ஹோண்டாவின் புதிய ஏசி ஃபில்டர் அறிமுகம்... இது என்ன எல்லாம் செய்யும் தெரிஞ்சா ஆச்சரியத்தில் உறைஞ்சுருவீங்க!!

பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் ஹோண்டா, புதிய ஏசி ஃபிலட்டர் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ஹோண்டாவின் புதிய ஏசி ஃபில்டர் அறிமுகம்... இது என்ன எல்லாம் செய்யும் தெரிஞ்சா ஆச்சரியத்தில் உறைஞ்சுருவீங்க!!

பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா மோட்டார் புதிய ஏசி ஃபில்டர் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஓர் நான்கு அடுக்குக் கொண்ட ஏசி ஃபில்டர் ஆகும். இதனைப் பிரத்யேகமாக வாகனங்களில் இருக்கும் ஏசிகளுக்காகவே நிறுவனம் வடிவமைத்திருக்கின்றது.

ஹோண்டாவின் புதிய ஏசி ஃபில்டர் அறிமுகம்... இது என்ன எல்லாம் செய்யும் தெரிஞ்சா ஆச்சரியத்தில் உறைஞ்சுருவீங்க!!

ஆகையால், வாகனங்களில் இருக்கும் ஏசிகளுக்கு மட்டுமே இதனைப் பயன்படுத்த முடியும். 100 சதவீதம் காற்றை வடிகட்டி, தூய்மைச் செய்வதே இந்த ஏசியின் முக்கிய பணியாகும். காற்றை தூய்மைச் செய்வது மட்டுமின்றி அதில் கலந்திருக்கும் கொடிய வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மையையும் இந்த ஃபில்டர் கொண்டிருக்கின்றது.

ஹோண்டாவின் புதிய ஏசி ஃபில்டர் அறிமுகம்... இது என்ன எல்லாம் செய்யும் தெரிஞ்சா ஆச்சரியத்தில் உறைஞ்சுருவீங்க!!

தன்னுடைய வாகன பயனர்களுக்கு பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்கும்நோக்கில் இந்த பாதுகாப்பான ஏசி ஃபில்டர்களை ஹோண்டா உருவாக்கியிருக்கின்றது. இந்த ஃபில்டரின் நான்கு அடுக்குகளில் முதல் இரு அடக்குகள் மிக நுண்ணிய (மைக்ரோ) துகள்களை வடிகட்டும் திறனைக் கொண்டிருக்கின்றது.

ஹோண்டாவின் புதிய ஏசி ஃபில்டர் அறிமுகம்... இது என்ன எல்லாம் செய்யும் தெரிஞ்சா ஆச்சரியத்தில் உறைஞ்சுருவீங்க!!

அதாவது, தூசி மற்றும் டஸ்ட்களை வடிகட்டும். அடுத்தபடியாக இருக்கும் அடுக்கு மரக்கரி தூளிலானது. நான்காவதாக பழசாறு வடிகட்டி அமைப்பு பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதுவே வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை வடிகட்ட உதவுகின்றது.

ஹோண்டாவின் புதிய ஏசி ஃபில்டர் அறிமுகம்... இது என்ன எல்லாம் செய்யும் தெரிஞ்சா ஆச்சரியத்தில் உறைஞ்சுருவீங்க!!

இத்தகைய சிறப்பு திறன்கள் கொண்ட ஏசி ஃபில்டரை ஹோண்டா தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக இந்த வடிகட்டியை ஐரோப்பிய சந்தையில் மட்டுமே நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. விரைவில் உலகின் பிற நாடுகளிலும் இந்த வடிகட்டியை நிறுவனம் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹோண்டாவின் புதிய ஏசி ஃபில்டர் அறிமுகம்... இது என்ன எல்லாம் செய்யும் தெரிஞ்சா ஆச்சரியத்தில் உறைஞ்சுருவீங்க!!

உலக நாடுகள் பல கொடிய வைரஸ் கொரோனாவின் கோர பிடியில் சிக்கி தவித்து வருவது குறிப்பிடத்தகுந்தது. இதுபோன்ற பேரிடர் காலத்தில் இதுமாதிரியான தொழில்நுட்பம் மக்களுக்கு பேருதவியாக இருக்கும்.

ஹோண்டாவின் புதிய ஏசி ஃபில்டர் அறிமுகம்... இது என்ன எல்லாம் செய்யும் தெரிஞ்சா ஆச்சரியத்தில் உறைஞ்சுருவீங்க!!

அதேசமயம், இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் ஒரு சில கார்களில் காற்றில் கலந்திருக்கும் வைரஸ் மற்றும் பாக்டீரியக்களை அழிக்கக் கூடிய ஏர் ஃபில்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பிரீமியம் தர கார்கள் பெரும்பாலானவற்றில் இந்த வசதி வழங்கப்பட்டு வருகின்றது.

ஹோண்டாவின் புதிய ஏசி ஃபில்டர் அறிமுகம்... இது என்ன எல்லாம் செய்யும் தெரிஞ்சா ஆச்சரியத்தில் உறைஞ்சுருவீங்க!!

ஹெபா (HEPA) எனும் வைரஸ் ஒழிப்பு காற்று வடிகட்டியை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அதன் இக்யூஎஸ் மின்சார செடான் காரில் ஆப்ஷனலாக வழங்க இருக்கின்றது. இதேபோன்று, டெஸ்லா மின்சார கார் இந்த வடிகட்டியை அதன் குறிப்பிட்ட விலையுயர்ந்த மாடல்கள் சிலவற்றில் வழங்கி வருகின்றது.

ஹோண்டாவின் புதிய ஏசி ஃபில்டர் அறிமுகம்... இது என்ன எல்லாம் செய்யும் தெரிஞ்சா ஆச்சரியத்தில் உறைஞ்சுருவீங்க!!

ஹோண்டா நிறுவனம் மிக விரைவில் சிட்டி ஹைபிரிட் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த கார் லிட்டர் ஒன்றிற்கு 27.8 கிமீ மைலேஜை வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹோண்டாவின் புதிய ஏசி ஃபில்டர் அறிமுகம்... இது என்ன எல்லாம் செய்யும் தெரிஞ்சா ஆச்சரியத்தில் உறைஞ்சுருவீங்க!!

இந்த காரில் எலெக்ட்ரிக் மோடில் வைத்து இயக்கும் ஆப்ஷன் வழங்கப்பட இருப்பதால், இந்தியர்களின் கவனத்தை சிட்டி ஹைபிரிட் வெர்ஷன் வெகுவாக ஈர்க்கத் தொடங்கியுள்ளது. இதுமட்டுமின்றி இந்தியர்களைக் கவர கணிசமான சிறப்பு ஆஃபர்களையும் நிறுவனம் அறிவித்து வருகின்றது.

Most Read Articles

மேலும்... #ஹோண்டா #honda
English summary
Honda Motor Introduces AC Filter That Kills All Kind Of Virus. Read In Tamil.
Story first published: Wednesday, March 17, 2021, 12:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X