கார் விலையை உயர்த்தியது ஹோண்டா... மாடல் வாரியாக விலை உயர்வு விபரம்!

மூலப்பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து, கார்களின் விலையை உயர்த்தி உள்ளது ஹோண்டா நிறுவனம். ஒவ்வொரு மாடலுக்கும் எவ்வளவு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

கார் விலையை உயர்த்தியது ஹோண்டா... மாடல் வாரியாக விலை உயர்வு விபரம்!

மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக, பெரும்பாலான கார் நிறுவனங்கள் விலை உயர்வை கையில் எடுத்துள்ளன. மேலும், கொரோனா பிரச்னையால் கார்களுக்கு தேவைப்படும் செமி கன்டக்டர் உள்ளிட்ட சில முக்கிய பாகங்களுக்கு பெரிய அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கார் விலையை உயர்த்தியது ஹோண்டா... மாடல் வாரியாக விலை உயர்வு விபரம்!

இதையடுத்து, கார்களின் விலையை உயர்த்துவதாக ஹோண்டா கார் நிறுவனம் அறிவித்துள்ளது. கார் மாடல்கள், வேரியண்ட்டுகளுக்கு தக்கவாறு அதிகபட்சமாக ரூ.20,000 வரை கார்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

கார் விலையை உயர்த்தியது ஹோண்டா... மாடல் வாரியாக விலை உயர்வு விபரம்!

ஹோண்டா ஜாஸ் காரின் விலை ரூ.5,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கார் பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மேனுவல் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. ரூ.7.55 ட்சம் முதல் ரூ.9.79 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது.

கார் விலையை உயர்த்தியது ஹோண்டா... மாடல் வாரியாக விலை உயர்வு விபரம்!

ஹோண்டா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்றான அமேஸ் காரின் விலை ரூ.5,000 அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கார் பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடல் ரூ.6.22 லட்சம் முதல் ரூ.8.84 லட்சம் வரையிலான விலையிலும், டீசல் மாடல் ரூ.7.68 லட்சம் முதல் ரூ.9.99 லட்சம் வரையிலான விலையிலும் கிடைக்கிறது.

கார் விலையை உயர்த்தியது ஹோண்டா... மாடல் வாரியாக விலை உயர்வு விபரம்!

அடுத்து, ஹோண்டா டபிள்யூஆர்வி எஸ்யூவி காரின் விலை ரூ.5,000 அதிகரிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மாடல் ரூ.8.55 லட்சம் முதல் ரூ.9.75 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது. டீசல் மாடல் ரூ.9.85 லட்சம் முதல் ரூ.11.05 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

கார் விலையை உயர்த்தியது ஹோண்டா... மாடல் வாரியாக விலை உயர்வு விபரம்!

ஹோண்டா நிறுவனத்தின் புதிய தலைமுறை சிட்டி காரின் நடுத்தர வகை வேரியண்ட்டுகளின் விலை ரூ.10,000 வரையிலும், டாப் வேரியண்ட்டுகளின் விலை ரூ.20,000 வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய ஹோண்டா சிட்டி கார் பெட்ரோல் மாடல் ரூ.10.99 லட்சம் முதல் ரூ.14.64 லட்சம் வரையிலும், டீசல் மாடல் ரூ12.49 லட்சம் முதல் ரூ.14.84 லட்சம் வரையிலான விலையிலும் கிடைக்கும்.

கார் விலையை உயர்த்தியது ஹோண்டா... மாடல் வாரியாக விலை உயர்வு விபரம்!

அதேநேரத்தில், முந்தைய தலைமுறை ஹோண்டா சிட்டி காரும் தொடர்ந்து விற்பனையில் வைக்கப்பட்டுள்ளது. சற்றே குறைவான பட்ஜெட்டில், சிட்டி கார் கனவுடன் இருப்பவர்களை ஏமாற்றிவிடக் கூடாது என்ற கொள்கையில், இந்த மாடல் விற்பனை செய்யப்படுகிறது. எனவே, இந்த காரின் விலை அதிகரிக்கப்படவில்லை என்பது ஆறுதலான விஷயம்.

Most Read Articles
--

English summary
Honda Cars India Limited have increased the prices of all its models sold in the Indian market. This includes the Honda Jazz, WR-V, Amaze and the fifth-generation City have been affected by the price increase.
Story first published: Tuesday, February 2, 2021, 12:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X