ஹோண்டா கார்களுக்கு ரூ.2.50 லட்சம் வரை ஜனவரி ஆஃபர்... முழு விபரம்!

புத்தாண்டை முன்னிட்டு ஹோண்டா கார்களுக்கு சிறப்பு தள்ளுபடி மற்றும் சேமிப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹோண்டா கார்களுக்கான ஜனவரி மாத ஆஃபர்கள்... முழு விபரம்!

கொரோனா நெருக்கடியால் வர்த்தகம் முடங்கியதையடுத்து, வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பெரும்பாலான கார் நிறுவனங்கள் தொடர்ந்து ஆஃபர்களை அள்ளி வீசி வருகின்றன. இதன் பலனாக, பண்டிகை காலத்திலும், ஆண்டு இறுதியிலும் கார் விற்பனை சிறப்பாக அமைந்தது.

இந்த நிலையில், புத்தாண்டு காலத்திலும் ஆஃபர்களை தொடர்வதற்கு ஹோண்டா முடிவு செய்துள்ளது. அதன்படி, தனது கார்களுக்கு சிறப்பு தள்ளுபடி மற்றும் சேமிப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஹோண்டா கார்களுக்கான ஜனவரி மாத ஆஃபர்கள்... முழு விபரம்!

ஹோண்டா அமேஸ்

ஹோண்டா அமேஸ் காருக்கு ரூ.25,000 வரை சேமிப்பு மற்றும் தள்ளுபடியை பெறும் வாய்ப்பு இருக்கிறது. ஹோண்டா அமேஸ் காருக்கு ரூ.15,000 வரை நேரடி தள்ளுபடியும், ரூ.10,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையும் வழங்கப்படுகிறது.

ஹோண்டா கார்களுக்கான ஜனவரி மாத ஆஃபர்கள்... முழு விபரம்!

2020ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு இருப்பில் இருக்கும் ஹோண்டா அமேஸ் கார்களுக்கு 4வது மற்றும் 5வது ஆண்டுக்கான ரூ.12,000 மதிப்புடைய வாரண்டி திட்டம், ரூ.15,000 வரை விலையில் தள்ளுபடி மற்றும் ரூ.10,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகைகளை பெறும் வாய்ப்பு இருக்கிறது.

ஹோண்டா கார்களுக்கான ஜனவரி மாத ஆஃபர்கள்... முழு விபரம்!

ஹோண்டா அமேஸ் ஸ்பெஷல் எடிசன்

ஹோண்டா அமேஸ் ஸ்பெஷல் எடிசன் மாடலுக்கு ரூ.7,000 வரை நேரடி தள்ளுபடியும், ரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஹோண்டா கார்களுக்கான ஜனவரி மாத ஆஃபர்கள்... முழு விபரம்!

ஹோண்டா அமேஸ் எக்ஸ்க்ளூசிவ் எடிசன்

ஹோண்டா அமேஸ் எக்ஸ்க்ளூசிவ் எடிசன் மாடலுக்கு ரூ.12,000 வரை நேரடி தள்ளுபடியும், ரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையும் வழங்கப்படுகிறது.

ஹோண்டா கார்களுக்கான ஜனவரி மாத ஆஃபர்கள்... முழு விபரம்!

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காரின் 2021 தயாரிப்பு மாடலுக்கு ரூ.20,000 வரையிலும், 2020ம் ஆண்டு தயாரிப்பு மாடலுக்கு ரூ.30,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் பெறும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.

ஹோண்டா கார்களுக்கான ஜனவரி மாத ஆஃபர்கள்... முழு விபரம்!

ஹோண்டா டபிள்யூஆர்வி

ஹோண்டா டபிள்யூஆர்வி எஸ்யூவியின் 2021 தயாரிப்பு மாடலுக்கு ரூ.15,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும் பெற முடியும். 2020ம் ஆண்டு தயாரிப்பு மாடலுக்கு ரூ.25,000 வரை தள்ளுபடியும், ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையும் வழங்கப்படுகிறது.

ஹோண்டா டபிள்யூஆர்வி 2020 தயாரிப்பு மாடலுக்கு ரூ.10,000 தள்ளுபடியாகவும், ரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும் வழங்கப்படுகிறது.

ஹோண்டா கார்களுக்கான ஜனவரி மாத ஆஃபர்கள்... முழு விபரம்!

ஹோண்டா ஜாஸ்

ஹோண்டா ஜாஸ் 2021ம் ஆண்டு தயாரிப்பு மாடலுக்கு ரூ.30,000 வரை தள்ளுபடி பெறலாம். ரூ.15,000 வரை விலையில் தள்ளுபடியாகவும், ரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையாகவும் கொடுக்கப்படுகிறது. 2020ம் ஆண்டு தயாரிப்பு மாடலுக்கு ரூ.25,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும் பெற முடியும்.

ஹோண்டா கார்களுக்கான ஜனவரி மாத ஆஃபர்கள்... முழு விபரம்!

ஹோண்டா சிவிக்

ஹோண்டா சிவிக் காருக்கு ரூ.2.50 லட்சம் வரை சேமிப்பை பெற முடியும். பெட்ரோல் மாடலுக்கு ரூ.1 லட்சம் வரையிலும், டீசல் மாடலுக்கு ரூ.2.50 லட்சம் வரையிலும் தள்ளுபடி பெறும் வாய்ப்பு இருக்கிறது.

ஹோண்டா கார்களுக்கான ஜனவரி மாத ஆஃபர்கள்... முழு விபரம்!

வரும் ஜனவரி 31ந் தேதி வரை புதிய ஹோண்டா கார்களை புக்கிங் செய்வோர் இந்த சேமிப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்பு இருக்கிறது. இவை அனைத்தும் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களுககு அருகாமையிலுள்ள ஹோண்டா டீலரை தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்களை பெற்றுக் கொள்ளலாம்.

Most Read Articles

English summary
Honda Cars India has announced new year discounts, benefits and special offers for January 2021.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X