இந்தியாவில் அறிமுகமாக வரிசைக்கட்டி நிற்கும் செடான் கார்கள்!! ஸ்கோடா ஸ்லாவியா முதல் டொயோட்டா காம்ரி வரை...

ஒரு சமயத்தில் பெரும்பாலான நாடுகளின் சாலைகளை செடான் கார்கள் தான் ஆக்கிரமித்து இருந்தன என்றால் அதில் மிகையில்லை. ஆனால் தற்போதைய சூழலே வேறு. ஹேட்ச்பேக், எஸ்யூவி என செடானில் இருந்து ட்ரெண்டிற்கு ஏற்ப வெவ்வேறான உடலமைப்புகளில் கார்களை பெறவே இப்போது உள்ள இளம் தலைமுறையினர் விரும்புகின்றனர்.

இந்தியாவில் அறிமுகமாக வரிசைக்கட்டி நிற்கும் செடான் கார்கள்!! ஸ்கோடா ஸ்லாவியா முதல் டொயோட்டா காம்ரி வரை...

அதிலும் குறிப்பாக எஸ்யூவி கார்கள் இந்திய சந்தையில் கடந்த சில வருடங்களில் அடைந்திருக்கும் வளர்ச்சி மிக பெரியது. இதனால் தான் முழு-அளவு எஸ்யூவி, நடுத்தர-அளவு எஸ்யூவி, காம்பெக்ட்-எஸ்யூவி, மைக்ரோ-எஸ்யூவி என 5 இல் இருந்து 9 பேர் அமரும் வகையில் எஸ்யூவிகளை அறிமுகப்படுத்த தற்சமயம் கார் தயாரிப்பு நிறுவனங்கள் விரும்புகின்றன.

இந்தியாவில் அறிமுகமாக வரிசைக்கட்டி நிற்கும் செடான் கார்கள்!! ஸ்கோடா ஸ்லாவியா முதல் டொயோட்டா காம்ரி வரை...

இருப்பினும் பழமையான கார்களை விரும்புவோரை அதிகம் கொண்ட இந்தியாவில் செடான் கார்களுக்கான சந்தையும் இருக்க தான் செய்கிறது. இதனை வெளிக்காட்டும் வகையில் அடுத்ததாக நம் நாட்டில் அறிமுகமாகவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் சில செடான் கார்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் அறிமுகமாக வரிசைக்கட்டி நிற்கும் செடான் கார்கள்!! ஸ்கோடா ஸ்லாவியா முதல் டொயோட்டா காம்ரி வரை...

ஸ்கோடா ஸ்லாவியா

விற்பனை நிறுத்தப்படும் நிலையில் உள்ள ராபிட் செடான் மாடலுக்கு மாற்றாக ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கும் செடான் கார் தான் ஸ்லாவியா. இந்திய வாடிக்கையாளர்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட எம்க்யூபி-ஏ0-இன் ப்ளாட்ஃபாரத்தில் வெளிவரும் இரண்டாவது ஸ்கோடா காரான இது ராபிட்டை காட்டிலும் அளவில் பெரியது.

இந்தியாவில் அறிமுகமாக வரிசைக்கட்டி நிற்கும் செடான் கார்கள்!! ஸ்கோடா ஸ்லாவியா முதல் டொயோட்டா காம்ரி வரை...

இதனால் உட்புறத்தில் கூடுதல் இடவசதி கிடைக்கும். அத்துடன் பிரிவிலேயே நீண்ட வீல்பேஸ் கொண்ட மாடலாக ஸ்லாவியா கொண்டுவரப்படுகிறது. வயர்லெஸ் சார்ஜிங், ‘மை ஸ்கோடா' இணைப்பு கார் தொழிற்நுட்பம் மற்றும் புதிய இன்ஃபோடெயின்மெண்ட் திரையினை பெற்றுவரவுள்ள ஸ்கோடாவின் இந்த புதிய செடான் காரின் அறிமுகத்தினை 2022ஆம் ஆண்டின் துவக்கத்தில் எதிர்பார்க்கிறோம்.

இந்தியாவில் அறிமுகமாக வரிசைக்கட்டி நிற்கும் செடான் கார்கள்!! ஸ்கோடா ஸ்லாவியா முதல் டொயோட்டா காம்ரி வரை...

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ்

ஸ்கோடாவின் கூட்டணி நிறுவனமான ஃபோக்ஸ்வேகனும் இந்தியாவில் புதிய செடான் காரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. கிட்டத்தட்ட 10 வருடங்களாக நம் நாட்டில் விற்பனையில் இருக்கும் வெண்டோவிற்கு மாற்றாக கொண்டுவரப்படும் விர்டுஸ் மாடலும் எம்க்யூபி-ஏ0-இன் ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் தான் உருவாக்கப்பட உள்ளது.

இந்தியாவில் அறிமுகமாக வரிசைக்கட்டி நிற்கும் செடான் கார்கள்!! ஸ்கோடா ஸ்லாவியா முதல் டொயோட்டா காம்ரி வரை...

இதுவும் முந்தைய மாடலை (வெண்டோ) காட்டிலும் அளவில் பெரியதாக கொண்டுவரப்பட உள்ளது. வெளிநாட்டு சந்தைகளில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் இதன் கூர்மையான லைன்களை அதிகம் கொண்ட ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்தியா பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் அறிமுகமாக வரிசைக்கட்டி நிற்கும் செடான் கார்கள்!! ஸ்கோடா ஸ்லாவியா முதல் டொயோட்டா காம்ரி வரை...

ஹோண்டா சிட்டி ஹைப்ரீட்

2022ஆம் ஆண்டின் மத்தியில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் ஹோண்டா சிட்டி ஹைப்ரீட் இந்தியாவிலேயே அதிகளவில் விற்பனை செய்யப்பட உள்ள வலிமையான ஹைப்ரீட் அமைப்பை கொண்ட காராக விளங்கவுள்ளது. அதேநேரம் தோற்றத்திலும் சில வித்தியாசங்களை எதிர்பார்க்கலாம்.

இந்தியாவில் அறிமுகமாக வரிசைக்கட்டி நிற்கும் செடான் கார்கள்!! ஸ்கோடா ஸ்லாவியா முதல் டொயோட்டா காம்ரி வரை...

சிட்டி ஹைப்ரீட் செடான் காரில் 1.5 லிட்டர், அட்கின்ஸன்-சைக்கிள் பெட்ரோல் என்ஜின் உடன் ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்டார்டர் ஜெனரேட்டர் (ஐஎஸ்ஜி) மற்றும் இரண்டாவது எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஹைப்ரீட் செட்அப்-பினால் இந்த புதிய சிட்டி செடான் காரை முழுவதும் இவி மோடிலும் சில கிமீ தொலைவிற்கு ஓட்டி செல்லலாம்.

இந்தியாவில் அறிமுகமாக வரிசைக்கட்டி நிற்கும் செடான் கார்கள்!! ஸ்கோடா ஸ்லாவியா முதல் டொயோட்டா காம்ரி வரை...

மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ்

ஆறாம் தலைமுறை மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ் செடான் கடந்த பிப்ரவரி மாதத்தில் உலகளவில் வெளியீடு செய்யப்பட்டது. முக்கியமான அப்டேட்டாக காரின் முன்பக்க முனை பகுதியிலும், லைட்கள் பொருத்தப்படும் குழிகளின் வடிவத்திலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதேபோல் 25மிமீ கூடுதல் நீளத்தில் வீல்பேஸை பெற்றுள்ளது.

இந்தியாவில் அறிமுகமாக வரிசைக்கட்டி நிற்கும் செடான் கார்கள்!! ஸ்கோடா ஸ்லாவியா முதல் டொயோட்டா காம்ரி வரை...

உட்புறத்தில் பொத்தான்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. க்ளைமேட் கண்ட்ரோல் உள்பட சில வசதிகளை தொடுதல் மூலமாக கட்டுப்படுத்தலாம். முந்தைய தலைமுறையை போன்று இதன் ஏஎம்ஜி வேரியண்ட்டும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ரூ.45 லட்சத்தில் இருந்து ரூ.55 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலைகளில் இவற்றின் அறிமுகத்தை 2022ஆம் ஆண்டின் இறுதியில் எதிர்பார்க்கிறோம்.

இந்தியாவில் அறிமுகமாக வரிசைக்கட்டி நிற்கும் செடான் கார்கள்!! ஸ்கோடா ஸ்லாவியா முதல் டொயோட்டா காம்ரி வரை...

டொயோட்டா காம்ரி ஃபேஸ்லிஃப்ட்

ஆயுட் காலத்தை அதிகப்படுத்தும் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் உடன் காம்ரி ஹைப்ரீட் செடான் கார் கடந்த ஆண்டில் சர்வதேச சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட்களினால் புதிய டிசைனில் முன்பக்க பம்பர், புதிய அலாய் சக்கரங்கள் மற்றும் ரீடிசைனில் எல்இடி டெயில்லேம்ப்களை பெற்று வந்துள்ளது.

இந்தியாவில் அறிமுகமாக வரிசைக்கட்டி நிற்கும் செடான் கார்கள்!! ஸ்கோடா ஸ்லாவியா முதல் டொயோட்டா காம்ரி வரை...

உட்புறத்தில் அளவில் பெரிய 9.0 இன்ச் தொடுத்திரைக்கு ஹோண்டா சிட்டி அப்டேட் ஆக உள்ளது. அதேபோல் இன்ஃபோடெயின்மெண்ட் மென்பொருளும் அப்டேட் செய்யப்பட உள்ளது. இவை தவிர்த்த மற்ற இயந்திர பாகங்களில் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்காதீர்கள். சற்று அதிகமாக ரூ.40 லட்சம் வரையிலான விலைகளில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படும் காம்ரி ஃபேஸ்லிஃப்ட்டின் இந்திய அறிமுகத்தை 2022இன் மத்தியில் எதிர்பார்க்கிறோம்.

Most Read Articles
English summary
Upcoming sedans in India in 2022.
Story first published: Friday, November 5, 2021, 2:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X