி

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் ஏராளமான தேர்வுகள் இருந்தாலும், ஹோண்டா டபிள்யூஆர்வி காருக்கு தனி வாடிக்கையாளர் வட்டம் இருந்து வருகிறது. அட்டகாசமான ஸ்டைலுடன் இந்த கார் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. இந்த காரை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள், அதிகபட்சமாக ரூ.29,058 வரை சேமிப்பு பெறும் வாய்ப்பு இருக்கிறது. ரூ.5,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.9,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் உள்பட அதிகபட்சமாக ரூ.29,058 வரை தள்ளுபடி பெறும் வாய்ப்பு இருக்கிறது.

 ஹோண்டா கார்களுக்கு நவம்பர் மாத சிறப்புச் சேமிப்புச் சலுகைகள் விபரம்

ஹோண்டா சிட்டி (4வது தலைமுறை மாடல்)

ஹோண்டா சிட்டி காரின் முந்தைய தலைமுறை மாடல் தொடர்ந்து விற்பனையில் வைக்கப்பட்டு இருக்கிறது. மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் ஹோண்டா நிறுவனத்தின் சற்று குறைவான விலை தேர்வாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த 4வது தலைமுறை மாடலுக்கு ரூ.23,000 வரை சேமிப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்பு இருக்கிறது. இதில், ரூ.5,000 லாயல்டி போனசாகவும், ரூ.8,000 கார்ப்பரேட் போனசாகவும், ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனசாகவும் பெற முடியும்.

 ஹோண்டா கார்களுக்கு நவம்பர் மாத சிறப்புச் சேமிப்புச் சலுகைகள் விபரம்

நியூ ஹோண்டா சிட்டி (5வது தலைமுறை மாடல்)

ஹோண்டா சிட்டி காரின் 5வது தலைமுறை மாடல் மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் மிகவும் பிரிமீயம் மாடலாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. டிசைன், வசதிகள், இடவசதி, விலை என அனைத்திலும் மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. இந்த காருக்கு அதிகபட்சமாக ரூ.38,608 வரை சேமிப்பை பெற முடியும். ரூ.8,108 இலவச ஆக்சஸெரீகள், ரூ.7,500 எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ.5,000 லாயல்டி போனசாக பெற முடியும். பழைய ஹோண்டா காரை எக்ஸ்சேஞ்ச் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் பெறும் வாய்ப்பும் கொடுக்கப்படுகிறது.

 ஹோண்டா கார்களுக்கு நவம்பர் மாத சிறப்புச் சேமிப்புச் சலுகைகள் விபரம்

ஆஃபர் விபரம்

வரும் 30ந் தேதி வரை இந்த ஆஃபர்கள் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தெரிந்து கொள்வதற்கு அருகாமையிலுள்ள ஹோண்டா கார் ஷோரூமை அணுகி கூடுதல் விபரங்களை பெற்றுக் கொள்ளலாம்.

Most Read Articles

English summary
Here are the complete details of Honda Cars India discounts & Offers in November 2021. Read in Tamil.
Story first published: Friday, November 5, 2021, 11:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X