புத்தம் புதிய 7 சீட்டர் எஸ்யூவி கான்செப்ட்டை அறிமுகப்படுத்தியது ஹோண்டா!

எல்லோரையும் திரும்பி பார்க்க வைக்கும் விதத்தில் புத்தம் புதிய 7 சீட்டர் எஸ்யூவி மாடலின் கான்செப்ட்டை ஹோண்டா நிறுவனம் இந்தோனேஷியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கான்செப்ட் மாடலின் படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

 புத்தம் புதிய 7 சீட்டர் எஸ்யூவி கான்செப்ட்டை அறிமுகப்படுத்தியது ஹோண்டா!

ஹோண்டாவின் புதிய 7 சீட்டர் எஸ்யூவி மாடல் N7X என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. இது கான்செப்ட் மாடலாக தெரிவிக்கப்பட்டாலும், தயாரிப்பு நிலைக்கு உரிய அம்சங்களுடன் இருக்கிறது. எனவே, கூடிய விரைவில் சந்தைக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்புள்ள எஸ்யூவி கான்செப்ட் மாடலாக குறிப்பிடலாம்.

 புத்தம் புதிய 7 சீட்டர் எஸ்யூவி கான்செப்ட்டை அறிமுகப்படுத்தியது ஹோண்டா!

பார்த்த மாத்திரத்திலேயே கவர்ந்து விடும் வகையில் மிக நேர்த்தியான டிசைன் அம்சங்களுடன் காட்சி தருகிறது ஹோண்டா என்7எக்ஸ் கான்செப்ட். இந்த எஸ்யூவியின் முகப்பு மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. வலிமையான பட்டைகளுடன் முகப்பு க்ரில் அமைப்பு, அதன் இருபுறத்திலும் ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள் இணைந்தாற்போல் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது.

 புத்தம் புதிய 7 சீட்டர் எஸ்யூவி கான்செப்ட்டை அறிமுகப்படுத்தியது ஹோண்டா!

வலிமையான பம்பர் அமைப்பு, C வடிவிலான எல்இடி பகல்நேர விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த எஸ்யூவியில் மல்டி ஸ்போக் அமைப்புடன் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்புறம் சற்றே தாழ்ந்து க்ராஸ்ஓவர் மாடலாக காட்சித் தருகிறது.

 புத்தம் புதிய 7 சீட்டர் எஸ்யூவி கான்செப்ட்டை அறிமுகப்படுத்தியது ஹோண்டா!

இந்த காரில் வலிமையான ஷோல்டர் லைன்கள் காரை பெரிதாகவும், வலிமையாகவும் காட்டுகிறது. பின்புறத்தில் இரண்டு அழகிய எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள் வசீகரிக்கின்றன. ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்டுகள், ரூஃப் ரெயில்கள், பாடி கிளாடிங் சட்டங்கள் உள்ளிட்ட பிற எஸ்யூவி ரக கார்களுக்குரிய ஆக்சஸெரீகளும் இடம்பெற்றுள்ளன.

 புத்தம் புதிய 7 சீட்டர் எஸ்யூவி கான்செப்ட்டை அறிமுகப்படுத்தியது ஹோண்டா!

இந்த காரில் இடம்பெற இருக்கும் எஞ்சின் தேர்வுகள் குறித்த விபரங்கள் இல்லை. ஆனால், ஹோண்டா சிட்டி காரில் வழங்கப்படும் 121 பிஎச்பி பவரையும், 145 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வு இந்த மாடலிலும் எதிர்பார்க்கப்படுகிறது. சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

 புத்தம் புதிய 7 சீட்டர் எஸ்யூவி கான்செப்ட்டை அறிமுகப்படுத்தியது ஹோண்டா!

புதிய ஹோண்டா என்7எக்ஸ் காரின் இன்டீரியரும் பொது பார்வைக்கு வெளியிடப்படவில்லை. எனினும், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் முக்கிய அம்சமாக இருக்கும். அத்துடன், 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் தேர்வுகளில் எதிர்பார்க்கலாம்.

 புத்தம் புதிய 7 சீட்டர் எஸ்யூவி கான்செப்ட்டை அறிமுகப்படுத்தியது ஹோண்டா!

புதிய ஹோண்டா என்7எக்ஸ் எஸ்யூவி முதலாவதாக இந்தோனேஷியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். டொயோட்டா ரஷ் மற்றும் மிட்சுபிஷி எக்ஸ்பேன்டர் ஆகிய மாடல்களுடன் அங்கு போட்டி போடும். இந்த கார் பிஆர்வி எஸ்யூவிக்கு மாற்றாக கொண்டு வரப்பட உள்ளது. இந்தியாவில் 7 சீட்டர் எஸ்யூவி மாடல்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருவதால், இந்த எஸ்யூவியை கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

Most Read Articles

English summary
Honda has unveiled the all-new Honda N7X 7 seater SUV concept in Indonesia.
Story first published: Monday, May 3, 2021, 18:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X